புத்தகத்தை திணித்து
பொதியாய் பையுடன்
குழந்தையை பேருந்தில்
திணித்து அனுப்புகிறாள் அம்மா...
அங்கே
கல்வியும் பொதியாய்
திணிக்கப்படுகிறது ...!
படிப்பும் இனிப்பாய்
புகுத்தாமல்
புரிய வைக்கும் போது ....
சமச்சீர் கல்வியால்
இது சாத்தியமாகட்டும்..!
கல்விக்கான சிறப்பு வலை
8 comments:
போதி சுமக்கும் குழந்தைகள் பார்க்க மனதிற்கு வருத்தமாக இருக்கும்..
சமசீர் கல்வி வந்தும் இன்னும் சீராகவில்லையே நண்பா.. காலம் அதனை நிறைவேற்றும் என நம்புவோம்
நல்லதொரு இடுகை, சரவணன்.
சமச்சீர் கல்வியில் பல குளறுபடிகள் இருப்பதாக பல பெற்றோர்கள் முறையிடுகிறார்கள். இன்னும் சில வருடங்களில் அவற்றை அரசாங்கம் சரி செய்து விடுமென்று நம்புவோம்.
உண்மையான வரிகள் நண்பா இதனால்தான் பல பிள்ளைகள் கல்வியை வெறுக்கிறார்கள் வெளிநாட்டவர் இப்படி நடந்து கொள்வதில்லை சுதந்திரமான கல்விமுறை பின்பற்றுவதால் திறந்த சிந்தையுடன் பிள்ளைகள் தேர்ச்சி அடைகிறது
//குழந்தையை பேருந்தில்
திணித்து அனுப்புகிறாள் அம்மா...
அங்கே
கல்வியும் பொதியாய்
திணிக்கப்படுகிறது ...!//
அழகா எழுதி இருக்கீங்க.
//படிப்பும் இனிப்பாய்
புகுத்தாமல்//
என்னை தாக்கிய வரிகள். சமச்சீர் கல்வி இன்னும் வரவில்லையா என்ன ?
ஒரு நகைச்சுவை சொல்கிறேன். கேள்விபட்டு இருக்கலாம்.
தாயும் தந்தையும் ஒரு அம்மி கல்லை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் தூக்கி வைக்க கடினப்பட.
UKG படிக்கும் குழந்தை வந்து தூக்கி வைத்து விட்டது.
பெற்றோருக்கு குழப்பம்.
குழந்தை ஒரு பஞ்ச் டயலாக் விட்டுச்சு பாருங்க
"என் பள்ளிக்கூட பையை விட இது லேசாதான் இருக்கு"
அவளவு கணம் கல்வி :-(
கல்வியும் பொதியாய்
திணிக்கப்படுகிறது
இன்றைய உண்மை நிலை சரவணன்
நல்ல பதிவு
"கல்வியும் பொதியாய்
திணிக்கப்படுகிறது ...!"
சரவணன் சார் சரியா சொன்னிங்க ...
சமச்சீர் கல்வி - இன்றைய சூழலில் சாத்தியமா தல?
மிக நல்லா சொன்னிங்க.... சரவணன்.
Post a Comment