Friday, July 2, 2010

பள்ளி இயங்கும் இடத்தை நல்ல விலைக்கு விற்பனைச் செய்ய முயற்சிக்கின்றன .

      கல்வி செய்தி ஒன்று பிரபலாமான நாளிதழில் வாசிக்க நேர்ந்தது.” தனியார் பள்ளிகள் வருமான இல்லையென்பதால், அவற்றின் அரசு அங்கிகாரத்தை ரத்து செய்து , பள்ளி இயங்கும் இடத்தை நல்ல விலைக்கு விற்பனைச் செய்ய முயற்சிக்கின்றன . மேலும் இவற்றிக்கு உடந்தையாக ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கைக்கு செல்லாமல் , பள்ளி மூட முயற்சிக்கின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு அரசு வேறு பள்ளிகளில் வேலைக்கு அனுப்பாமல் அரசு வேலை இல்லை என தெரிவிக்க ஆணை யிட வேண்டும் “ என்பது தான் செய்தியின் விசயம்.

1.  இன்று தனியார் கல்வி நிறுவனங்களில் தான் மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். அதிகம் படிக்கும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் அதிகம் என்பதால் , அனைவரின் கூட்டு முயற்சியிலும் , நிர்வாகத்தின் திறமையின் காரணமாகவும் ,வேன் ,பஸ் மூலமாக மாணவர்களை அதிகம் சேர்க்கின்றனர். ஆக, நல்ல தரத்துடன் (மாணவனுக்கு அதிக மதிப்பெண் பெற்றுத்தரும் கல்வி நிறுவனம்)பள்ளிகள் எந்த வித பிரச்சனையும் இன்றி மாணவன் அதிகம் சேர்ந்து, வருமானத்துடன் நல்ல நிலையில் இயங்குகின்றன.


2.  குறைந்த அளவு ஆசிரியர் எண்ணிக்கை கொண்ட தனியார் பள்ளிகள் தங்களை தக்க வைக்க போதிய மாணவர்கள் அந்த பகுதியில் இல்லாததாலும், அம்மாதிரியான தனியார் பள்ளிகள் வருமானம் பெருக வலியில்லாததாலும்,பஸ், வேன் வைத்து மாணவர்களை சேர்க்க முடிவதில்லை. ஆக , ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால்,ஆசிரியர்களும் சோர்வாகி , பள்ளியை இழுத்து மூடும் நிலைமையில் உள்ளது.

3. பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதால், அதாவது மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் 40:1 என்ற நிலமையில் மாணவர் எண்ணிக்கை குறைவதால், அதிகமாக உள்ள ஆசிரியர்கள் வேறு தனியார் பள்ளிகளுக்கு பணி மாறுதலில்செல்கின்றனர்.
இவ்வாறு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனக்கதையாகி பத்து குழந்தைகளைக் கொண்டு இயங்கும் பள்ளியாக மாறுகிறது. இந்நிலமையில் மூடுவதே மேல் என முடிவெடுக்கும் பள்ளி செயலர் பள்ளி இடம் அதிகம் விலை போவதால் விற்பனைச் செய்கின்றனர் என்பது தவறான கருத்தாகும்.


4. பத்து குழந்தைகள் இருந்தாலும் அரசு குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் கட்டாயம் வேலை வாய்ப்பு வழங்கி , பணி பாதுகாப்பு அடிப்படையில் மாத ஊதியம் வழங்க வேண்டியது உள்ளது. ஒருவருக்கு குறைந்தது பதினெட்டாயிரம் இருக்கும். பளி மூடுவதால் ,அந்த ஆசிரியர்கள் கூடுதலாக மாணவர்கள் உள்ள பள்ளிக்கு செல்கிறார்கள் அங்கு அதிக மாணவனுக்கு பாடம் கற்பிக்கின்றனர். மேலும் , மூடும் பள்ளி மாணவர்கள் பக்கத்து பள்ளியில் சேர்ந்து படிக்க செய்கின்றனர். இதானால் அரசுக்கும் லாபம், ஆசிரியரும் , மாணவ்ரும் பாதிக்கப்படுவதில்லை.


5. யாரே ஒருவர் சதியால் தவறான செய்தி வெளியிட்டுள்ளனர்.இன்று நகரமாதல் காரணமாகவும் இடத்தின் மதிப்பு அதிகரித்து உள்ளது . இக்காரணத்தினால் மட்டுமே ஒருவர் தன் பள்ளியை மூடுகிறார் என்பதும் தவறானப் பார்வை. அதற்காக பள்ளியே மூடிவிட்டது பின்பு எதற்கு ஆசிரியருக்கு வேலைவாய்ப்பு என்பது தவறான கருத்து .அப்பள்ளி எந்த அளவு இதற்கு முன்னால் சேவை செய்திருக்கும், இநத ஆசிரியர்கள் எவ்வளவு அற்பணிப்பு செய்து உழைத்து இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் .

6. அப்படி விலைக்கு விற்பனை நோக்கம் உள்ளவர் பள்ளியின் அங்கிகாரத்தை மட்டும் விற்பனை செய்யலாம், இடத்தை தனியாக விற்கலாம்.அல்லது பள்ளியினை இடமாறுதல் செய்து , இடத்தை விற்பனை செய்யலாம். நீண்ட நிறுவனத்தை மூட அவர் மனம் என்ன பாடுபட்டு இருக்கும். ..?மாற்று சிந்தனையுடன் செயல் படுவோம்.

7. இட பிரச்சனைக்காக ஆசிரியர்கள் வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம். அவர்களும் இந்த செய்தியை படித்து எவ்வளவு பதைத்து இருப்பர். இனியாவது கல்வி சம்பந்தமான விசயங்களை வெளியிடும் போது என் போன்ற விசயம் அறிந்த அல்லது தனியார் பள்ளி சட்ட விதியை அறிந்து செய்தி வெளியிடுவது நலம்.


8. கிராம மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளதால், அதாவது மக்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து இருப்பதாலும் , வீட்டிற்கு ஒரு குழந்தை மட்டுமே உள்ளதாலும், அதுவும் ஆங்கில வழிக்கல்வியை நாடுவதாலும் , பள்ளியில் மாணவர் சேர்க்கை மிகவும் றைவாகவே உள்ளது. அதுவும் தேய்பிறைச் சந்திரனைப்போல வருடம் வருடம் தேய்ந்த நிலமையில் உள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

      முடிவாக ஆசிரியர் மனம் நோகாமல் இருந்தால் தான் நாடும் வளம் பெறும் , சமூகமும் நலம் பெறும் , வீடும் , வீதியும் அமைதி தவழும் எனபதை சுட்டிக் காட்ட விருப்புகிறேன். அதேபோல் ஆசிரியரும் கெட்ட விசயங்களுக்கு துணைப்போகாமல் நம் பொறுப்பை உணர்ந்து செயல் படல், நமக்கும், சமூகத்திற்கும் நல்லது.  

6 comments:

hayyram said...

gud post. thanks

regards
ram

www.hayyram.blogspot.com

cheena (சீனா) said...

அன்பின் சரவண

ஆதங்கம் புரிகிறது - இம்மாதிரிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. இச்செய்திகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. சரியா

ஆசிரியப்பணியே அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி - என்பதனை வேத வாக்காகக் கொண்டு பனியாற்றும் ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களின் உழைப்பு வீனாகாது. சரவணன்

நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

Unknown said...

நல்ல சிந்தனை
வாழ்த்துக்கள்.

http://rkguru.blogspot.com/ said...

கல்விக்கண் மதுரை சரவணன் பதிவு வாழ்க...

neethi said...

nalla pathivu.good

Unknown said...

வந்த்ருகேன் நானும் ரொம்ம்ப நாளைக்கு அப்புறம்

Post a Comment