Thursday, July 22, 2010

மதுரையில் நைஜீரியா ராகவன் 4

   "எந்த இறப்பும் இறப்பல்ல, ஏனெனில் ஒவ்வொரு இறப்பும் ஒரு புதிய கதவை திறக்கிறது. அது ஒரு துவக்கம் , வாழ்க்கைக்கு முடிவு கிடையாது. எப்போதும் ஒரு புதிய துவக்கம் , ஓர் உயிர்த்தெழுதல் தான் உண்டு" -ஓசோவின் வார்த்தைகள்.

    
       வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வராமல் ஒரு புதிய துவக்கமாக ஒவொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்தால் ,ராகவன் மாதிரி மகிழ்ச்சியாக வாழலாம்.

   "ஆசை, கோபம், கனவு கொள்பவன், பேசத் தெரிந்த மிருகம்...அன்பு, நன்றி, கருணை ,  க௦கொண்டவன் , மனித வடிவில் தெய்வம் !"_ கண்ணதாசன் . ஆம். ராகவன் அன்பு, நன்றி கருணையின் வடிவமாய் மனித உருவில் கடவுளாக தெரிகிறார். தன்னை ஒரு அடையாளப்படுத்தும் விதமாக தன் பேச்சில் , செயலில் நடக்காமல் , கடவுளை போலவே  மர்மமாக நம்மை கவர்கிறார். 

          
       வாழ்வில் சுவை என்பது மிகவும் முக்கியம் . சுவையாக இல்லாமல் இருக்கும் எதையும் நாம் வாழ்வில் விரும்புவது இல்லை. உணவில் சுவை என்பது முக்கியம் . உப்பு , புளி , காரம் சரியான அளவு கலந்து இருக்க வேண்டும் . ஏதேனும் ஒன்று கூடினாலும் , குறைந்தாலும் நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. குப்பையிலே வீச வேண்டிய ஒன்றாகும்.

         "கனி இருப்ப காய் கவர்ந்தற்று". பேசுவது என்பது ஒரு கலை.அதுவும் இனிமையாக பேசுவது என்பது நமக்கு கிடைத்த அற்புதம். ராகவன் பத்து பேர் பேசினாலும் , தன் இனிமையான பேச்சால் நம்மை கவர்கிறார். நொடியில் நம்மை சிரிக்க வைத்து அசத்துகிறார் . அவர் இலக்கியம் பேசவில்லை , ஆனாலும் அவரின் பேச்சு இலக்கியமாகவே விளங்குவது அதிசயம்.


       தன் குலதெய்வத்தை பற்றி பேசுகிறார். எதார்த்தமாக இருக்கிறார் . பார்க்க வேண்டிய கோவிலின்  லிஸ்டுக்களை நமக்கு தந்து உதவுகிறார். பக்த்திமானாக தெரியாவிட்டாலும் பய பக்க்தியுடன் இருக்கிறார். ராகவன் ஒரு மதவாதியாக இருக்கிறார். ஆம்! செல்போன் மணியடித்ததும் பவ்வியமாக வெளியில் செல்லும் என்னை கலாய்கிறார். குரலின் பணிவு மனைவியின் பயம் என்று ...நானும் அப்படிதான் என்று அசர வைக்கிறார்.

            "அன்பின் கலையை அறியாத ஒரு மனிதனைத்தான் நான் பொருள் முதல் வாதி என்று அழைக்கிறேன். கடவுளை நம்புகிறவனை நான் மதவாதி என்று நினைக்க மாட்டேன். யார் தன்னுடைய நேசத்தில் , தன்னுடைய நம்பிக்கையுணர்வில் வளர்கிறானோ- தன்னுடைய ஆனந்தத்தை பிரபஞ்சம் முழுவதும் பரப்புகிறானோ-அவனையே நான் மதவாதி என்று அழைக்கிறேன்."-ஓஷோ .

       நைஜீரியாவில் இருந்து வந்து வழி நெடுகிலும் , தன் நம்பிக்கையான உணர்வில் , தன் நண்பர்கள், குடும்பத்தார், உற்றார், ஆசிரியர் மற்றும் நம்மை  போன்ற முகம் தெரியாத பிளாக்கர்களை  சந்தித்து , தன்னுடைய சந்தோசத்தை வெளிபடுத்துவதுடன் , மகிழ்ச்சியை பரப்பும் ராகவனை நானும் ஓஷோ பார்வையில் ஒரு மதவாதியாக தான் பார்க்கிறேன் .

      சோப்புக்  குமிழ்களை பார்ப்பது போன்று , பட்டம் பூச்சியின் பறக்கும் அழகைப்  போன்று , விரிந்து மலர காத்திருக்கும் மொட்டுக்களை பார்த்து ரசிப்பது போன்று தருமி , கார்த்திகை பாண்டியன் , ஸ்ரீ , தேனீ சுந்தர், பாலா , ஜெர்ரி, சீன , மெய்யம்மையார் ஆகியோருடன் நானும் ராகவனை ரசித்தேன்.

        அரவிந்த் மகா புத்திசாலி . அது என்ன மகா  புத்திசாலி ..? ஆமாம் , ராகவன் ஒரு போட்டவை ப்ரி வியுவ் செய்து இது புத்தரா ?மாகா வீரரா...? என்ற சந்தேகத்தை கிளப்பியவுடன். அனைவரும் திகைத்து புத்தராகத்  தான் இருக்கும் என விவரிக்கும் முனே , இது புத்தா தான் ..மகாவீரர் தலையில் கர்வுகள் இருக்கும் என்றவனை நான் அப்படிதான் அழைக்க முடியும் ..! சிறந்த அறிவாளி.

       தன் அடுத்த  பயணம் குறித்து பேசும் போது ...அது அரவிந்த் தான் எங்கள் கைடு . அவன் தான் எங்களை வழிநடத்துவான் என்று ஆச்சரிய படுத்துகிறார். நீ பிறந்தாய் , வாழ்ந்தாய், இறந்தாய்- ஆனால் நீ தவற விட்டுவிட்டாய் . நீ மிக பெரியதை இழந்து விட்டாய் என்ற நினைப்பு வாராமல் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் வாழ்கிறார்.


   " பேசுவதற்குத் தகுதியானவர் என்று தெரிந்தும் , பேசாமல் இருந்து விட்டால் நீ ஒரு நல்ல மனிதரை இழந்து விடுகிறாய். பேசுவதற்குத் தகுதியற்றவர் என்று புரிந்தும் நீ பேசிவிட்டால் , உன் வார்த்தையை இழந்து விடுகிறாய். அறிவுள்ளவன் மனிதர்களையும் இழப்பதில்லை; வார்த்தைகளையும் இழப்பதில்லை !" -கன்ஃபூஷியஸ்.

       நான் என் வார்த்தைகளையும் இழக்கவில்லை, ராகவன் போன்ற நல்ல நண்பர்களையும் இழக்க விரும்பவில்லை ...ஆகவே பதிவு தொடரும்...        

7 comments:

'பரிவை' சே.குமார் said...

உங்கள் சந்திப்பை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி நண்பரே.... ஆனால் நீங்க புகழ்ந்து சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லீங்க... நண்பர்களை நண்பராக பார்க்கின்றேன்... அதை இவ்வளவு புகழ்ச்சியாக சொல்லுகின்றேன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல பகிர்வு.. மீண்டும் நன்றி.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள் :-))

ஸ்ரீ.... said...

//சோப்புக் குமிழ்களை பார்ப்பது போன்று , பட்டம் பூச்சியின் பறக்கும் அழகைப் போன்று , விரிந்து மலர காத்திருக்கும் மொட்டுக்களை பார்த்து ரசிப்பது போன்று தருமி , கார்த்திகை பாண்டியன் , ஸ்ரீ , தேனீ சுந்தர், பாலா , ஜெர்ரி, சீன , மெய்யம்மையார் ஆகியோருடன் நானும் ராகவனை ரசித்தேன்.//

நன்றி சரவணன்.

ஸ்ரீ....

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))))))

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

அருமை அருமை - சின்னச் சின்ன நிகழ்வுகளை எல்லாம் நினைவில் வைத்திருந்து இடுகையாக இடும் விதம் நன்று

நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

Post a Comment