Wednesday, March 10, 2010

8டாத அறிவு ..

வால் பையன்

(திருமணத்திற்கு பின் மூன்று நண்பர்கள் சந்தித்து கொண்டனர்.)

"உங்க பையன் தங்கம்ன்னா ..என் பையன் படு சுட்டி ..பெரிய வாலுன்னா பார்த்துக்கங்களேன்  .. "

"தங்கம்ன்னா...சுத்த தங்கமா ...இல்லை...?"

"உனக்கு எப்பவும் கேலி தான் ...தங்கத்தில்ல..என்னப்பா சுத்தம் ..அது இதுன்னு ...?"

"இருக்கே ..24 காரட்டா...? 22 காரட்டா  ..?"

"நிறுத்துப்பா...அது என்ன ..காரட்டு ...கத்திரிக்காய்ன்னு ..."

"தங்கத்தையும் வைரத்தையும் ...'காரட்'என்ற அலகால் மதிப்பிடுகிறோம்...'காரட்' என்பது 200மில்லி  கிராமுக்கு சமமானது..."
  
"அப்ப ... இந்த 24 காரட்...?"

"அவசரப் படாதிங்க ....சொல்லுகிறேன்..."

"ம்ம்ம்ம்"

"வேறு உலோக கலப்பில்லாத தங்கம் ...சுத்தமான தங்கம் ...அது 24 காரட் ..22 காரட்டுன்றது ...22 பாகம் தங்கம் 2 பாகம் தாமிரம் கலந்தது...."

"அப்ப 18 காரட்டுன்னா ...18 பாகம் தங்கம் 6 பாகம் தாமிரம் அப்படிதானே ..." என வாலு பையனின் அப்பா கூற ...

"கரக்ட்டு ..."

"அது சரி ..தங்கத்துக்கு விளக்கம் சொன்னியே ....வாலுக்கு ...விளக்கம் சொல்லு ...பார்ப்போம்.?"என தங்கமான பையனின் தந்தை

"மனிதனுக்கு வால் இருந்ததன்  அடையாளம் ...முதுகெலும்பின் கடைசியில் உள்ள நான்கு எலும்புகள் ...அது தான் 'காக்சி '...இது பிராணிகளின் வால் பகுதியின் ஆரம்பத்திலுள்ள எலும்புகள் போன்றே... தோன்றும்..."

"அப்படியா..?"

"என்ன இது போதுமா..இல்லைன்னா..ராமகிருஷ்னர் சொன்ன ஆன்மிக விஷயத்தை சொல்லனுமா...?"

"என்ன அது ஆன்மிக அறிவியல் விஷயம்...?"

"1985 ல் பிரம சமாஜ தலைவர் ..கேசவ சந்திர சென் ..னை காண தன் சீடர்களுடன் சென்றார்...கேசவரின் ஆன்மீக சாதனைகளை பார்த்து ...வியந்தார். பின்பு...பக்தி  பாடல்களை பாடி கொண்டே ..ராமகிருஷ்ணர் ...சமாதி நிலை அடைந்தார்..."

"அப்புறம்..."

"அதை சென்னின் ஆட்கள் கேலி செய்தனர்..ராம கிருஷ்ணருக்கு பைத்தியம் பிடித்து விட்டது...என்று கூறினார்."

"ராமகிருஷ்ணரின் சீடர்கள் என்ன செய்தனர்...?"

"சீடர்..ஹிருதயர்...பிரணவ மந்திரத்தை ..சொல்ல ..புற நினைவு திரும்பினார்..அவரை கேலி செய்தவர்களை பார்த்து ...'உங்கள் வால் விழுந்து விட்டது ' என்றார் "

"அது என்ன வால் விழுந்து விட்டது...?"

"அவரே ..விளக்கமும் தந்தார்...'வால் இருக்கும் வரை தவளை நீரில் மட்டுமே வாழ முடியும் ...நிலத்திற்கு வர முடியாது... வால் விழுந்த பின் நிரிலும் நிலத்திலும் அந்த தவளையால் வாழ முடியும் ...அது போல மனிதனின் அறியாமை வால் விழுந்த பின் ..உலகவியல் வாழ்க்கை  என்னும் நீரில் மட்டுமின்றி ..சச்சிதானந்த பேருலகிலும் வாழ முடியும் ..எனக் கூறினார்'."

"நீ நிறைய விஷயம் தெரிந்து வைத்திருக்க.. இப்ப நான் உன்னை ஒரு கேள்வி கேட்கவா ...?"என வால் பையன் அப்பா  கேட்க...

"ம்ம்ம் தாராளமா ..."

"முனிவர்கள் ..ஏன் புலி தோல் மீது உட்காந்து இருக்காங்க ...?"

"தெரியலியே...தெரிஞ்சா ...சொல்லேன் ...தெரிஞ்சுக்கிறேன்  ..."

"அதுவா..புலி மேல உட்கார்ந்தா..புலி கடிச்சிடும்....அதுனால தான் புலி தோல் மேல உட்கார்ந்து இருக்காங்க ..."

"!!!"( மனதுக்குள்ளே...உன் பையன் மட்டும் வாலு இல்ல ...நீயும் தான் அதுவும் ஒரு சரியான வாலு ..)

4 comments:

நேசமித்ரன் said...

aaahaaa

:)

பத்மா said...

சூப்பர் சரவணன்

மதுரை சரவணன் said...

நேசமித்ரன்,பத்மா மற்றும் வருகை புரிந்துள்ள அனைவருக்கும் நன்றி. உங்கள் ஊற்சாகம் ,என் எழுத்தை செம்மை படுத்துவதற்க்கு உதவுகிறது. மிக்க நன்றி.

இளந்தென்றல் said...

மிகவும் பயனுள்ள விளக்கம். அருமை சரவணன். எனக்கு பிடித்த பத்து பெண்கள் தொடர்பதிவில் எழுத உங்களை அழைத்திருக்கிறேன், அதிலும் பயனுள்ள விஷயங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்...

Post a Comment