Wednesday, March 3, 2010

8 ட்டாவது அறிவு

"என்ன ராமசாமி ...?வீட்டில யாரும் இல்லையா...?"

"வாப்பா..ரங்கசாமி ...உங்க அண்ணி ...அவுங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா...இன்னைக்கு சமையல் நான் தான்..."

"அடிக்கடி வெளிநாடு போறீங்களே...ஏதாவது புது விஷயம் இருக்கா...?"

"போன தடவ...நான் மலேசியா போயிட்டு வந்தப்ப.... நீ பக்கத்தில கூட வரல ...?"

"நீங்கள் ...முக்கில முகமுடி அணிந்து வந்ததா...சொன்னாங்க....எல்லாம் 'சார்ஸ் ' பயம் தான்.."

"அதுசரி ...,மூக்க பொத்தினா வரமாட்டீங்க...இப்ப முகமுடி இல்ல...சார்ஸ் பயம் போயிடுச்சா... ?"

"அது கிடக்கட்டும்...ராமா ..இப்ப இ.மெயில் அனுப்பும் போது ...வாசனையும் .சேர்ந்து அனுப்பலாம்...ன்னு  ...கண்டுபிடுச்சுருக்காங்கலாம் ...?"

"அது இன்னும் மார்கெட்டிங்  பண்ணல  ...வந்ததும் வாங்கிர வேண்டியது தான் ...இந்த முறை..நான் ரோம் நகரம் சென்றேன்..."

"என்ன விசேசம் ....?"

"ரோம் பல்கலை கழகத்திலுள்ள அறிஞ்ர்கள் சோதனை அடிபடையில ...புதிய மின்னணு மூக்கு கண்டு பிடுச்சுருக்காங்கலாம் ..."

"அப்படியா...? அப்ப அத வச்சு ..வாசனையை அறியலாம...?"

"அது வாசனையை கண்டுபிடிக்க இல்லை ...ஒருவனுக்கு புற்று நோய் இருக்கா...இல்லையா ன்னு ...கண்டுபிடிக்க உதவும்...."

"எப்படி ...முடியும்...?"

"ஒருவர் வெளிவிடுகிற மூச்சுல ....உள்ள பென்ஷின் அளவை வச்சு ...நுரையீரல் புற்று நோய் இருக்க இல்லையான்னு ..உறுதி செய்யலாம் ...அறுபது பேருக்கு ...சோதனை செஞ்சதிலா ...முப்பத்தைந்து பேருக்கு பாதிப்பு இருந்ததாக உறுதி செய்தது...."

"அப்ப அடுத்த கட்டமாக ...உள்ள உறுப்புகளில் கட்டி வந்தா..அறியும் சாதனத்தை கண்ண்டுபிடிப்பாங்க...?"

"ஆமாம் ....இந்த மின்னணு மூக்கு ....எட்டு வகையான நுகர் உணர்வு ஆற்றலை கொண்டுள்ளது..."

"அது சரி ...உங்க மூ க்க பத்தி என்ன நினைக்கிறீங்க ...?"

"ஏன் மூக்குக்கு என்ன குறைச்சல் ...?

"நீங்க அடுப்பில சாம்பார் வச்சது ...தீஞ்சு போயி ..வாசனை அடிக்கிறது தெரியலையா...? நானும் வந்ததுல இருந்து சொல்லனும்னு நினைக்கிறேன்..."

"!!!!"

  ட்டாவது அறிவு 

6 comments:

புலவன் புலிகேசி said...

சூப்பர்...

settaikkaran said...

அண்ணே, தினமும் தீய்ஞ்சு போன சாம்பார் சாப்பிடறவருக்குப் பழகிப்போயிரும்; புதுசா வந்தவங்களுக்குத் தான் சட்டுன்னு தெரியும்! :-))

சைவகொத்துப்பரோட்டா said...

தகவலுக்கு நன்றி சரவணன்.

Anonymous said...

kadisila kavuthiddinka


suparu

Kandumany Veluppillai Rudra said...

"இன்று ஒரு தகவல்" ,அருமை!

மதுரை சரவணன் said...

உருத்திரா,புலவன் புலிகேசி,சைவகொத்துபுரோட்டா,அ.சிவசங்கர்,சேட்டைக்காரன் என அனைவருக்கும் தொடர்ந்து வருகைக்கு நன்றி! என்னை ஊக்கப் படுத்தும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

Post a Comment