Monday, March 1, 2010

8டாத அறிவு ..

       வீட்டை கட்டி பார். ...

"வீட்டை கட்டி பார் ...கல்யாணம் பண்ணி பார்ன்னு ...சும்மாவா ...சொன்னாங்க ...."

"என்ன முனங்கி கிட்டே நடகிரீங்க  ... "

"இல்லைப்பா ...வீடு  கட்டணும்ன்னு  முடிவு  பண்ணி ..லோனுக்கு  ...அப்பளை  பண்ணினேன் ...அத கொடு ..இதை கொடுன்னு..."

"அப்புறம் கேட்காம  என்ன செய்வான் ...?"

"இல்லப்பா ...எல்லாத்தையும்  ரெடி  பண்ணீட்டேன் ....இப்ப  இந்த பேங்கில  வாங்கிறதுனுதான் ..."

"வட்டி   சதவீதம் ....வர வர ....எல்லா ...பேங்கிலையும் குறைத்து கொண்டு வராங்க...இந்த பென்குன்னு முடிவு பண்ணாமலே ...வரி ரசிது...பட்டா..சிட்டா...அடங்கல்...வீடு லேஅவுட்டு ன்னு ...எல்லாம் ரெடி பண்ணீட்டீங்களா..."

"இருக்கிற பணத்துல பேஷ் மட்டம் மட்டும் தான் போட முடியும் போல இருக்கு ...அதுனால பேங்கு லோனுக்கு அலைய வேண்டியிருக்கு   ... உனக்கு என்ன தெரியும் ?"

"இது எல்லாத்துக்கும் முன்னாடி ...வீடு கட்டுற இடத்தைதான் ...தேர்ந்தெடுக்கணும்...புத்திசாலியா...இருக்கணும்..."

"என்ன சொல்லுற...?"

"ஆமா...மலைசரிவு...ஆற்றங்கரை அருகில் வீடு கட்ட கூடாது ....தண்ணீர் வற்றாது...அதுபோல..காய்ந்த இலை ,உடல் சிதைவு படிந்த இடங்களிலா...வீடு கட்டினா..நாளடைவில் ....அடித்தளம் பள்ளம் விழுந்திடும்..."

"அப்ப நிலம் எப்படி தான் இருக்க வேண்டும்..?"

"நீங்க வீடு கட்ட போற இடத்தில...ஒரு மீட்டர் நீள..அகலத்தில...ஆழமா..குழி வெட்டி ...அதுல தண்ணீர் ஊற்றி பாருங்க..."

"தண்ணீர் ஊற்றி ...?"

"மறுநாள் பார்த்தா...தண்ணீர் வற்றாம ...இருந்தா ..கெட்டியான தரைன்னு அர்த்தம்  ...அங்க வீடு கட்டலாம் .பாதி தண்ணி இருந்தா..சுமாரான தரைன்னு அர்த்தம் ...அது மட்டுமில்ல நீர் ஊற்று இருக்கான்னு பார்க்கணும்..."

"ஏன்...?"

"ஐந்து ஆறு மீட்டர்ல ...நீர் ஊற்று இருந்தா...தரை ..ஈரம் அடிக்கும்...பழு, பூச்சி எளிதுல அண்டும் ..."

"நீ சொல்லுறத  பார்த்தா வீடு கட்டுறதுகுள்ள...ஏன் தலையே சுற்றி விடும் போல இருக்கு..."

"கவலை படாதீங்க ...காதுல ஒரு திரவம் சுரக்குது...அந்த திரவம் ...நம்ம உடலை சமநிலை படுத்திடும் ...பிரபு தேவா...மாதிரி தலைகீழ ...ஆடினாலும் நம்ம உடம்ப சமநிலை படுத்தும்...தலை சுற்றினாலும் பரவாயில்லை ...கட்டிற இடம் முக்கியம்..."

"நீயும் கொஞ்சம் விவரமான ஆளா தான் இருக்க ...எதுக்கும் ..நான் (மெதுவாக..) காதும் காதும் வச்ச மாதிரி ...இன்னைக்கே போயி ..தரை எப்படி இருக்கு ன்னு ...தண்ணி ஊற்றி பார்த்திடுறேன்..."

"அது சரி ...எதுவானாலும் ...இந்த காது பக்கம் வந்து சொல்லுங்க....ஏன் எதோ சொல்லுறேன்னு...அந்த பக்கம் நகந்தீங்க..."

"!!!!!!"  
 

9 comments:

Kandumany Veluppillai Rudra said...

வாஸ்து மாதியும் இருக்கு,நவீன விஞ்ஞானம் மாதிரியும் இருக்கு , மொத்தத்தில் நல்லாவே இருக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கருத்துள்ள கதை; வீடு கட்டுறதுல இவ்வளவு விசயம் இருக்கா...

நீச்சல்காரன் said...

நல்ல கதை

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான வலை பதிவு கல்வி சார்ந்த வலைபதிவு குறைவாக இருக்கும்
நேரத்தில் உங்கள் ப்ளாக் சிறப்பான சேவை செய்கிறது வாழ்த்துக்கள்

Rekha raghavan said...

கருத்துக்களை கதை போகிற போக்கில் சொன்னது புதுமை.

ரேகா ராகவன்.

Jackiesekar said...

நல்ல விளக்கம் மதுரை சரவணன்..நல்ல பகிர்வு...

மதுரை சரவணன் said...

ஜாக்கி சேகர்,கல்யாணரமன் ராகவன்,உருத்ரா,அரும்பவுர்,நீச்சல்காரன்,ஸ்டார்சன் ஆகியோருக்கு நன்றி. என்றும் ஆதரவு தரும் அனைவருக்கும் மிக்க நன்றி.

பனித்துளி சங்கர் said...

அப்படியா விசயம் !. பகிர்வுக்கு நன்றி நண்பரே

Paleo God said...

நிறைய சொல்ல வந்து கொஞ்சமா நிப்பாட்டிட்டீங்களோ?? :)) நல்ல பதிவு.:)

Post a Comment