Tuesday, June 29, 2010

மதம் சரியா..? தப்பா..?

   கடவுள் தோன்றுவார் என்பது உண்மை . கடவுள் கடவுளாக தோன்றமாட்டார் , மனிதனாக தான் தோன்றுவார் என்பதும் மறுக்கப்படாத உண்மை. ஆகவே தான் கடவுள் மனித உருவில்  யேசுவாகவும் , நபிகளாகவும் ஓளவையுடன் பேசும் முருகனாகவும் நமக்கு காட்சி தந்துள்ளார்.


      மதங்கள் போதிப்பது மனித நேயம் மட்டுமே என்பதுடன் இருந்து விட முடியாது , அவை அந்த நாட்டின் கலாச்சார பிரதிலபளிப்பாகவே இருந்து வந்துள்ளது. ஆகவே தான் அவைகள் உலகமனைத்திற்கும் பொதுவானதாகவும் இருந்ததில்லை.
      தருமி அய்யா சொல்வது போல் நம் ஊர் முருகன் பிற ஊர்களுக்கு பரவாமல் இருந்ததும் காரணமாகும்.
     காலப் போக்கில் தமிழன் தன் தேவைகளுக்காக குடி பெயரும் போது ,தன் காலாச்சார பிரதிபலிப்பாக தன் அடையாளங்களுக்காக தன் மதத்தையும் எடுத்து சென்றுள்ளான். அதன் வெளிப்பாடே சிங்கப்பூர் முருகன் கோவில் .இது போன்று தற்போது பல .

 பிற நாட்டவர்கள் காலனி ஆதிக்கத்தினை விரிவு செய்ய , பொருளாதார சந்தைகளை பெருக்க ,அதிகாரத்துடன் , தன் கலாச்சாரத்தை பரப்பும் மதத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள்.  
      மதம் ஒரு பலமான ஆயுதம் . தன் காலனி ஆதிக்கத்தினை  அதிகாரத்தால் மட்டும் பலப்படுத்த முடியாது என்பதால் , மதத்தை பரப்பி பாமர மக்களின் ஆதரவினை நாடினான். ஒவ்வொரு படையெடுப்பிலும் இனம், மொழி , கலாச்சார வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் எந்த நாட்டுடன் போர் தொடுத்தாலும் கோவில்களை தான் அழித்தார்கள்.முஸ்லிம் படையெடுப்பில் சோமநாதபுரம் கோவில் பலமுறை தாக்கப்பட்டுள்ளது.

    எந்த புரச்சிக்கும்  ஆரம்பபுள்ளி மதத்தின் பின் புலத்தில் தான் உதயமாகும். மனிதனை பக்குவபடுத்துவது மதமும் ,மதம் சார்ந்த உணர்வும் ஆகும்.மதம்  தாண்டிய சிந்தனை தான் நாத்திகத்தின் அடிப்படை என்பது பொய்யான கருத்து. மதத்தின் ஆழமான அறிவு தான் கடவுள் இல்லாமை.  தானே கடவுளாக உணரப்படுவதால்  வந்த உண்மை. நாத்திகம் பேசுபவர்கள் ஏதாவது ஒரு உருவில் வந்திருந்தாலோ, அவர்களும் இதுவும் ஒரு மதம் என்று சொல்லிருந்தாலோ அவர்கள் கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் என்பதும் மறுக்கப்படாத உண்மை.


     புத்தன் ஞானமடைந்ததால், புத்தமதம் தோன்றியது. பெரியாரும் ஞானமடைந்ததால்
நாத்திகம் தோன்றியதாகவே என் சிற்றறிவிற்க்குப் படுகிறது. பகுத்து பார்க்கும் தன்மை மதத்திற்கான அடையாளம். எந்த மதமானாலும் நல்லது , தீயது என பிரித்துப் பார்க்கும் தன்மை உண்டு. ஒவ்வொரு செயலும் ஒரு மதக்கருத்தை வலியுறுத்தும். அச்செயலின் விளைவையும் எடுத்துச் சொல்லும் . அதற்கு பாவம் , புண்ணியம் என்று பெயரிட்டு அழைக்கும். நாத்திகம் அதனை எல்லாம் மனித செயலின் விளைவால் நிகழ்பவை , இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என எடுத்து இயம்பும். எதுவாகினும் செயலின் விளைவே நம் உலகத்தினை ஆட்டிப் படைக்கின்றன.


        மரத்தின் மேலிருந்து விழுந்த பழம் தான் நியூட்டனின் புவியிர்ப்பு விசையினை கண்டுபிடிக்க உதவியது. ஆகவே, விஞ்ஞான ரீதியாக பார்த்தால் ஒவ்வோரு செயலுக்கும் காரணக்காரியங்கள் உண்டு.அதுபோல் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பது போல் , மதம் அதனை பாவம் , புண்ணியம் என்பதைக் கொண்டு பிரித்து, சாரி பகுத்துப் பார்க்கிறது.

      அது சரி , செய்வினை, பாவம் நிவர்த்தி செய்ய பரிகாரம் என்பதெல்லாம் உங்கள் அறிவியல் விளக்குமா என்றால் அதையும் விளக்கும். ஒரு பொருளை நகர்த்த நாம் நெம்புகோல் பயன் படுத்துகிறோம் . அதுவே , பொருள் உயரத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், என்னத்தான் கடப்பாறை கொண்டு நகர்த்தி வாந்தாலும், பொருளை கீழே கொண்டு வர நான்கு பேர் தேவை.அது தான் கஷ்டகாலம் . மதம் இந்த தருணத்தை தான் உனக்கு கிரகம் பிடித்துஇருக்கிறது, பரிகாரம் தேவை என்கிறது.

    அறிவியலில் இதற்கு பரிகாரம் , சாய்தள அமைப்பு பொருளை மேலே எளிதாக ஏற்றவும், இறக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது. அது போலத் தான் பரிகாரம் உருவாக்கப்பட்டது. நம் ஆன்மா துன்பத்திலிருந்து விடுபட , கஷ்டத்தைப் போக்க சில நியதிகளை உருவாக்கி கொண்டுள்ளது.


      அதுபோல் மதங்கள் தம்மை பிற மண்ணில் பரப்பினாலும் அவை அந்த மண்ணின் அடையாளங்களையும் தம்முள் உள் வாங்கி கொண்டுள்ளன. இன்று மாதக்கோவில் சப்பிரம் வலம் வருவதும் , கிறிஸ்துமஸ் மாத இரவுகளில் கேரல் என்பதும் நம் நாட்டின் தேரோட்டம் , பஜனை போல் உருவானது தான், முஸ்லிம்களின் சந்தனக்கூடு திருவிழாவும் நம் தேரோட்டத்தையே நினைவுபடுத்துகின்றன.  

      மதம் எவ்வாறு பரிமாணம் பெற்றுள்ளதோ அதேப்போன்று நத்திகமும் உருமாறி திராவிடத்தின் வெளிபாட்டில் , கட்சிகளாக அடையாளம் காணப்பட்டு , நாட்டை ஆளுகின்றன. இன்றும் நாட்டை ஆளுகின்றன். ஆக மதம் என்றும் நாட்டை ஆளும் தன்மையை இழக்கவில்லை. மதம் மண்ணின் தன்மைக்கு எற்ப உருமாறிக் கொண்டே உள்ளது.அது இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், புத்தம் என்று மாறியது போல் , நாத்திகமாகவும் உள்ளது.

     என்ன அப்படி பார்க்கிறீர்கள்...! இன்று காலை தருமி அய்யாவை சந்தித்ததன் விளைவு
என்று நம்புகிறேன். என் கருத்தில் எனக்கு மட்டும் உடன்பாடு உண்டு. மறுப்பு இருப்பின் வெளிபடுத்தலாம் ஆனால் புண்படும் படியாக இல்லாமல் இருந்தால் நலமாக இருக்கும்.
அதுசரி மதம் சரியா..? தப்பா..?கடவுள் என்பவர் உண்டா ..? இல்லையா...? கடவுள் தோன்றூவாரா...? மீண்டும் தலைப்பிலிருந்து வாசிக்கவும். உண்மை ஒருவேளை புலப்படும் .

 

    
    

8 comments:

Ramesh said...

http://sidaralkal.blogspot.com/2010/06/blog-post_2762.html
இந்தப்பதிவு ஏதாவது சொல்கிறதா என்று பாருங்க சரவணன்

Unknown said...

நல்ல பதிவு நண்பா ஆனால் நித்தியானந்தா? mullaimukaam.blogspot.com

ஹேமா said...

நல்ல மனம் கொண்ட மனிதர்களே கட‌வுள்.
மதம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதே மதம்.
நல்லதொரு பதிவு.

AkashSankar said...

ம்...யோசிக்க வேண்டிய விஷயம் தான்...

Anonymous said...

JKR said... நல்ல பதிவு நண்பா ஆனால் நித்தியானந்தா?

jkr எல்லா இடங்களிலும் ஒரு கருப்பு ஆடு இருக்கும் இல்லையா அது போல் தான் இவனும் ..சரவணன் சார் கடவுள் இருக்குஎன்று நான் நம்பறேன் ...மதம் எல்லாம் நாம பிறகரதுக்கு முன்னாடியே இருந்து வந்நது தான் ..

கொல்லான் said...

//மதம் மண்ணின் தன்மைக்கு எற்ப உருமாறிக் கொண்டே உள்ளது.அது இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், புத்தம் என்று மாறியது போல் , நாத்திகமாகவும் உள்ளது.//

சரியான கருத்து.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால், பலருக்கு நன்றாகப் புரியும்.

ஸ்ரீராம். said...

கடவுள் என்பவர் உண்டா ..? இல்லையா...? கடவுள் தோன்றூவாரா..."//

இந்தக் கேள்விதானேங்க ஆண்டாண்டு காலமா தொடர்வது...?!! கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர்...

Vijay said...

அருமையான பகிர்வு. என் எண்ணங்கள் அனைத்தையும் உங்கள் எழுத்து பிரதிபலிக்கிறது.

Post a Comment