Wednesday, June 30, 2010

எல்லாம் ஆசிரியர்கையில் ...

        இன்று என்னுடைய நண்பர் மற்றும் தலைமை ஆசிரியரான திரு அருணாச்சலம் என்கிற அருணாவை பார்த்தேன் . அருணா சிறந்த முற்போக்கு வாதி மற்றும் சீர்திருத்த வாதியும் ஆவார்.

       அவர் சொந்த பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பதால் கல்வி சம்பந்தமான புதுமைகளை புகுத்துவதில் அக்கறை அதிகம் கொண்டவர் மற்றும் மாணவர் நலனுக்காக உடனடி நடவடிக்கைகளை செய்து முடிப்பவர். அதனால் தான் அவரின் நடுநிலைப்பள்ளியில்  ,இன்று உள்ள சூழ்நிலையில் எந்தவிதமான வாகன உதவியும் இன்றி , முப்பதற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை பார்கிறார்கள். இது அவருக்கு சாரும் பெருமை. மற்றும் அவரின் தாயார் அதே பள்ளியில் தமிழக அரசின் நல்லாசிரியராக விருது பெற்று  ஓய்வு பெற்றவர்.


      காலை நான் புதிதாக உருவாக்கி உள்ள குரல் பதிவு செய்யப்பட்ட குறுந்தகட்டை  கொண்டு சென்று கொடுத்தேன். தமிழ் மீதும் சமச்சீர் கல்வி மீதும் பேச்சு சென்றது.
அப்போது அவர் எழுப்பிய கேள்விகள்.இதோ உங்கள் முன் .....
m
1. சமச்சீர் கல்வி என்று சொல்லுவதே தவறு. இது எப்படி இருக்கிறது என்றால் மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றுவதாகவே உள்ளது .  நானும் உங்களை போல எப்படி..? இன்று அனைவருக்கும் சமமான சீரான கல்வியை அரசு தர முன் வந்துள்ளது என்பது இதுவரை  அரசு சமமில்லாத சீரற்ற கல்வியை தமிழகத்தில் தந்துள்ளதாக ஒத்துக் கொள்வது. அது மட்டுமல்ல இது ஆசிரியர்கள், கல்வி சிந்தனையாளர்கள் இதுவரை அனைவருக்குக் தரமில்லாத கல்வி முறையினை தத்துள்ளதாக ஒப்புக்கொள்வதாகும். ஆசிரியர்களான நம்மால் ஏன் தமிழ் வழிக் கல்வி முறையில்  தரமான கல்வியை தரமுடியாது...?அல்லது தரவில்லையா..?.நாம் உருவாக்கியவர்கள் தான் இன்று வரை     நம்மை தெளிவாக ஆட்சி  செய்துள்ளனர். செய்கின்றனர். அப்துல் கலாம் என்று சுட்டி காட்டவில்லை. என் பள்ளியில் படித்த மாணவன் என் ஆசிரியர். அதுவும் திறமை மிக்க ஆசிரியர். என்னுடன் தமிழ் வழிக்கல்வியில் படித்தவன் மாநகராட்சி பணியாளர், என் கல்லூரி நண்பன் தமிழ் வழியில் படித்தவன் மாவட்ட நிர்வாகி.எப்படி எல்லாத் துறைகளிலும் வந்துள்ளான். ஆகவே வகுக்கும் திட்டத்தில் இல்லை, அத்திட்டத்திற்க்கான வார்த்தைகளில் இல்லை . படிப்பு கல்வியை பொறுத்தவரை அது ஆசிரியரை பொருத்தது  மட்டுமே சிறப்பும் , சிறப்பர்றதும் சாரும். யாரை நம்ப வைக்க ...
சமச்சீர் வார்த்தை தவறா ..?.சரியா....?
2.    தமிழில் அனைத்தும் படிப்பது  என்பது சாத்திய மில்லாதது. மற்றும் எல்லா இடங்களிலும் தமிழ் பயன்படுத்த வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை .ஆனால் இன்று  நிலைமை  சாதாரண சந்திப்பில் கூட  தமிழில் கூச்சபட்டு பேச தயங்குகிறோம் , இடையிடையே தம்மை அடையாளம்  காட்ட நாம் ஆங்கிலத்தில் பேசுகிறோம். பின் எப்படி தமிழ் மலரும்...? 
  
        இன்று இஞ்சினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் வந்துள்ளதாக தகவல் . ஆனால் இது மகா முட்டாள் தனம். என்ன அண்ணா இப்படி சொல்லுறீங்க ..? ஆமாம் , சரவணன். தமிழ் எம்மொழியாக இருக்கலாம். அனைத்தும் தமிழில் இருந்தால் , அவன் எப்படி தொழிலுக்கு தமிழை மட்டும்  எடுத்து செல்ல முடியும் . வேலை வாய்ப்பை பொறுத்த வரை தமிழ் மட்டும் என்பது அவனுக்கு சோறு போடாது. ஏனெனில் , தமிழ் வழிக்கல்வி அதிகமான வேலைவாய்ப்பை தமிழ் நாட்டில் ஏற்படுத்தினாலும் பிழைப்புக்கு பிற மாநிலங்களையும், பிற நாட்டையும் சார்ந்துள்ளதால், இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே நாம் படிப்பது உத்தமம்  . ஆந்திராவில் தமிழ் மட்டும் கற்ற ஒருவரால் எப்படி  வேலை பார்க்க முடியும். அமெரிக்காவில் சென்று பணிபுரிய முடியும். தமிழ் கல்விமுறை அனைத்தையும் பெற்று தருமா...?
3.  கல்வி கட்டணம் முறை படுத்துதல் என்பது வரவேற்க தக்கது , இருப்பினும் இதை எந்த ஆங்கில வழிக் கல்விச்சலைகள் அமல் படுத்தும். இது மறைமுகமாக பில் இல்லாமல் பெற்றோரை வதைக்க வழி வகுக்கும் . சட்டப்படி ஒரு கட்டணம் பில் கொடுத்தும் ,அது , இது இன்று மேலும் கட்டணத்தை வசூலிக்க வகை செய்யும். எந்த பெற்றோர் தன் மகனின் படிப்பை கெடுத்து , எதிர்காலத்தை  பாழாக்குவார்கள்    ,புகார் கொடுக்க முன் வருவார்கள். 
இன்று தன் மகனின் படிப்பை பாழாக்கி யாரும் பள்ளியை எதிர்க்க தாயாரா...? பள்ளிக்கு தகுந்த மாதிரி தரம் ...தரத்திற்கு தகுந்த மாதிரி காசு...காசக் கொடு தரத்தை பெறு . 
4. இன்று சமச்சீர் கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சுமைகள் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் புத்தகத்திற்கு பின்னால் உள்ளவைகள் ஆசிரியர்கள் உண்மையாக மாணவனுக்கு கொண்டு சென்றால் மட்டுமே , பயனடைய முடியும் . இதுவும் மறைமுகமாக வெளி சந்தைகளான நோட்ஸ் பெருக்க வழி வகை செய்கிறது. 
மெட்ட்ரிக்  பள்ளிகள் அதே சிலபஸ் மட்டும் பயன் படுத்தும் ஆனா,பட புத்தகம் வேறு . இதுவும் மறைமுக வியாபார உத்தியாகவே உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற புத்தகத்தினை நாம் பயன் படுத்த வேண்டும். இதிலும் தனியார் ஆதிக்கம் அதிகம் . எது எப்படியோ , கல்வி மாணவனுக்கு தரமானதாக சென்றால் சரி . ஆசிரியர்கள் தான் எல்லா  விடியலுக்கும் காரணம் என்பதை உணர்ந்து செய்யலார்ற வேண்டும்.எதிலும் சமம் இல்லை , syllabus  தவிர மற்றவை எல்லாம் சமாமில்லை . பின் எப்படி.....?  


   அய்யா , அவரும் நானும் உரையாடிய நிகழ்வுகளில் அவரிடம் சிக்கி தவித்தேன் இதில் மாற்று கருத்து உண்டு என்பவர்கள் மறு மொழி இடலாம். என்னால் அவருடன் போட்டி போட்டு பேச முடியவில்லை. ஏனெனில் ,நான் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவன். அதற்காக அவர் சமச்சீர் கல்வி முறைக்கு எதிரானவர் அல்ல . நாம் எதை நோக்கி செல்கிறோம் என்பது தான் அவரின் கனிவான எண்ணப் பதிவு.


    ஆசிரியர் நினைத்தல் எது வேண்டுமானாலும் நடக்கும். மண்ணாகவும் , பொன்னாகவும் நாம் மாறுவது ஆசிரியர் கையில் தான். நான் பொன்னானதும் என் ஆசிரியர்களால் தான். முதல் வகுப்பு முதல் இன்று வரை நான் சந்திக்கும் அனைத்து ஆசிரியர்களும் என்னை மெருகேற்றி பொலிவடைய செய்பவர்கள் தான். கல்வி முறைகளில் மாற்றம் தேவை இது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் கல்வி முழுமையாக சென்று அடையா ஆசிரியர்களாகிய நாம் முழுமையாக அற்பணிக்க வேண்டும். எல்லாம் ஆசிரியர்கையில் ... 
    
  3 comments:

vasu balaji said...

கல்வியின் அடிப்படைக் கட்டமைப்பு மாறாதவரை சமச்சீர்கல்வி என்பது கானல்நீர். திரு அருணாச்சலத்தின் கருத்து சிந்திக்கவேண்டியது. சிலபஸ் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் எங்கு சென்றாலும் தொடரமுடியும் என்பது தவிர வேறெந்த மாற்றமும் இருக்காது. உதாரணம் CBSE. நாடு முழுதும் ஒரே சிலபஸ்தான். ஆனாலும் தேர்ச்சி சதவீதம், மார்க்குகள் எவ்வளவு வித்தியாசம். அதிலும் நல்ல பள்ளிகளில் ஒரு கட்டணம், சுமாரான பள்ளிகளில் ஒரு கட்டணம்.

நேசமித்ரன் said...

மிகப் முக்கியமான பதிவு ஆசிரியரே

சிந்தனை தூண்டும் பதிவு

க ரா said...

நல்லா சொல்லிருக்கீங்க சரவணண்.

Post a Comment