இந்த முறை காதை தீட்ட வேண்டியது இல்லை . வசனம் நன்றாக இருக்கிறது. விக்ரம் , பிரிதிவி ராஜ் ,ஐஸ்வரிய ராய், பிரபு என அனைவரிடமும் நல்ல நடிப்பை பெற்றுள்ளது மணிரத்தினத்தின் சிறப்பு. இருந்தாலும் இந்த டண்ட நக்கா .... மேனரிசம் சரியாக வரவில்லை என்றே படுகிறது. சுஹாசினியின் வசனம் பரவாயில்லை .
உசிரே போகுது பாடல் தவிர பிற எடுபடவில்லை. இதுவே படத்தை ஓட வைத்து விடும். நான் சென்றதும் இப்பாடலின் இசையினை கேட்டுத்தான்.
தேடப்படும் குற்றவாளியான ராவணன் ,ராமனாகிய பிரிதிவிராஜின் மனிவியை தூக்கி கொண்டு ஓடுகிறான், ராமன் சீதையை மீட்டானா ,அல்லது ராவணன் தனதாக்கி கொண்டானா என்பது தான் கதை .
கமிரா கடைசி பாலத்தின் மீது நடைபெறும் சண்டையில் அசத்துகிறது. காட்சி அமைப்பு நம் கண்களுக்கு விருந்து. கார்த்திக் ஏன் வீனடிக்கப்பட்டுள்ளார் ? நட்புக்கு ஏற்ற கதாப்பத்திரமோ ...?
கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை முன்பே எதிர்பார்க்கச் செய்கிறது. இருந்தாலும் நன்றாக வந்துள்ளது.
தற்போது வந்துள்ள படங்களுக்கு ராவணன் ஒருமுறை பார்க்கலாம். மணிரத்தினத்திற்கு இந்த படம் அவர் பாணியில் டண்ட நக்கா டணக்கு நக்கா
(இது என் முதல் திரை விமர்சனம் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம். )
11 comments:
தற்போது வந்துள்ள படங்களுக்கு ராவணன் ஒருமுறை பார்க்கலாம். மணிரத்தினத்திற்கு இந்த படம் அவர் பாணியில் டண்ட நக்கா டணக்கு நக்கா
இருந்தாலும் இந்த டண்ட நக்கா .... மேனரிசம் சரியாக வரவில்லை என்றே படுகிறது.
.... நச்! super review!!!!!!!!
மாம்ஸ் - நல்லா இருக்கு விமர்சனம்! இதை போல சொன்னா தானே நாங்க போறதா இல்லையான்னு முடிவு பண்ண முடியும். தொடருங்கள்!
என்ன தல... ராவணன் படதில நம்ம ரெண்டுபேர் கருத்தும் மாறிருச்சு. :-)
உங்கள் விமர்சனம் Short and Sweet
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாமே,...
ஹ்ம்ம்.. விமர்சனம் நல்லா இருக்குங்க.. நன்றி
விமர்சனம் நல்லா இருக்குங்க
வாழ்த்துக்கள்... முதல் விமர்சனம் முறையாக இருக்கிறது...
வாழ்த்துக்கள் தொடருங்கள் நல்லா இருக்கு
நல்லா இருக்கு உங்கள் விமர்சனம்.
நல்லா இருக்கு...
திரை விமர்சனம் நன்றாக உள்ளது. படங்கள் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
romba mokka vimarsanam boss. nenga innum develop panikanum
Post a Comment