Wednesday, June 9, 2010

அவசியமான பதிவு இது. ...

         பள்ளி திறந்தாகி விட்டது. இனி அவசர அவசரமாக வீட்டு வேலை செய்து , சமைத்து , குழந்தைகளை குளிப்பாட்டி, அவர்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து கொடுத்து, சரியாக பஸ் ஸ்டாப்பில் கொண்டுசென்று நிறுத்தி, பின்பு வீடு சென்று "அப்பாடி..."  என மூச்சு வாங்கி , அடுத்த வேலை செய்யும் மம்மிகளுக்கும் , இவர்களை விட , குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பின் , தான் பணிக்கு செல்ல ,அவசரமாக கிளம்பி வேலைக்கு செல்லும் அனைத்து தாய்மார்களும் கவனிக்க வேண்டிய  அவசியமான பதிவு இது.

    ஏன் இதை பதிவிட வேண்டியுள்ளது என்றால் , என் தோழி போன்று நீங்களும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல நோக்கம் மட்டுமல்ல , காலாவதி பற்றி தெரிந்திருந்தும் நாம் மிகவும் சோம்பி இருப்பதனாலும் ,நம் அறியாமையை போக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும் ஆகும்.


       இன்று பள்ளி செல்ல பிள்ளைகளை கிளப்பி விடுவதில் உள்ள ஆர்வம் , நாம் அவர்களுக்கு உணவு தயாரித்து கொடுப்பதில் கிடையாது. அவசரமான உலகத்தில் எல்லாம் உடனடியாக நடக்க வேண்டிய கட்டாயம் , ரெடி மிக்ஸ் வாயிலாக நாம் நம் குழந்தைகளின் உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு இருக்கிறோம்.  

       தினமலரில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுவையான உணவு தயாரித்து வழங்குவது சம்மந்தமாக கட்டுரை வெளிவருகிறது . படித்து பார்த்து , பிடித்தால் சமைத்து பார்த்து,அது போன்று உணவு சமைத்து  வழங்கி நம் குழந்தைகளின் உடல் நலம் பேணலாம்.


       என் இந்த விளம்பர இடைவேளை என்று கேட்பது புரிகிறது....!
 
    என் தோழியும் உங்களை போன்று தம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து , பள்ளிக்கு வரும் தாய் தான். வேலைப் பளு காரணமாக ,அன்று உடனடி புளியோதரை மிக்ஸ் வாங்கி , புளியோதரை சமைத்து காலை உணவாக அதையே அனைவரும் சாப்பிட்டு , தனக்கும் ,தன் குழந்தைகளுக்கும் மதிய உணவாக அதையே டிபனில் அடைத்து கொடுத்துள்ளார்.

      இது என்ன பிரமாதம் , இது தான் அனைத்து வீட்டிலும் நடப்பது தானே என்று சற்று குறைவாக இச்செயலை  மதிப்பிட வேண்டாம் . இல்லை என்றால் நீங்களும் இது போன்று அவஸ்த்தைக்கு ஆளாக நேரிடும்.

      மிகவும் முக்கியமான ஒன்று, இந்த மாதிரி ரெடி மிக்ஸ் சாப்பிடுவதால், உடம்புக்கு செரிமான தன்மை குறைவு , நெஞ்சு எரிச்சல், குடல் புண் , அல்சர் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்குள் உண்ணாவிடில் , இதனால் உணவு ஒவ்வாமை அதாவது புட் பாய்சன் ஏற்பட வாய்ப்பு அதிகம் . பின்பு அவதி அதிகம்.

     அன்று என் தோழி பள்ளி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டதால், மதிய உணவு நேரத்திலும் அவரால் எழுந்து வர முடிய வில்லை. நானும் பள்ளி மாணவர் சேர்க்கை என்பதால் , அவர் உணவு உண்ண செய்ய மாற்று ஆள் அனுப்ப வில்லை. நானும் உணவு மறந்து போனேன்,ஆகவே பிறர் உணவு விஷயம் மனதை தொட வில்லை. மதியம் மணி மூன்று நெருங்கியதும் எனக்கு பசி எடுக்கவே, பெற்றோர் யாரையும் என் அறைக்கு அனுப்ப வேண்டாம் என சொல்ல அவரிடம் சென்ற போது  தான் ,அவர் உணவு அருந்தாத விஷயம் எனக்கு தெரிந்து அவரை வலு கட்டாயமாக உணவு அருந்த சொன்னேன். (சத்தியமாக அவர் ரெடி மிக்ஸ் புளியோதரை செய்து வந்திருப்பது எனக்கு தெரியாது.)
மாற்று ஆசிரியரை அனுப்பி வைத்தேன்.

       அவரும் என் தொல்லை தாளாமல் கஷ்டப்பட்டு உணவு அருந்தி விட்டார். வீட்டிற்கும் சென்று மாலை காபி,குழந்தைகளுக்கு இரவு தோசை செய்து கொடுத்து , இரவு ஒன்பது மணிக்கு படுக்கைக்கு சென்று விட்டார். மதியம் மூன்று மனைக்கு மேல்தான் உணவு உட்கொண்டதால் இரவு உணவு அருந்தவில்லை,ஒருமணி போல் மதியம் உட்கொண்ட உணவு இரவு அதன் வேலையை செய்துள்ளது. தொடர்ந்து வயிற்று போக்கு , அதனுடன் தலை சுற்றல் ஏற்படுத்தி பாடாய் படுத்தி உள்ளது.

       இரவோடு இரவாக பருகில் உள்ளல தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அவர்கள் அவருக்கு முதலுதவி செய்து , காலை ஆறு மணிக்கு தான் மருத்துவர் பரிசோதித்து , இது உணவு ஒவாமையால் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளார். அன்று மாட்டும் ஆறு பாட்டில் சலைன் ஏற்றப்பட்டுள்ளது.
மறு நாளும் அவருக்கு இது போன்று சிகிச்சை . அனைவருக்கும் மன உளைச்சல். உடனடியாக மருத்துவ உதவி கிடைத்ததால் உயிர் பிழைத்துள்ளார். இதுவே குழந்தைகள் நிலைமை என்றால் என்ன வாக்கும் நினைத்து பாருங்கள்.

     அவர் பயன்படுத்திய ரெடி மிக்ஸ் தேதி ஏப்ரல் என்று இருந்தது. ஆகவே காலாவதி மருந்து போன்று ,உணவிலும் காலாவதி தேதி பார்க்க வேண்டும் . உணவின் கெட்டு போகும் தன்மை அறிந்து , அதற்குள் உணவு உண்ண வேண்டும்.

   என் ஆசிரிய பணியில் பல மாணவர்கள் ,முதல் நாள் மீன் , கோழி ,கறி குழம்பு மதியம் உணவிற்கு கொண்டு வந்து , வயிற்று போக்கு எடுத்துள்ளதை கண்டுள்ளேன்.  பெற்றோர்களே நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியது முக்கியம் தான், அதை விட முக்கியம் உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.பாக்கெட் சமாச்சாரங்களை தயவு செய்து தேதி பார்த்து உபயோகபடுத்தவும். காலாவதி என்றால் உடனே அழித்தது விடவும்.

    அரசு எவ்வளவு முறை எச்சரிக்கை கொடுத்தாலும் நாம் திருந்த போவதில்லை எனில் காலவதியும் மாற போவதில்லை. மதுரையில் ஒரு பள்ளி மாணவன் உணவு ஒவ்வாமையால் இறந்த பின் , ஹோட்டல் தோறும் உணவு தரம் சரிபார்க்கப்பட்டு , அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்டதை இந்நேரத்தில் நினைவு படுத்த கடமைபட்டுள்ளேன்.

  

10 comments:

தருமி said...

//அரசு எவ்வளவு முறை எச்சரிக்கை கொடுத்தாலும் நாம் திருந்த போவதில்லை //

உண்மைதான்.

ஆனாலும் முந்திய நாள் மீன் குழம்பையும் இந்த லிஸ்ட்டில் இணைப்பது ... ?!! அது தனிச் சுவையல்லவா??

பனித்துளி சங்கர் said...

//////// என் ஆசிரிய பணியில் பல மாணவர்கள் ,முதல் நாள் மீன் , கோழி ,கறி குழம்பு மதியம் உணவிற்கு கொண்டு வந்து , வயிற்று போக்கு எடுத்துள்ளதை கண்டுள்ளேன். பெற்றோர்களே நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியது முக்கியம் தான், அதை விட முக்கியம் உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.////////

சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் நண்பரே . என் பள்ளிப் பருவதிலும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது . மிகவும் சிறப்பான பதிவு காலம் அறிந்து பதிவிட்டு இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

மதுரை சரவணன் said...

தருமி அய்யா அவர்களே, பலர் முறைப்படி அதை சூடு படுத்தி வைப்பது கிடையாது , காலை அவசரத்தில் அப்படியே தருவதால்,வயிற்று போக்கு ஏற்படுவதை என் அனுபவத்தில பல முறை பார்த்திருக்கிறேன். பனித்துளி வருகைக்கு நன்றி.

AkashSankar said...

நன்றாக சொன்னீ ர்கள்... வெளிநாடுகளில் சட்டம் கடுமையாக இருப்பதால் இது போன்ற உணவு வகைகளை அனுமதிக்கின்றனர். நமது நாடு அப்படியா...

எல் கே said...

சரியான பதிவு

Unknown said...

நான் இடுகையின் தலைப்பை வழிமொழிகிறேன்

தமிழ் மதுரம் said...

அரசு எவ்வளவு முறை எச்சரிக்கை கொடுத்தாலும் நாம் திருந்த போவதில்லை//

சமூகத்தின் மீதான சரியான கண்ணோட்டத்தில் அமைந்துள்ள பதிவு. அருமை. என்று திருந்துமோ எங்களின் சமுதாயம்.

அமுதா கிருஷ்ணா said...

பெற்றோருக்கு அவசியமான பதிவு..

virutcham said...

மிகவும் அவசியமான பதிவு

http://www.virutcham.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவு சரவணன்

Post a Comment