Monday, June 7, 2010

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகம்

     சமச்சீர் கல்வி தொடங்கி வகுப்புக்கள் ஆரம்பித்து விட்டன , ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தை அதுவும் தமிழ் புத்தகத்தை எடுத்து என்ன இருக்கிறது என்று நான்கு தினங்களுக்கு முன் பார்க்கும் போதே  அதுபற்றி ஒரு பதிவு இடவேண்டும் என்று எண்ணம் தோன்றியது .
    
      புத்தகம் மிகவும் நேர்த்தியாக மாணவர்களின் சிந்தனையை  தூண்டும் வகையில் அனைவரும் எதிர்பார்த்த விதத்தில் அமைந்துள்ளது. தமிழக அரசின் செம்மொழி கொள்கைகளை பின்பற்றி , திருவள்ளுவர் படம் அனைத்து பாட புத்தகத்திலும் அட்டைபக்கத்தின் பின் புறம் பொறிக்கப்பட்டு அதில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை 2010 என்று அச்சிடப்பட்டுள்ளது. சூன் 23-27 என் தேதி குறிப்பிடப்பட்டு மாணவர் அனைவரையும் மாநாடு பற்றி அறிய செய்துள்ளது சிறப்பு ஆகும்.


      ஆசிரியர்களுக்கு ,"தயவு செய்து மாணவர்களுக்கு செம்மொழி பற்றி எடுத்து சொல்லி , மாநாட்டின் அவசியத்தை கூறவும் ". எனக்கு தெரிந்து திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் பார்த்ததில்லை அதுதாண்டா இது என படத்தை பார்த்து , அதில் உள்ள வரிகள் வாசிக்காமல் , பதில் கூறும்   முட்டாள்களையும் (பொறுமையாக பதில் சொல்லத்தெரியாத ஆசிரியர்கள் )இது நாள் வரை பார்த்து இருக்கிறேன். ஆசிரியராய் இருந்து இதை சொல்வதில் வெட்கப்படுகிறேன்.

       ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகம் பாடவாரியாக ஒவ்வொரு பாடத்திலும் செய்யுள், அடுத்து உரைநடை , அதற்கடுத்தது துணைப்பாடம் , பின்பு மொழித்திறன் வளர்க்கும் இலக்கணம் என இடம்பெற்று , ஒவ்வொரு பாடமுடிவிலும் வகுப்பறை திறன், மற்றும் வாழ்க்கை திறன் சம்மந்தமான கேள்விகள் இடம் பெறுள்ளன.. மொத்தம் ஒன்பது பாடம் , 130 பக்கங்கள் வண்ண மயமாக தமிழ்நாட்டுப்  பாடநூல் கலக்கம் சார்பாக 80  ஜி.எஸ் .எம் . தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

 
 
 வாழ்த்து ,திருக்குறள் ,நாலடியார்,நான்மணிக்கடிகை,பழமொழி நாணூறு ,புறநானுறு என்று இருந்துவிடாமல் பாரதி,பாரதிதாசன் , பாட்டுகொட்டை, இராமச்சந்திர க்கவிராயர் ,உடுமலை நாராயணக் கவி என தொடர்ந்து கவிகோ அப்துல் ரகுமான் புதுக்கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. உ.வே.சா. மட்டுமல்லாது தேவரும், பெரியாரும் , சுவாமி விவேகனந்தரும் இடம்பெற்றுள்ளனர். அறிவியல் விசயங்களுக்கு பறவைகள், பாம்புகள் மற்றும் மேரிக்குயுரி இடம் பெற்றுள்ளனர். மகள் இந்திராவுக்கு நேரு இழுத்திய கடிதமும் இடம் பெற்றுள்ளது.

    சித்தர் பாடல் ,தனிப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பழக்கவழக்கங்கள் பற்றியும் பாடம் எழுதப்பட்டு மிகவும் சிறப்பாக தமிழ் நூல் வந்துள்ளது.

தயவு செய்து அனைவரும் சமச்சீர் கல்வி முறைக்கு ஆதரவு திரட்டி , இலவச கல்விக்கு, கல்வி கூடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்க பாடுபடுவோம் , ஒன்று திரள்வோம்.       

  

5 comments:

Unknown said...

ஒன்று திரள்வோம்...

நானும் ....

அன்புடன் நான் said...

உங்க பதிவு நச்!

பாராட்டுக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

பதிவு நல்லாயிருக்கு..அரசு கட்டணம் நிர்ணயம் செய்ததால் ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளிகளில் வேலைப்பார்த்த நிறைய ஆசிரியர்கள் இன்னும் பாதாளத்திற்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. தினக்கூலிகளை விட குறைந்த சம்பளம் தான் கிடைக்கும்.அதற்கும் அரசு ஏதாவது செய்தால் தான் தகும்...

virutcham said...

நீங்கள் தமிழ் ஆசிரியரா ? இல்லை என்றாலும் ஆசிரியர் என்பதால் ஒரு கேள்வி?
மொழிப் பாடங்களில் ஏன் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்ட விரும்பாத அளவு கடினமான அல்லது சுவாரசியம் இல்லாத விஷயங்களே பாடங்களாக வைக்கப் படுகின்றன?
பாடங்கள் குறைவாகவும், மொழியை புரிந்து கொள்ள, அனுபவிக்க வகை செய்ய மாணவர்களின் சுய படைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டாமா? அந்த அந்த வயதுக்கு ஏற்ற ஏதாவது கதை புத்தகங்களை வாசித்து அதை அவர்கள் புரிந்து கொண்ட முறையில் உரை எழுத வாய்ப்பு கொடுக்க வேண்டாமா?
இப்படி இயல்பாக கற்க அனுமதிக்காமல் எப்போதுமே முற் காலத்தில் பிறர் படைத்தது வைத்து விட்டு போன படைப்புகளையே படித்து தேர்வு எழுதி என்று ஒரு தேர்வு நோக்கிலே, மதிப்பெண் நோக்கிலே மொழிப் பாடங்களும் இருந்தால் அது சரியா ?

http://www.virutcham.com

Unknown said...

paadangal manavargalukkum puriyavillai aasiriyarkalukkum puriyavillai ithu samaser kalviyin nilai

Post a Comment