Friday, June 11, 2010

.கொண்டாடுவோம் தலையில் தூக்கி தமிழை தமிழாய் .

    தமிழை தமிழாக உச்சரிக்க நடவடிக்கை எடுப்போம் .
 "என்னப்பா ...எடுத்தவுடன் சூடா ஏதோ சொல்ல வருகிறியே  ...."

   "அட போங்க ....ஹாட் நியூஸ் எதுவும் இல்லைன்னு சொன்னா ...ஏம்பா நீயாவது சுத்த தமிழில் பேசி எழுதக்   கூடாதா  ...? என நக்கல் அடிக்கிறீங்க .."
  
"தமிழனின் தனி சிறப்பே ...டமிலை டமிழாக உச்சரிப்பது இல்லை என்பது தான்....ஆனா நீ மட்டும் தமிழை தமிழா உச்சரிக்கணும் "

"ஹலோ ..இது  தமிழனின் ஸ்பெசல் குவாலிட்டி...என்பது தெரியாதா....அது  மட்டும் என்ன எனக்கு ஓரவஞ்சனை ..."

"நீங்க என்ன எங்களை பற்றி பேசுறீங்க  ...திஸ் இஸ் டூ மச் ....'தமிழன் என்றோர் இனமுண்டு , தனியே அவர்க்கோர் குணமுண்டு ...' சோ நாங்க பொதுஜனம் எப்படியும் பேசுவோம் ...."

"அட உங்க ஊத்துக்கு  ...என் மேல சவாரி செய்றீங்களே  ...இது கொஞ்சம் ஓவரா தெரியல ....என் மம்மி மேல பிராமிசா ...இனி தமிழ் பற்றி பேச மாட்டேன்...."

"ஹலோ ...செம் மொழி மாநாடு பற்றி எல்லா சமச்சீர் புத்தகபின் பக்க அட்டையில் கொடுத்துள்ளனர் ...என பீத்தின...அப்ப நீ மட்டும் டமில பேசணும் இல்ல....?''

"இப்ப விசயத்துக்கு வாங்க ...ஆமா செம்மொழி  மாநாட்டுக்கு செல்லும் முன் தமிழ் மொழியில் இனி பிறக்க போகும் குழந்தைகளுக்காவது தமிழில் பெயர் இடுவோம் , பெயர் பலகைகளுக்கு தமிழில் பெயரிடுவதோடு விட்டு விடாமல் , நாம் பேசும் வார்த்தையில் பிற மொழி சொற்களை தவிர்ப்போம். ...ஆ ங்கிலம் இன்றி உரையாட முற்படுவோம்..."


'போதும் இதுக்கு மேல பேசினா ,,,,போதை இறங்கிடும் அப்பறம் ... நம்ம ஓயப் தேடும் ..சாரி ஸ்டெடியா இருக்கேன் ..என் ஓயப் தேடும் ...ஓ .க்கே . ...நீ உன் பாணியில எழுது...பி குட் நைட் .."

                தமிழ் நாட்டில் தமிழ் முதலிடம் பெற வேண்டுமானால் , தமிழில் சிந்தனை வளர வேண்டும் . தாய் மொழி சிந்தனை மட்டுமே வளமான அறிவின் வெளிப்பாடாக இருக்கும். ஆகவே, நாம் பிற மொழி கற்றாலும் , நம் தமிழாகிய தாய் மொழி சிந்தனை மறந்து , அந்நிய மொழியில் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும் . அதற்கு நாம் பிற மொழி சொற்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். சாதாரணமா நாம் ஆமாம் என்று சொல்லுவதைக் கூட எஸ்.என்று சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் நம் சிந்தையில் வெருண்டி இருக்கிறது . இதுவே நம் தமிழன் அறிவு நிரம்பி இருந்தும் சாதிக்காமல் , பின் தங்குவதற்கு காரணமாகும்.


    நாம் யாருடன் புதிய சந்திப்பை ஏற்படுத்தினாலும் ...ஹெலோ , சார்,என சர்வசாதரணமாக வேற்று மொழி சொற்களை உபயோகிக்கிறோம்.  தமிழ் என்று தெரியாமலே பல சொற்கள் தமிழ் தான் என்று அச்சு பிசகாமல் பயன்படுத்துகிறோம். சாதம் , அதிரசம், குழம்பு ... என்பன தமிழ்தான் என்று பயன்படுத்துகிறோம்.


      இச் செம்மொழி மாநாட்டிலாவது குறைந்த பட்சம் தமிழ் நாட்டில் பயிலும் அனைவரும் தமிழ் மொழி வாயிலாக தான் பாடங்களை கற்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும். எந்த போர்ட் கல்வி முறையாகட்டும் தமிழ் வழியாக தான் தமிழன் பாடம் கற்க  வேண்டும் என சட்டம் வேண்டும். அப்போது தான் தமிழ் மொழி வளமையும், மொழி வாயிலான சிந்தனையும் , அறிவியல் பூர்வமான சிந்தனையும் வெளிப்பாடும். ஆ

       தாய் மொழி சிந்தனை தான் , உண்மையான தனி மனித வளர்ச்சிக்கு பயன்படும் . தமிழ் நாட்டில் தமிழ் தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவனுக்கு , மருத்துவம் , பொறியியல் படிப்புக்கு சேர்க்க அரசு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

      கோயில்களில்  தமிழில் அர்ச்சனை ஏற்படுத்திய நம் அரசு , ஏன் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட  பாட புத்தகங்களை அடிப்படையாக கொண்டு ,தமிழ் நாட்டில்  படிக்கும் அனைத்து மாணவரும் ,தமிழ் மொழி வாயிலா\க தான் அனைவரும் பாடம் படிக்க வேண்டும் சாட்டம் கொண்டு வரமுடியாது..?


     மதுரையில் நான் வசிக்கும் பகுதியில் சொள்ராஷ்டிரா மொழி பேசுபவர்கள் அதிகம். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தால் , அவர்கள் தாய் மொழியான சௌராஷ்டிராவில்  தான் பேசுவார்கள். அதுவும் அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை என்று கேள்வி பட்டுள்ளேன்,ஆனால் செம்மொழி சிறப்பு வாய்ந்த நாம் தமிழில் பேசுவது அசிங்கம் என கருதி , ஆங்கிலத்தில் தான் பேசுகிறோம். அதுவும் படித்தவர்கள் தான் , யாரையாவது சந்திக்க நேர்ந்தால் ஆங்கிலத்தில் பேசுவது தமக்கு கொள்ரவம் என நினைக்கிறார்கள். 

 இம் மாநாடு , தமிழன் தமிழனோடு தமிழில் பேசுவதற்கு ஒரு விதையை போட்டால் போதும் .

       கூடுவோம் கோவையில்....கொண்டாடுவோம் தலையில் தூக்கி தமிழை தமிழாய் . 

4 comments:

AkashSankar said...

மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டால் மட்டுமே மொழி வளர்ச்சி பெரும் சரவணன்... உதாரணத்திற்கு... ஆங்கிலிம் பல மொழியை உள்வாங்கி இன்று உலகெங்கும் வியப்பித்திருக்கிறது...

Riyas said...

வாழக தமிழ் இவவையகம் எங்கும்..

virutcham said...

தனி தமிழ் ஆதரவை நான் ஏற்கிறேன்.
ஆனால் தமிழில் மிகவும் பரவலாக வழக்கில் இருக்கும் வார்த்தைகளை தமிழில்லை என்று தவிர்க்க முயன்றால் நமக்கு தமிழ் அன்னியமாக தெரியும்.
இன்றைய தலைமுறை தமிழ் அறிவு ஆர்வம் ஏற்கனவே குறைவாக இருக்கிறது. இதில் நாம் அதிகக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் இருக்கும் ஆர்வமும் போய் விடும்.
ஆங்கிலத்தை தமிழில் எழுதி விட்டால் தமிழ் என்று ஒரு நிலைப்பாடு இப்போ இருக்க்கு.
போர்டு(Board) , சுன்(June) - வட மொழியை தவிர்ப்பதே எங்கள் நோக்கம் ஆங்கிலத்தை அல்ல என்ற மனோபாவம் தான் இதில் தெரிகிறது.

தமிழில் அதிக மதிப் பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல் எல்லாம் எப்படி கொடுக்க முடியும்? தமிழில் அதிக மதிப்பெண் எடுத்தால் ஏன் தமிழ் படிக்கக் கூடாது? தமிழ் படிப்புக்கு வேலை வாய்ப்பை அதிகப் படுத்த வேண்டுமே அன்றி தமிழ் மதிப்பெண் வைத்து பிற படிப்புக்கு முதல் இடம் கொடுக்க இயலாது. தமிழ் வழியாக பிற பாடங்களைக் கற்று தேறியவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வியில் சலுகைகள்வழங்கலாம்

தமிழ் என்பதை மையமாக வைத்து எழுதும் பதிவில்எழுத்துப் பிழைகளை கவனித்து தவிர்த்திருக்கலாம்

http://www.virutcham.com

ஹேமா said...

இம் மாநாடு , தமிழன் தமிழனோடு தமிழில் பேசுவதற்கு ஒரு விதையை போட்டால் போதும்.

இதுவே போதும்.நல்லது சரவணன்.

Post a Comment