மதுரையில் ஒரு நிறுவனத்தில் காப்பி எடுக்க கொடுத்ததில் தவறு நடந்துள்ளதா ...?
என பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியாக இருந்துள்ள சிவகங்கை பள்ளி சம்பவம் இன்றைய தமிழகத்தை மட்டுமல்ல அனைத்து கல்வியாளர்களையும் சிந்திக்கச் செய்யும் செய்தியாக அமைந்துள்ளது.
1.அந்த ஒரு சி.டி .யில் மட்டும் இருந்துள்ளதா...?அல்லது காப்பி செய்துள்ள அனைத்து சி.டி.யிலும் இருந்துள்ளதா...?
2. அந்த சி.டி. அரசு துறையால் வழங்க பட்டதா....?அல்லது அரசு கொடுத்த சி.டி. கணினியில் காப்பி செய்யப்பட்டு , தனியார் கணினி வாயிலாக நகல் எடுக்கும் போது தஆபாச பைல் சேர்ந்து காப்பி செய்யபட்டதா....?
3. ஆங்கிலம் என்றால் அது ஆபாசம் கலந்தது என்று சேர்த்தே கொடுக்க பட்டதா...?
4. அரசு கொடுக்கும் எதையும் சர்வ சிக்ஷா அபியான் மூலம் பெறுவதில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்லது இத் திட்டத்தை எதிர்க்கும் யாரும் செய்த சதியா...?
தனியார் தொலைகாட்சியில் காட்டப்பட்ட ஆபாச காட்சி குழந்தைகளை பாதிக்காத...? என்று வாரி கட்டி வரிந்து வந்தவர்களுக்கான மேலும் இது ஒரு டானிக் செய்திதான் ...நேரடியாக அதுவும் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பார்த்திருக்குமானால் மனது எப்படி பாழ் பட்டிருக்கும் ...?
உங்கள் ஆதங்கம் புரிகிறது ...அப்படி எதுவும் நடந்திருக்காது...ஆசிரியர்கள் எப்போதும் எந்த ஒரு சி. டி. யையும் தனியாக பார்த்து ,கொடுக்கப்பட்ட சி.டி. நமக்கு உரியது தானா என சரிசெய்த பின்பு தான் போட்டிருப்பார்கள்..எனவே , பாழ் படும் என வாதிடும் முன் நான் அங்கு இது மாதிரி தான் நடந்து இருக்கும்,தனியாக பார்த்துதான் ஆசிரியர் இத் தவற்றை கண்டுபிடித்து , அரசுக்கு ,அதாவது அதிகாரிகளுக்கு சுட்டி காட்டியிருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் சபாஷ் .
அறிவியல் வளர்ச்சி கல்வியில் புதுமையை ஏற்படுத்தி , மொழி வளமையை ஏற்படுத்தி உள்ளது என்று மார்தட்டி கொள்ளும் முன் , அதிலுள்ள சிக்கல்களை நாம் களைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஆசிரிய பெருமக்களும் அதிகாரிகளும் இது போன்று தவறு இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க , நாம் கீழ் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1.மாணவர்களுக்கு வழங்கப்படும் சி.டி.க்கள் முதலில் அதை வழங்கும் அலுவலரால் பார்க்கப்பட்டு , அதிலுள்ள தகவல்கள் உண்மையில் மாணவர்களுக்கு வடிவமைக்கப் பட்டது தானா.? என சரி பார்க்க பட வேண்டும்.
2. சி. டி. தானே மாஸ்டர் சரி பார்த்து விட்டோமே என பிரதிகளை சரி பார்க்காமல் , அப்படியே பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
3. அரசால் வழங்கப் படும் சி.டி க்களை பெற்று கொண்ட ஆசிரியர்கள் அல்லது ஆசிரிய பயிற்றுனர்கள் தமக்கு கொடுக்க பட்ட சி.டி. நம் மாணவர்களுக்கு உரிய பாடத்திற்கு சம்பந்தம் உண்டா என சரி பார்த்து , வீட்டிலோ, அளிவலகத்திலோ தனியாக பார்த்த பின்பு , மாணவர்களுக்கு கொண்டு செல்லுதல் நல்லது.
4. அரசு தனியார் நிறுவனத்தி சி.டி.க்களை காப்பி செய்யும் போது சி. டி. தானே என கவனிக்காமல் விட்டு விடக்கூடாது, பாட புத்தகம் அச்சில் ஏற்ற எப்படி நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறதோ அதே போன்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
குறைந்த பட்சம் காப்பி செய்யும் போது ஒரு அதிகாரியோ அதற்கென பணியமர்த்த பட்டவரோ உடன் இருக்க வேண்டும்.
------------------------------
இன்று அதே போன்று தன் மகனை பெயில் ஆக்கி விட்டதாக ஒரு கேஸ் .அதற்கு தீர்ப்பும் வந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. நம் மத்திய அரசு கொள்கை படி ஒன்று முதல் எட்டு வரை அனைவரயும் பெயில் ஆக்க கூடாது .
பொதுவாக ஒன்று முதல் எட்டுவரை யாரையும் பெயில் ஆக்குவது கிடையாது.அதே போல் ஒன்பது படிப்பில் பெயில் ஆகிவிட்டால் , அதாவது குறைந்த பட்ட்ச்காம் மூன்று பாடத்தில் மட்டும் தேர்ச்சி அடையாதவர்கள், அத்தேர்வு வெளியிட்ட பின் , ஒருவார களத்தில் மீண்டும் அந்த மூன்று பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதி பாஸ் செய்து, பத்தாம்வகுப்பில் சேர்வதற்கு நடவடிக்கை உண்டு.
இது போன்றே பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தவறிய மாணவர்களுக்கு உடனடி தேர்வு வைத்து , அக் கல்வி ஆண்டிலேயே அம மாணவன் கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
முக்கியமான சமாச்சாரம் , அனைவரையும் பாஸ் செய்வதன் நோக்கம் , கல்வி இடை நிற்றல் இன்றி தொடர வேண்டும் என்பற்காக மட்டும் அல்லாது,மாணவன் மனநிலையும் பாதிக்க கூடாது என்பதற்காகவும் தான்.
------------------------------------------------------------------------------------------------------------
இப்படியும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு ....நகைச்சுவையாக எடுத்து கொண்டாலும் சசீரியசும் இது தான்.
ஆங்கில பாடத்தை சி.டியில் காப்பி செய்ய சொல்லி கொடுத்து விட்டு சென்று இருப்பார்கள். நான்கு அல்லது ஐந்து நாள் கழித்து வர சொல்லி இருப்பார்கள் . நம்மவர்களும் குறிப்பிட்ட தேதி மறந்து இருக்க கூடும் . பின்பு அவசரமாக மதுரையில் உள்ள யாரையோ வைத்து வாங்கி வந்திருப்பார். எண்lணிக்கையில் குறைந்து இருக்கும்.
ஓனரிடம் ,"அய்யா ஒரு ஆயிரம் சி.டி. காணாம்....தயவு செய்து உடனே காப்பி செய்து தரவும் ..." என போன் மூலம் பேசி இருப்பார்கள்.
அவரும் இவர்கள் தொந்தரவு தாங்காமல் ,கடைக்கு போன் செய்து ." டேய், ஒரே தொல்லையா போச்சுடா...அந்த இங்கிலீஷ் மேட்டரை ஒட்டி விடுடா என்று சொல்லி இருப்பார். .."
"சரிங்க .....எந்த சி. டி...யில்ல காப்பி ..."
"நீ வேற உயிரை எடுக்காத ....அதன் லேபில் ஒட்டி வச்சுருக்குள்ள....மேட்டர் புது கம்ப்யூட்டரில் இருக்கு ....வேகமா ஓட்டி ...சொல்லு ...ஆள அனுப்பி வங்கிக்க சொல்லுறேன் .."
அவனும் அவனுக்கு தெரிந்த வழக்கமான ஆங்கில மேட்டரை ஓட்டி தந்திருப்பான்.
நிஜம் அல்ல இது கற்பனை ...ரெம்ப சீரியஸா விஷயம் பேசி சீரியசாக்காமல் நகைக்க மட்டும் ..இதற்கும் சிந்தித்தி விடாதீர்கள்.
7 comments:
அதிகம் பழக்கமில்லாத உலகத்தை பற்றி தினம் சுட சுட செய்தி...நல்ல பதிவு...
அறிவியல் வளர்ச்சி கல்வியில் புதுமையை ஏற்படுத்தி , மொழி வளமையை ஏற்படுத்தி உள்ளது என்று மார்தட்டி கொள்ளும் முன் , அதிலுள்ள சிக்கல்களை நாம் களைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
உண்மை. மேலும் நீங்கள் சொன்ன எல்லா கருத்துகளுமே பரிசீலனைக்குரியவை. ஆபத்தை ஒட்டியே நம் வாழக்கை அமைந்துள்ளது என்பதை மறந்திடக்கூடாது.
தனியார் பள்ளிகள் தமது தேர்ச்சி விகிதத்தை கூட்டிக் காட்ட மாணவர்களை பலி கடா ஆக்குவதற்கு நீதி மன்ற தீர்ப்பு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது ...
வரவேற்க வேண்டிய தீர்ப்பு தான் தோழர் !
சி.டி விவகாரம் ...
வெட்கம் -கேவலம் -.....-......
நீங்கள் தெரிவித்திருக்கும் நான்கு நடைமுறைகளும் உடனடியாக பின்பற்றப் பட வேண்டியவை !
இனிமேலாவது இந்த மாதிரி தப்பு நடக்காமல் கல்வி துறை கவனமா இருக்க வேண்டும்
//முக்கியமான சமாச்சாரம் , அனைவரையும் பாஸ் செய்வதன் நோக்கம் , கல்வி இடை நிற்றல் இன்றி தொடர வேண்டும் என்பற்காக மட்டும் அல்லாது,மாணவன் மனநிலையும் பாதிக்க கூடாது என்பதற்காகவும் தான்.//மாணவர்களின் மன அழுத்தம் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகளாலும் நிர்பந்தங்களினாலும் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை.
அப்படியும் நடந்து இருக்கும்..எங்கே போகுது இந்த பாதை..கல்வித்துறையில் ஆங்கிலம் என்றால் கிலோ என்ன என்று கேட்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். இந்த செகண்டரி கிரேட் என்ற படிப்பினை ஒழித்தால் தான் இந்த நாட்டில் கல்வி உருப்படும்..
இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
Post a Comment