Tuesday, June 8, 2010

உசிரே ..போகுதே உசிரே ...போகுதே

     இந்த பூமியில எப்பவந்து நீ பிறந்த...
மனிச புத்திக்குள்ள தீப்பொறிய   நீ விதைச்ச
அடி பச்ச  பூமி பெருசுதான் சின்ன நெகிழி அளவு  சிறுசுதான்  ...(௨)
நெகிழி ஒரு தீக்குச்சி போல விழுந்து பிடிக்குதடி  பசுமை பூமியும் வெப்பமாகி வெடிக்குதடி ..
.   உசிரே ..போகுதே  உசிரே ...போகுதே  
    நெகிழிய நீ கொஞ்சம் பயன்படுத்தயில...

உன்  மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்கிறேன்
மனச மாத்திக்கடி  என் மணிக்குயிலே
பூமி  மேல அக்கறை உனக்கிருந்தும் 
அஞ்சாம நீயும் நெகிழி பயன்படுத்திரியே 
அக்கினி உருவாக்கும் இதுன்னு தெரிஞ்சுருந்தும்
அடிக்கடி பயன்படுத்த  துடிக்கிறடி  

பிளாஸ்டிக் பூமிக்கு   தூரம்  தூரம்
ஓட்டநினைக்க ஆகல
மனசுசொல்லும் நல்ல சொல்ல...
  மாய பிளாஸ்டிக் உலகத்த அழிக்கும்ன்னு கேட்கலை

தவியோ  தவிச்சு சொல்லுது மனசும்
தள்ளி நின்னு வேத்து கிரகம் சிரிக்குதடி
கேளு நீயும்.....
 இந்த பிளாஸ்டிக் கிறுக்கு மாறுமா
மந்திருச்சு விட்ட கோழி மாறுமா
உன் மயக்கத்த தீர்த்து வச்சு மன்னிச்சுடுமா....

சந்திரனும் சூரியனும்
தள்ளி நின்னு சுத்துது
நெகிழி தந்து நீயும்
சுடாக்குவியோன்னு    
..
சந்திரனும் சூரியனும் இப்ப தலைசுத்தி
கிடக்குது உன் செய்யலக்கண்டு
(உசிரே....துடிக் கிறடி )

இந்த உலகத்திள்ள இது ஒன்ணும புதுசில்ல
ஒன்ணு இரண்டு என்ன மாதிரி தப்பிபிறந்து
உசிர எடுக்கும் ....நெகிழி பயன்படுத்தாதன்னு ...
விதி வழி சொல்லி போகும் விதி விளக்கில்லா விதியில்ல

எட்ட நின்னு சூரியனும்  பூமி பார்த்து
   சிரிக்குதாடி ....
உன்னை பார்த்து கைகொட்டுதடி
மாமா நீயிருந்தும்
மாமா இருந்தும் நெச்சு பயம் வந்து போகல 

என் கட்டையும் ஒருநாள் சாகலாம்
நெகிழி உன்னையும் அழிக்கலாம்  
உன்  மயக்கத்தா  தீத்து வச்சு 
மாமன் நானும் மாறல
மாறுவியோ  மாமன்போல 
நீயும் ...

6 comments:

Prasanna said...

சாரி நெகிழி நா Plastic ஆ..

ஹேமா said...

காதலும் சமூகமுமான பார்வை.
நெகிழின்னா ?

Riyas said...

ஆஹா அருமை..

AkashSankar said...

ஒரு பாடல் போல இருந்தது...நல்ல கருத்து...

மதுரை சரவணன் said...

பிரசன்னா, ஹேமா, ராசராசசோழன், ரியாஸ் அனைவருக்கும் நன்றி. வ்ருகைபுரிந்து ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் என் நன்றி.

மதுரை சரவணன் said...

பிளாஸ்டிக் தமிழில் நெகிழி என்று பொருள் ஹேமா.

Post a Comment