Friday, June 4, 2010

உயிரே உயிரே போகுதடி

கண்ணாலே மின்சாரம்
பாய்ச்சும் நீயும்
தமிழ்நாடு ஈ பி யும்
ஒன்று ...
பவர் கட்
நிரந்தரம் என்பதை விட
எப்போது ...
எவ்வளவு நேரம் ...
காதல் மூட்டி
காணாமல் போவாய் ....
என்று ...!
-------------------------------------------------------------------------------

நீ சிரித்தாய்
நான் மலர்ந்தேன்
நீ பார்த்தாய்
நான் பருகினேன்
ஆனாலும் ...
நீ பேசினாய்
நான் உமையானேன்
நான் பாசமானேன்
நீ நெருங்கினாய்
நான் நொறுங்கினேன்
நீயும் நானும் ஒன்றானோம்
வார்த்தைகளில்...
நீயும் நானும் ஒன்றானோம்
சிந்தனையில்
நீயம் நானும் ஒன்றானோம்
அடுத்தவர்கள் பார்வையில்
அனைவர் வாயில் ...
காம சாயம் பூசி
காதல் சட்டை உடுத்தி ...
நம் நட்பும்
அடுத்தவர் வாயில்
அனைவர் வாயிலும்  ...
காம சாயம் பூசப்பட்ட
விரல் நகங்களால்
மனதை காயப்படுத்தி ...
உயிரே உயிரே போகுதடி
கோணல் பார்வையால்
யோனி பற்றியே சிந்திக்கும்
சீர்கெட்ட சமுதாயாத்தை
எண்ணி எண்ணி ....
உயிரே உயிரே போகுதடி
பிறப்புறுப்பை அறுத்து
தருகிறோம் ...
காம கண்கள் அகற்றி
ஆண் பெண் நட்பில்
புனிதம் காண்
அறுவை சிகிச்சைக்கு தயாரா...?

எங்கள் உறவு
தாஜ்மஹால் போல்
புதைக்கப்பட்டு கல்லறையாக
இருக்காது ...
ஆனால்
தாஜ்மஹால் போல்
அனைவருக்கும் அதிசயமாய்
ஆச்சரியமாய் பார்க்கும் விதம் அமையும் ...!
எங்கள் நட்பு
சொல்லியும் சொல்லாமலும்
புரிந்தும் புரியாமலும்
உண்மை உணர்த்தும்
உங்களுக்கும் ...
இரத்தத்தில் புரையோடி
புற்றாய் இருக்குமானால்
ஆண் பெண் நட்பு
பாம்பு நஞ்சாய்  மாறி
குணப்படுத்தும்
காமம் அகற்றி
பெண்ணை போதை பொருளாய்
பார்க்கும் பார்வை அகற்றி
அறுவை சகிச்சை செய்யும் ...!  

மாறிவிடுங்கள்
மரிக்கும் முன்னாவது ...!

4 comments:

ஹேமா said...

இரண்டாவது கவிதையின் கரு அருமை.ஆதங்கம் சமூக எரிச்சல் எல்லாம் கலந்து கொப்பளிக்கும் கோவம் எழுத்துக்களாகி....!

Prasanna said...

ஆஹா பவர் கட்ட வச்சி ஒரு காதல் கவிதை.. சூப்பர் :)

சுப்பு said...

நல்லா இருக்கு

Unknown said...

அருமையான கவிதைகள் அதுவும் இந்த வரிகள்
"பிறப்புறுப்பை அறுத்து
தருகிறோம் ...
காம கண்கள் அகற்றி
ஆண் பெண் நட்பில்
புனிதம் காண்
அறுவை சிகிச்சைக்கு தயாரா...?
" நச்...

Post a Comment