Sunday, June 6, 2010

அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ?

   தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமுலுக்கு வந்து , பிற பட புத்தகங்களை அடுத்த கல்வி ஆண்டில் கொண்டுவர முழு மூச்சில் வேலை நடந்து வரும் இவ்வேளையில் , பள்ளிகள் தோறும் பெறோர்கள் , கல்வி கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக புகாரும் , சாலை மறியலும் நடத்தி வரும் இவ்வேலையில் ஒரு கேள்வி மட்டும் என் மனதில்.....

1.         தமிழக அரசு எல்லா  திட்டங்களையும் மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் பொது , கல்வியை மட்டும் குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயித்து தந்தது  ஏன்..?

2.       இலவச டி.வி கொடுக்காவிட்டால் , சாலை மறியல் மட்டுமல்ல அதிகாரிகளை சிறை பிடித்து , தங்கள் கவனத்தை அரசின் பக்கம் திருத்தும் மக்கள், இதுவரை தம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ?

3.      அரசு பள்ளிகளில் படித்தால் தமிழக வேலை வாய்ப்பில் முன்னுரிமை  என்றால் மெட்ரிக் பள்ளியின் மோகம் குறைய வாய்ப்பு இருக்கும்.

4.     கல்வியை தொழிலாக தரவில்லை , தரமாக தருவதற்குத்தான்  காசு வாங்குகிறோம் என கூறும் கல்வி தந்தைகளே ,அப்படியே அரசு எடுத்து நடத்த தாயாராக இருக்குமானால் ,தங்கள் நிறுவனத்தை  அரசுடமையாக்க தயாரா...?..

.5.     பெற்றோர்களே அனைவரும் ஒன்று திரண்டு அனைத்து விதமான கல்வியையும்
இலவசமாக பெறுவதற்கு போராட்டம் நடத்த தயாரா...?

.        எது எப்படியோ அனைவருக்கும் கல்வி முறையாக போய் சேர வேண்டும். அதற்கு பொது  மக்கள் பங்கு அவசியம் தேவை. தங்கள் தெருவில் , தங்களுக்கு தெரிந்த குழந்தைகள் ஐந்து வயது பூர்த்தி அடைந்து இருக்குமானால் , அவசியம் அருகில் உள்ள    பள்ளியில் சேர்ந்து பள்ளிக்கு செல்கிறதா...?என பார்த்து , செல்ல வில்லை எனில் உடனே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும்.அருகில் உள்ள பள்ளிக்கு தகவல் கொடுத்தாலோ, அல்லது கல்வி அதிகாரிகளுக்கு தகவில் தந்தாலோ உடனே அக்குழந்தையை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.


  அதே போல் , பள்ளிக்கு செல்லாமல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தை வேலைக்கு செல்லுமானாலும் , இது போன்று தகவல் தந்தால் , உடனே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப் படும்.

13 comments:

பொன் மாலை பொழுது said...

I like this kind of articles Saravanan.
Keep going.

பனித்துளி சங்கர் said...

சமச்சீர் கல்வி பற்றி சிந்திக்க தூண்டும் பல கேள்விகளுடன் ஒரு சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

சாந்தி மாரியப்பன் said...

சிறப்பான பகிர்வு, நல்லா கேட்டுருக்கீங்க. பதில்தான் கிடைக்குமான்னு தெரியலை.

தருமி said...

இன்னுமொரு விதயம் இங்கே .......

பொடிப்பையன் said...

உண்மையான பகுத்தறிவு...
(இலவச பெட்டியில் பகுத்தறிவு பெருமாறு சொன்னவருக்கு சாட்டையடி...)
இதை, இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துச்செல்வது எப்படி?

Unknown said...

வெளிநாடுகளில் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள்தாம்.. சில விதி விலக்குகள் உண்டு எனினும்.,
உங்கள் கருத்தை நான் ஆதரிக்கறேன் ..

ஜோதிஜி said...

இலவச டி.வி கொடுக்காவிட்டால் , சாலை மறியல் மட்டுமல்ல அதிகாரிகளை சிறை பிடித்து , தங்கள் கவனத்தை அரசின் பக்கம் திருத்தும் மக்கள், இதுவரை தம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ?

நண்பரே இந்த கேள்வி தான் எனக்குள்ளும் போட்டு கொடைஞ்சுகிட்டு இருக்கு?

VR said...

வணக்கம் சரவணன்,

மிக நல்ல ஆய்வு. உங்கள் கருத்துக்களை சற்று செரிவுட்டி தருமி அவர்களின் கருத்துகளையும் சேர்த்து, ஒரு மீள் ஆய்வு கட்டுரையாக பதிவு செய்தால் என்ன?

பூங்குழலி said...

தமிழக அரசு எல்லா திட்டங்களையும் மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் பொது , கல்வியை மட்டும் குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயித்து தந்தது ஏன்..?

2. இலவச டி.வி கொடுக்காவிட்டால் , சாலை மறியல் மட்டுமல்ல அதிகாரிகளை சிறை பிடித்து , தங்கள் கவனத்தை அரசின் பக்கம் திருத்தும் மக்கள், இதுவரை தம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ?

சரியான நேரத்தில் சரியான கேள்விகள் ...

அமைதி அப்பா said...

//அரசு பள்ளிகளில் படித்தால் தமிழக வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்றால் மெட்ரிக் பள்ளியின் மோகம் குறைய வாய்ப்பு இருக்கும்//

நல்ல ஆலோசனை, ஆட்சியாளர்களுக்கு புரிய வேண்டுமே!

ரோஸ்விக் said...

தேவையானதொரு இடுகை. வாழ்த்துகள்.

நண்பரே இது சம்பந்தமாக எனது இடுகை.

http://thisaikaati.blogspot.com/2010/06/school.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரவணன் மிக அவசரமானதும், அவசியமானதும் ஆன ஒன்றைப் பற்றி சரியான கேள்விகளை எழுப்பி இருக்கீங்க. இந்த அதிர்வு பரவட்டும்!

அமுதா கிருஷ்ணா said...

இலவச கல்வி கொடுத்துட்டா எல்லோரும் அறிவாளிகளாகிவிட்டால்..என்ன செய்வது...

Post a Comment