Monday, June 28, 2010

கலைஞருக்கு நன்றி ...! நன்றி ...!

   என்னைப் போன்று கோடானக் கோடித் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் பால் வார்த்த கலைஞர் அய்யா அவர்களுக்கு நன்றி..!

   தமிழுக்கு முதல் மரியாதை செலுத்திய கலைஞருக்கு நன்றி...!

  செம்மொழி மாநாடு பிடித்தாலும் , பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை கடைசி நாள் அறிவிப்பு என்னை போன்றவர்களின் , குறிப்பாக பிளாக்கர்களுக்கு பிடித்த விசயத்தை வழிமொழிந்த கலைஞருக்கு நன்றி...! தமிழனாய் மீண்டும ஒரு முறை நன்றி..!



     ”தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டியதற்காகவா...?”

   இப்படி கோள்வி கணைகளால் துளைக்கும் முன் என்னுடைய ஜீன் ஆறு ( என்ன முறைக்கிறீங்க எங்க கலைஞர் அய்யா கற்றுக்கொடுத்தது தான்)அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ..?பதிவை நினைவுபடுத்த விரும்புகிறேன்.


     என்னைப்போன்ற பதிவர்களின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுத்தக் கலைஞருக்கு மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்...!தமிழ் படித்தவர்களுக்குத்தான் இனி முன்னுரிமை (முதலிடம் வேலைவாய்ப்பில் ...)  இது நிச்சயம் தமிழின் மீது இனி ஈடுபாட்டை எற்படுத்தும் .

    எப்படி சாத்தியம் ...?என்று என்னிடம் அப்போதே வினா எழுப்பியவர்களுக்கு இன்று சாத்தியமாக்கிய கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதில் எந்த அச்சமும் இல்லை
கலைஞர் அவர்கள் கல்வியை அரசுடைமைப்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தொடக்கக்கல்வியையாவது அரசுடைமையாக்க வேண்டும் . இலவசமாக எதை எதையோ தருவதர்க்கு தயாராக இருக்கும் கலைஞர் அய்யா அவர்கள் கல்வியை எழை மக்கள் முழுமையாகப் பெறுவதற்க்கு இலவசக் கல்வித் திட்டத்தை அறிவிக்க வேண்டும. கல்வி சாலைகளை அரசே எடுத்து நடத்த வேண்டும்.
    


     இந்த கோரிக்கை கலைஞர் காதுகளில் விழத் தமிழன் எங்கிருந்தாலும் தயவு செய்து நாளை முதல் இலவசப் படுத்துக கல்வியை என்று தந்தி கொடுப்போம்...ஆதரவு தாரீர்...!
     

8 comments:

vasu balaji said...

நிச்சயம் செய்ய வேண்டிய முயற்சி சரவணன்.

Chitra said...

நல்ல கருத்து.... தமிழ் வாழ்க!

AkashSankar said...

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்... விட்டு கொடுப்பு அரசியல்வாதியிடம் நிறைய எதிர்பார்க்கிரீர்கள்... முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

அவர் செய்வாரா என்பது ஒருபுறம், இலவசமாய் தரும் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என்று சந்தேகப் படும் மக்கள் எத்தனை பேர் அதனை தெரிவு செய்வார்கள் என்பது ஒரு பக்கம்.

Ramesh said...

அவசியமானது. கேட்போம்.
::::::::::
இலவசமாக எதை எதையோ தருவதர்க்கு தயாராக இருக்கும் கலைஞர் அய்யா அவர்கள் கல்வியை எழை மக்கள் முழுமையாகப் பெறுவதற்க்கு இலவசக் கல்வித் திட்டத்தை அறிவிக்க வேண்டும. கல்வி சாலைகளை அரசே எடுத்து நடத்த வேண்டும்.
:::::::::
ஏழைமக்கள் முழுமை காணட்டும்

Unknown said...

pl check this news to know how Tamil scholars are treated in TN . High court has slammed the GOVT .
Read this .http://www.vikatan.com/news/news.asp?artid=3803

Karthick Chidambaram said...

Nadanthaa nallathu ...!

vasan said...

இன்னும் ந‌ம்பு..ராங்கா'!!!

Post a Comment