Tuesday, June 15, 2010

தமிழக கல்வித்துறை வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது ...

   இன்று 15 .06 .2010 உலக முதியவர்கள் அவமதிப்பு விழிப்புணர்வு நாள் . தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் இன்று கீழ் கண்ட உறுதி மொழி எடுத்தனர்.

   "Today is world Elder Abuse Awareness day.  Older people have contributed much to our nation . I.hereby pledge that i will respect , love and take care of my parents , grand parents and all senior citizens of our country . I will neither abuse nor permit others to abuse the  senior citizens and shall strive towards changing India a nation free of elder abuse ."


        இன்று முதியவர்களை மதித்தல் என்பது மிகவும் குறைந்துள்ளது என்ற காரணத்தால் , முதியோர் இல்லங்கள் நிரம்பி வழியும் காலமாக உருவெடுத்துள்ளது. 
நம்மை தாலாட்டி , சீராட்டி வளர்த்த அன்பு நெஞ்சங்களை  , முட்கள் பொருத்திய காலணிகளை அணிந்த கால்களால் உதைத்து விடுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வலியும், வேதனையும் கொண்டு தன் இளமையை நமக்காக செலவழித்து , தம் உதிரத்தை சிந்தி நம்மை பாசத்தால் வளர்க்கும் பெற்றோர்கள் நம் இல்லங்களை தவிர்த்து , முதியோர் இல்லங்களை நிரப்புகின்றனர் என்றால் நாம் என்று நம் தவற்றை திருத்திக் கொள்வது ?
      
          அரசு இது போன்ற உறுதி மொழி மூலமாக இளமையில் மாணவர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த விளைவது பாராட்டுக்குரியது. இளமையில் கல்வி முதுமையில் வளமை. அதுபோல் இளமையில் ஒழுக்கம் , முதுமையில் இளமை மற்றும் மகிழ்ச்சி. தான் மட்டும் அல்ல , நம்மை சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

          நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி தூக்கி விட்ட நம்  பெற்றோர்களுக்கு நாம் காட்டும் மரியாதை இது தானா...? என்று கேட்கும் முன் மாறுபட்ட என் கேள்வி ,


1. பெற்றோர்களை எதிரியாக்கியது எது ? பெற்றோர்களை மறக்கச் செய்தது எது?
2.இந்த குறை வளர்ப்பு முறையில் உருவானதா...?அல்லது சூழல் உருவாக்கியதா...?


       இரண்டிற்கும் என்னை பொறுத்தவரை முதன்மை குற்றவாளிகளாக ஆசிரியர்களை கருத நேரிடுகிறது. அதற்கு ஒரே காரணம் நாம் மதிப்பெண்  மட்டும் சார்ந்த கல்வியை அதாவது புள்ளி விபரங்களையும் கருத்துக்களையும் புகுத்திவிட்டு , பண்பு நெறிகளை , ஒழுக்க நெறிகளை கற்று கொடுக்க தவறி விடுகிறோம். அதுவே அவனை கருத்துக்களை மட்டும் தன் மூளையில் ஏற்றி , பாசம் , பண்பு , அன்பு ஆகிய நெறிகளை தவிர்த்து ,காசை மட்டும் கடவுளாக பார்த்து பெற்றோர்களை நடுரோட்டில் நிற்க வைக்கிறது.

     சமச்சீர் கல்வி முறையில் இப்பண்பு நெறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. (இது சம்பந்தமாக தனி பதிவு விரைவில் வெளியிடப்படும்) 

       இன்று என் ஆசிரிய நண்பர் கல்யாணம் வீட்டில் நடந்த நிகழ்வு.  அவர் மனைவியும் ஆசிரியர்.
         இருவரும் தம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி ,காலை மிகவும் பிசியான நேரத்திலும் தம் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து , வயதான காலத்தில் அவர்கள் வியாதிக்கு மருந்து , உணவு எடுத்து கொடுத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருவது வழக்கம்.

         இன்று வேலை பளு ஆதிக்கம் ஆகிவிட்டக் காரணத்தால் , தம் பெற்றோர்களுக்கு மருந்து கொடுத்து , உணவு மற்றும் எடுத்து வைத்து விட்டு , சாப்பிட்டு விடுங்கள் .மதியம் உணவு குக்கரில் இருக்கு , எடுத்து எப்போதும் போல் போட்டு சாப்பிட்டு விடுங்கள் என சொல்லி விட்டு இருவரும் பணிக்கு வந்து விட்டனர்.

      மதியம் அவரின் மகனிடம் இருந்து போன் ,"அப்பா, பாட்டி வீட்டில் பெட்ட்ச்சு முச்சு அற்று கிடப்பதாக தாத்த வந்து என் பள்ளியில் சொல்கிறார், உடனே விரைவில் வாருங்கள் ...நான் பள்ளியில் இருந்து தாத்தாவுடன் வீட்டிற்கு செல்கிறேன் .வாருங்கள். "

என் நண்பர் அவரது தங்கைக்கு (அருகில் இருப்பதால், இவரை விட விரைவில் அவர் விட்டாய் அடைந்து விடுவார் என்பதால்) போன் செய்து உடனே அருகில் உள்ள மருத்துவரை அழைத்து செல்ல சமயோசிதமாக செயல் பட்டார். அவர் தங்கையும் மருத்துவரை அழைத்து சென்று பார்த்து உடலில் இரத்த அழுத்தம் குறைந்து , உடல் குளிர்ந்து , நாக்கு வறண்டு கிடந்தவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு,  மருத்து ஊசி மூலம்  செலுத்தப்பட்டு உடல் நிலை சரிசெய்யப்பட்டது.

      இருப்பினும் அவர் கண் முழிக்க வில்லை. என் நண்பரும் விரைந்து சென்று , விசாரித்து , அவர்களின் எப்போதும் பார்க்கும் மருத்துவரை தொடர்பு கொண்டு விஷயம் சொன்னபோது அவர் கேட்ட முதல் கேள்வி ,காலை உணவு உட்கொண்டாரா  ...?"

விசாரித்தபோது , சுகர் மாத்திரை கொடுத்து சாப்பிட சொன்னவுடன் , அவர்கள் சாப்பிடாமல் இருக்க அசதி ஏற்பட்டு உணவு அருந்தாமல், சற்று  சேரம் ஆகட்டும் என தாமதிக்க , அதுவே  லோ சுகர் உருவாக்கி உடலை சில் என ஆக்கி , இரத்த அழுத்தத்தை குறைத்து உள்ளது .இன்னும் சற்று நேரம் பார்க்காவிடில் அவரை பார்த்திருக்க முடியாது என்றாராம் மருத்துவர். அவருடன் கணவர் இருந்ததால் , அவர் உடனே அருகில் உள்ள பேரன் பள்ளியில் சென்று தகவல் தந்துள்ளார். தனி நபராக இருப்பின் ,நினைத்து பாருங்கள் .
    
         பின்பு மதுரையின் பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சரிசெய்து வீட்டிற்கு இரவு அழைத்து  வந்தனர் என்பது ஒருவிசயமாக இருந்தாலும் நல்ல முறையில் பார்க்கு ஆள் உள்ள பெற்றோர்களே இப்படி திணறும் போது பிறரை நினைத்து பாருங்கள்.
   ௦

       ஆசிரியர்கள் தம் கடமை அறிவை திணிப்பது என்பதுடன் இருந்து விடாமல் , சமுக நலனை கருத்தில் கொண்டு நல்ல எண்ணங்களை மனதில் விதையிங்கள் , நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண் தானாக வந்துவிடும். ஒழுக்கம் எல்லா மதிப்புக்களையும் தானாக தேடி தந்து விடும்.

         நாம் மாணவனை நல்ல பண்பு நலத்துடன் ஒழுக்க சீலர்களாக வளர்த்தால் போதும் அவர்களுக்கு மதிப்பு கூடி , தேர்வில் மதிப்பெண் தானாக வந்து சேரும்.அடிப்படையில் பற்று , பாசம் , அன்பு ஆகியவைகளை போதித்தால் மாணவன் என்றும் மாறாமல் தன் பெற்றோர்களையும் மறக்காமல் மதிப்பாய் வைத்திருப்பான்.
 
        சமுக வளர்ச்சிக்கு ஆசிரியர்களாகிய நாம் பொறுப்புகளை உணர்த்து செயல்பட்டால் ,நம் நாடு சமுக புரட்சி  நோக்கி வளர்ச்சியடைந்து , உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழும். 

  நம் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நம் தேசத்தின் முதியவர்களை நாம் அவமதிப்பு செய்ய கூடாது என்றும் , அவர்களை மதிக்கவேண்டும் என்றும்  , அவர்களை பாதுகாக்க வேண்டும் ,அவர்கள் மீது அன்பு செலுத்தி கவனிக்க வேண்டும் என்றும் சொல்லி உறுதி மொழி எடுக்க செய்திருப்பது , நம் தமிழக கல்வித்துறை வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

    நாமும் உறுதி எடுப்போம் அரசு கூறுவது போல் , முதியவர்களை அன்பு செலுத்தி கவனிப்போம், நாம் பெரியவர்களுக்கு அவமதிப்பு செய்ய மாட்டோம் என்பது மட்டுமல்லாது அவவமதிப்பு செய்வதையும் தட்டி கேட்போம் , இந்தியாவை பெரியவர்களை  மதிக்கும் நாடாக மாற்றுவோம்.  

1 comment:

தமிழ் உதயம் said...

இன்றைய நாகரீகம் எல்லாவற்றையும் விழுங்கி கொண்டு இருக்கிறது. இன்று பெற்றோரை முதியவர் இல்லத்தில் சேர்க்கிறார்கள். இதன் தொடக்கம் -க்ரஷில் - குழந்தையை பெற்றோர் விட்டதில் துவங்கியது. இன்றைய பெற்றோரை பேண வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக வரவேண்டும். யார் சொல்லி கொடுத்தும் வராது. வரக்கூடாது.

Post a Comment