Saturday, June 12, 2010

எல்லாம் ஆசிரியர்கள் கையில் .

     இன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் .. ...மத்திய  அரசு ஐந்து முதல் பதினான்கு வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கொடுக்க சட்டம் ஏற்படுத்தயுள்ள இத் தருணத்தில் மதுரையில் மட்டும் சுமார் எட்டாயிரம் இடை நிற்றல் மாணவர்கள் உள்ளதாக அரசு 'தகவல் கொடுக்கிறது.

     புதிய கோணத்தில் ஒரு அலசல் தேவைப்படுகிறது. குழந்தைகள் கல்வியை வெறுத்து ஒதுக்கி செல்கின்றனரா...? குடும்ப பிரச்சனை காரணமாக செல்கின்றனரா...?

      இரண்டிற்கும் ஒரே பதில் அன்பு இல்லாமை அல்லது அன்பு குறைவாய் இருப்பது .

  அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தேடி கண்டிபிடித்து ,வேலை செய்யும் குழந்தைகளை விசாரித்ததில் அனேகமாக அனைத்து குழந்தைகளும் சொல்லுவது ,அம்மாவும் , அப்பாவும் சண்டை போடுகிறார்கள் ,என்னை கவனிப்பதே இல்லை.

    நிறுத்தவும் , இதில் பெற்றோர்களை மட்டும் குறை கூறுவது தவறாகும். அனைத்து ஆசிரியர்களும் இத் தவறுக்கு உடந்தை. அதாவது குழந்தை பருவம் அதுவம் வீட்டை விட்டு புதிதாக ஒரு லோகத்தில் பயணித்து , அதில் நம்பிக்கை கொண்டு உலவும் அவனுக்கு நாம் அதாவது ஆசிரியர்களாகிய நாம் அன்பு செலுத்தி இருந்தால், எவ்வளவு குடும்ப பிரச்சனை வந்தாலும் , அதை மறந்து பள்ளி வந்து நம் காலை சுத்தி வந்திருப்பான்.

  
    இன்று தெருவில் , பெரியார் பஸ் நிலையம் அருகில் , கடை கடைக்கு தண்ணீர் ஊற்றி ,
தினக்க் கூலியாக முப்பது பெற்று , அதை வீட்டிலும் கொடுக்காமல் , என்ன செய்கிறானோ  என்று தெரியாமல் ஒரு வித மாய உலகில் வாழும் பத்து வயது சிறுவனை கெஞ்சி கூத்தாடி பள்ளியில் சேர்க்க சென்றால்,'' நீங்க எஸ். எஸ்.எ .விழ இருந்து வருகிறீங்களா என ஏளனமாய் கேட்பதும், அதுக தொல்லை தங்கலன்னு தான் இப்படி பிழைச்சு வாழுறேன் , இதுவும் உங்களுக்கு பிடிக்கலையா....அடுத்த மாசம் வாங்க யோசிச்சு வைக்கிறேன் ..." என்கிறான் .இது மதுரை தெற்கு ஆசிரிய பயிற்ருனரின் புலம்பல்.  அதை விட கொடுமை , இம்மாத முடிவில் அவனை தேடி சென்றால் , சென்னைக்கு சென்று சினிமாவில் நடிக்க சென்றுள்ளதாகவும். ஏற்கனவே அவன் மதுரையில் எடுத்துள்ள கோரிபாளையம்  படத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்.  

         மாணவன் இடை நின்று விட்டால், அவனை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது என்பது மிகவும் கஷ்டம். அதற்காக அரசு கோடி கோடியாக செலவழிக்க தயாராக இருந்தாலும் ,ம் ,தும்பை  விட்டு வலை  பிடித்த கதை தான் . ஆரம்பத்திலே அவனுக்கு அன்பு செலுத்தி இருந்தால் அவன் திசை மாறி சென்று இருக்க மாட்டான்.

      ஆசிரியர்கள் இனி வரும் காலத்திலாவது பாட புத்தக கருத்தினை மட்டும் மனதில் கொண்டு செயல் படாமல் , அவனின் ஒழுக்கம் சார்ந்த விசயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கம் என்று உங்களுக்கு நான் சொல்லவது  ,அவன் தனிப்பட்ட வாழ்வு முறை ஆராய்வதன் நோக்கம் ஆகும் . குடும்பத்தில் அவன் நிலைமை, குடும்ப நிலைமை, கண்டு , அவனது தேவைகளை எடை போட்டு (கல்வி சார்ந்த ), அவனுக்கு  தாய் போல் அன்பு , பரிவு, இரக்கம் , பாசம் , நேசம் , உறவு காட்டி , நற்பண்புகளை ஊட்டினால் என்றும் அப்பள்ளியை விட்டும், அந்த ஆசிரியரை விட்டும் மாற மாட்டான்.

    
      "குழந்தைகளின் வருமானம் பெற்றோர்களுக்கு அவமானம் ",  "ஒழிப்போம் , ஒழிப்போம் குழந்தை தொழிலாளர் முறைமையை ஒழிப்போம் " ,  "இளமையில் கல்வி, முதுமையில் வளமை " என குழந்தைகளை கொண்டு ஊர்வலங்கள் நடத்தி விழிப்புணர்வு தெரு தெருவாக ஏற்படுத்துவதை விட,  நாம் குழந்தைகளின் மீது அன்பு செலுத்த கற்று கொண்டால் , என்றும் குழந்தை தொழிலாளர்கள் உருவாக மாட்டார்கள்.

  அன்பு கொண்டு கல்வி செலுத்தினால் , நம் நாடு இன்னும் ஓராண்டில் வல்லரசாகும் . அப்துல் காலாம் சொல்லுவது போல் உடனே நல்லரசு ஆகும்.நல்லரசும் வல்லரசும்  ஆசிரியர்கள் கையில் . என் உணர்வுகள் , என் ஆக்கங்கள், என் வளர்ச்சிகள் அத்தனையும் என் முதல்  வகுப்பு ஆசிரியரிலிருந்து இன்று வரை எனக்கு கற்று தந்த ஆசிரியர்களாலே தான் என்பது முற்றிலும் உண்மை. ஆகவே மாணவனின் மனவெழுச்சி ஆசிரியர்களின் அன்பு மட்டுமே அடக்கி நல்வழி படுத்தும். நல்லவனாவதும் , தீயவனாவதும் ஆசிரியர்களாகிய நம் வளர்ப்பினிலே. ஆகவே அன்பு கொண்டு கல்வி கொடுப்போம். நல்வழி படுத்துவோம்.

13 comments:

Unknown said...

நண்பரே, மிகவும் உண்மை. தும்பை விட்டு வாலை பிடிக்காமல் ஆரம்பம் முதலே அன்பு காட்டி கல்வி போதிப்பது தான் மிக சரியான வழி.

எம் வலைபூவிற்கு வருகை தந்து தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

-ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net

Swengnr said...

வணக்கம்,
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

Swengnr said...

ஓட்டு போட்டு விட்டேன்

Ramesh said...

///ஆசிரியர்கள் இனி வரும் காலத்திலாவது பாட புத்தக கருத்தினை மட்டும் மனதில் கொண்டு செயல் படாமல் , அவனின் ஒழுக்கம் சார்ந்த விசயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கம் என்று உங்களுக்கு நான் சொல்லவது ,அவன் தனிப்பட்ட வாழ்வு முறை ஆராய்வதன் நோக்கம் ஆகும் . குடும்பத்தில் அவன் நிலைமை, குடும்ப நிலைமை, கண்டு , அவன....////
இந்த வரிகளை விரும்புகிறேன்
நல்ல பகிர்வு
அவசியம் அனைவரும் இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை தான்.
பகிர்வுக்கு நன்றி .

AkashSankar said...

காமராஜர் காலத்தில் தான் இது போன்று மாணவர்களை அழைத்ததாக கேள்வி...

அன்புடன் நான் said...

சிந்திக்க தூண்டும் படைப்பு....
பகிர்வுக்கும்... அறிவுறுத்தலுக்கும் நன்றி

தருமி said...

காலம் கடந்திருந்தாலும் .. என் மாணவனிடமிருந்தே நான் கற்றுக் கொள்ள நிறைய இருப்பதாக இப்பதிவை வாசித்ததும் தெரிந்து கொண்டேன்.

பெருமையாக இருக்கிறது.

அன்புடன் அருணா said...

குழந்தைகள் தானாக நின்று விடுவது தவிரவும் நிறைய காரணங்கள் இருக்கின்றது குழந்தைகள் பள்ளியை விட்டு நின்று விடுவதற்கு.

சௌந்தர் said...

அவனுக்கு தாய் போல் அன்பு , பரிவு, இரக்கம் , பாசம் , நேசம் , உறவு காட்டி , நற்பண்புகளை ஊட்டினால் என்றும் அப்பள்ளியை விட்டும், அந்த ஆசிரியரை விட்டும் மாற மாட்டான்//

வறுமையும் ஒரு காரணம் நல்ல பதிவு...

மாதேவி said...

"அன்பு கொண்டு கல்வி கொடுப்போம்" நல்ல வழி்.

தமிழ் மதுரம் said...

அன்பு கொண்டு கல்வி செலுத்தினால் , நம் நாடு இன்னும் ஓராண்டில் வல்லரசாகும்//


அற்புதமான கருத்துரை தோழா. கற்பித்தல் முறைகள் மாற்றமடைந்தால் தான் எங்கள் நாடுகளில் உள்ள மாணவர்கள் கல்வியில் ஆர்வம் செலுத்துவார்கள் என்பது நிஜம். அலசல்... சம கால தமிழ் நாட்டினைப் பற்றிய கலக்கல்.. தொடர்ந்தும் எழுதுங்கோ.

Unknown said...

இன்றைய டாப் இருபது வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Post a Comment