Tuesday, October 19, 2010

மதுரை இராணுவ கண்காட்சி 2010

வழக்கம் போல இராணுவ கண்காட்சி 2010 காண என் பள்ளி செயலர்  திரு'பி. சௌந்தர பாண்டியனிடம் காலை பள்ளி வந்தவுடன் அனுமதி கோரினேன். என்ன திடீர்ன்னு என்று விளக்கம் கேட்டார். சார், இன்று கடைசி நாள் ஆகவே மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நூறு நபர்களை பார்க்க அழைத்து செல்ல அனுமதி வேண்டும் , படிப்பு மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது அதை தவிர பிற விசயங்களையும் நாம் அறிந்து கொள்ள உதவ வேண்டும் என்றேன். சரி , பள்ளி பேருந்தை எடுத்து பத்திராமாக அழைத்துச் செல்லுங்கள் என அனுமதிக் கொடுத்தார். மிகவும் மகிழ்ச்சியாக காலைப்  பொழுது நன்றாகவே விடிந்தது. எங்கள் முலந்தைகள் பாக்கியம் செய்தவர்கள் எங்கள் பள்ளி நாடார் உறவின் முறையால் நடத்தப் படுகிறது . இதுவரை வந்த அனைத்து பள்ளி செயலரும் மிகவும் அருமையானவர்கள். அவர்களில் சௌந்தர பாண்டியன் எளிமையானவர் , இனிமையானவர்.  மாணவர்களுக்கு என்றால்   உடனே எதையும் செய்ய துடிப்பவர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவ்வப்போது பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்துவார்.
எந்த தமிழ் மீடியம் பள்ளிகளும் வராத இந்த ராணுவ கண்காட்சிக்கு எம்பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி கொடுத்த அவருக்கு இதன் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

                     மைதானத்தை நோக்கி விரையும் எம் பள்ளி மாணவர்கள்
 


                                                    இராணுவ வீரர்களின் சகாசங்கள் 

  
                           இராணுவ வீரர்களின் உடைகள் அன்றிலுருந்து இன்று வரை

                                     அந்தரங்கத்தில் சாகசம் செய்யும் இராணுவ வீரர்.
                                                         2023 mm  2 பி கன்

 மேலே படத்தில்  காட்டியுள்ள கன் ரஷ்ய தயாரிப்பாகும். இது முப்பது மி,மீ.கனமான இரும்பு தகட்டையும் துளைக்கும் சக்தி படைத்தது. ஒரு மணிக்கு 1080 மணி வேகத்தில் செல்லும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் சக்தி படைத்தது. ஒரு வினாடியில் இருப்பத்தாறு முதல் முப்பத்தி மூன்று ரவைகள் வெளி வரும் . ஒரே சமயத்தில் இரண்டு குழலிலும் இருந்தது நாண்ணூறு ரவைகள் வெறியேறி எதிரிகளை தாக்க வல்லது .இதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முப்பத்தைந்து  முதல் நாற்பது வினாடிகள் மட்டும் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

                                                   இராணுவ ஆண் அழகர்கள்
        இது போல பாலங்கள் அமைப்பது சார்பாக விளக்கப் படங்களும் , சில பாலங்களும் மாடலுக்கு வைக்கப்பட்டு இருந்தன. ஜாமர் கருவிகள். பாம் எடுக்க உதவும் உடை , பாம் ஆபத்தில்லாமல் இயந்திரத்தின் உதவியுடன் எப்படி எடுப்பது என செயல் வடிவில் காட்டினர். துப்பாக்கிகளின் வகைகள் அவற்றை எப்படி இயக்குவது என்பதும் செய்து காட்டப்பட்டது. இராணுவ வீரர்களின் ஸ்டம்ப் கலைக்சன் மிகவும் அருமையான சேமிப்பு ஆகும்.  மாணவர்களை எளிதில் கவர்ந்தது. மதியம் உணவு பத்து ரூபாய்க்கு அற்புதமாக  பார்வையாளர்களுக்காக தயாரிக்கப்பட்டு வழங்கப் பட்டது. டி இரண்டு ருபாய்  ஐம்பது காசுக்கு வழங்கப் பட்டது .      
             இராணுவ வீரர்களின் கலரி சண்டை மிகவும் ஆக்ரோசமாக இருந்தது

          அங்குள்ள  பார செயிலிங் என் கல்லூரி கால நினைவுகளை தூண்டி விட்டன. இரண்டாம் ஆண்டு நேவியில் இருக்கும் பொது சரஸ்வதி நாராயன் கல்லூரில் பார செய்லிங் கேம்ப் அட்டன்ட் செய்ததும் அதில் முதல் முதலில் தைரியமாக நானே ஆர்வமாக பயணித்ததும் . ஜீப் முன்னே நாகர நான் பார சூட்டில் மேலே பறக்க கயிறு ஜீப்பிலிருந்து விடுவிக்க , மேலிருந்து கீழே இறங்க , கால்கள் சாய்த்து முட்டியில் அடிபடாது பக்கவாட்டில் லேண்ட்டாண அனுபவங்கள் என் கண் முன்னால் வந்து சென்றன.  
      இராணுவத்தில் காயமடைந்த முன்னால் படி வீரர்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்ட போது எடுத்தப் படம்


    மாணவர்களையும், பொது மக்களையும் இராணுவத்தில் இணைக்க இக் கண்காட்சி உதவியாக இருந்தது.இராணுவத்தின் நவீன தொழில் நுட்பத்தாலும் , இராணுவ வீரர்களின்  சாகசத்த்தாலும் பொது மக்கள் தங்கள் குழந்தைகளையும் பயமின்றி  இராணுவத்தில் பணிபுரிய தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது.  
                        தாமரை பூ உருவாகும் முயற்சியில் இராணுவ வீரர்கள்.

   .
     ராணுவ வீரர்களின் மராட்டிய நடனம் . இது போரில் வெற்றி பெற்ற பின்பு நடைபெறும் களிப்பில் ஆடும் நடனம் இன்று கூறினர். மிகவும் அற்புதமாக பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.
  
                                              இராணுவ வீர்களின் ஜிம்னாஸ்டிக் சாகசம்
       கண்காட்சி முடித்து வந்த ஒரு மாணவனுடன் பேசினேன். இதனை பற்றி கேட்டேன். அவன் சார் நானும் ஒரு ராணுவ வீரனாகி இந்திய நாட்டை காப்பாற்றுவேன் என்றான். இந்த கண்காட்சி ஏதோ ஒரு விதத்தில் பொது மக்கள் மற்றும் மாணவர்களிடம் இராணுவ பணியில் சேர்வது குறித்த மயக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை பார்க்க முடிகிறது
         ஆர்வமுடன் இராணுவ கண்காட்சியை காணச் செல்லும் எம் பள்ளி மாணவிகள்.

                          இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வத்தை ஏற்படுத்தியதில்  நானும் என் மாணவர்களுக்கு தூண்டுகோலாக இருப்பது என் அதிர்ஷ்டம் ஆகும்.

                                                             ஜெய் ஹிந்த் .

Monday, October 18, 2010

திருக்குறள் பொது அறிவு வினா

1.திருக்குறளில் இடம்பெற்ற மரங்களை கூறுக .
   பனை, மூங்கில்
2. திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண்   ஏது ?
   ஒன்பது
3.திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு ஒரே அதிகாரம் ஏது ?
   குறிப்பறிதல்
4. திருக்குறளில்   இடம் பெறாத ஒரே உயிரெழுத்து ஏது ?
     ஒள  
5.திருக்குறளில் இடம் பெற்ற ஒரே விதை ஏது ?
   குன்றிமணி
6.திருக்குறளில் இடம் பெற்ற மலர்கள் ஏது ?
  அனிச்சை , குவளை
7. திருக்குறளில் இடம் பெற்ற ஒரே பழம் ஏது?
  நெருஞ்சி

தற்போது வயது குறித்து பொது  அறிவு வினாக்கள். (சாதனைக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை )

1.ஐன்ஸ்டீன் விளையாடுவதற்கு கொடுத்த மின் காந்த திசை காட்டும் கருவியில் உள்ள தந்துவத்தை கண்டறிந்தபோது வயது ஐந்து

2.விவேகானந்தர் சமஸ்கிருதத்தில் விகண்டுகளை மனப்பாடம் செய்த போது வயது பத்து.

3.சர்.சி.வி ராமன் மின் பொறி கருவிகளை கொண்டு ஆராய்ச்சி செய்த போது வயது பன்னிரண்டு .

4.பாரதி என்று பட்டம் பெற்றபோது வயது பதினொன்று .

Sunday, October 17, 2010

உங்கள் குழந்தைகள் டி.வி பார்க்கிறதா ..?

தொடர்ந்து இரண்டு மணி நேரம் உங்கள் குழந்தைகள் டி.வி  பார்க்கிறதா ? உடனே நிறுத்துங்கள். இல்லையென்றால் அது உங்கள் குழந்தைகளுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம்.  

  ஹிந்துவில் அக்டோபர் பதிமூன்றில் ஒன்பதாம் பக்கம் டி.வி பார்க்கும் நேரம் மனநலம் சார்ந்த பிரச்னையுடன் தொடர்புடையது என்ற தலைப்பில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. 

தொடர்ந்து இரண்டுமணி நேரம் டி. வி. அல்லது கணினி பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் மனநலம் தொடர்பான பிரச்சனைக்கு ஆளாகி இருக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். 
   
     தொடர்ந்து டி.வி பார்க்கும் பதினோரு வயது குழந்தைக்கு மனநலம் சார்ந்த கேள்வி கொடுக்கப்பட்டு , சரி பர்ர்க்கபட்ட போது , மனநலம் பின் தங்கி இருந்தது அதாவது பாதிக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

  
   ஆயிரத்து பதிமூன்று குழந்தைகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு , தொடர்ந்து டி.வி.மற்றும் கணினி  திரை முன்னால் இருக்கும் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது .நல்ல ஆரோக்கியமான உடல் நலம் உள்ள குழந்தைகள் தொடர்ந்து டி.வி பார்க்கும் நேரத்தை அதிகரிக்கும் என்றாள் அவர்களின் மன நலமும் பதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

     இரண்டு மணி நேரங்களுக்கு  தொடர்ந்து டி.வி பார்க்கும் குழந்தகைள் அறுபது சதவீதம் மன நோயிக்கு ஆளாக நேரிடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. 


ஆகவே குழந்தைகளுக்கு டி.வி முன்னால் இருப்பதை விட நல்ல உடல் பயிற்சி வளர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபட்டால் நல்லது என்றும் ஆய்வு கருத்து தெரிவிக்கிறது. 


        இந்த ஆய்வி ஒரு எச்சரிக்கையே தமிழகப் பெற்றோர்களே எனக்கு தெரிந்து மாலை நாடகம் பார்க்க தொடங்கும் நீங்கள் பத்து மனைக்கு தான் டி.வியை அணைப்பதாக தெரிகிறது. டெலிவிஷன் தொடர்களின் ரேட்டிங் அதையே வலியுறுத்துகிறது.  தாங்க்கள் டி.வி பார்த்தால் நிச்சயம் தங்கள் குழந்தைகளும் பார்க்கும் மாலை ஐந்து மணி , இரவு பத்து மணி ....இதன் நேரம் ஐந்து மணி நேரம் .நிச்சயம் குழந்தைகள் மன நோயிக்கு ஆளாக நேரிடும். 

       சமீபத்தில் பள்ளி மாணவன் சக மாணவனை நகைக்காக கொலை செய்துள்ளான் என்ற செய்திகள் இதன் விளைவாக இருக்குமோ என்று ஐயத்தை ஏற்படுத்துகிறது . பள்ளிகளில் பல மாணவாகள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவே உள்ளனர். மேலும் அவர்கள் தனித்து இருக்கவே விரும்புகின்றனர். இது அந்த ஆய்வல் உறுதி படுத்தப் பட்டுள்ளது. 


    பள்ளிகளில் ஆசிரியர் ஏதாவது சொன்னால் , மிகவும் தேம்பி அழுகின்றனர். சக மாணவன் ஏதாவது அவர்களின் புத்தகத்தை எடுத்து விட்டால் , உடனே வன்முறையில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் மிகவும் மெத்தனமாக உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அழைத்து பேசினால் அதிகம் டி.வி பார்பதாகவே சொல்லுகின்றனர்.  இந்த என் அனுபவம் அந்த ஆய்வுடன் பொருந்துவதாகவே உள்ளது. 


      தயவு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை வேலையில் கோவில் அல்லது பார்க் அழைத்து செல்லுங்கள். மாணவர்களை விளையாட அனுமதியுங்கள்.பாரதி சொன்னபடி மாலை முழுவது விளையாட்டாக இருக்கட்டும். நீங்களே அவர்களுக்கு பாட புத்தகத்தை வைத்து சொல்லி கொடுங்கள். முடிந்த மட்டும் தனி படிப்பு (டியுசன் ) வைப்பதை தவிர்த்து விடுங்கள். குழந்தைகள் தங்கள் கவனிப்பிலே வளர்வது நல்லது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் டி.வி. பார்க்க அனுமதியுங்கள். 
   
  

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -6

இப்படி எட்டாம் நூற்றாண்டின் வரலாற்றை தன்னகத்தே புதைத்து , கல் குவாரி முதலாளிகளின் கையில் அகப்பட்டு , தன் உடம்பில் கீறலை ஏற்படுத்தி, தன்னை நேசிக்கும் மக்களால் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப் பட்டு , தொல்லியல் துறையின் கைகளில் தற்போது தவழ்ந்தாலும் , படுகையின் பாதைகளில் சாராய மற்றும் பீர் பாட்டில்களின் சிதறல்கள் சமூக விரோத செயல்களுக்கு துணை போவதாகவே உள்ளது .

     சுற்றுலா தளம் என்ற போர்டும் அதற்க்கான செலவும் பட்டியலிடப்பட்டுள்ளது . ஆனால் , இது எந்த நூற்றாண்டை சார்ந்தது ?, இதன் தொன்மை என்ன ?, இதன் வரலாறு என்ன? என்பதற்கான எந்த குறிப்புகளும் இல்லை . ஏன் இதற்க்கான முயற்ச்சிகளை யாரும் எடுக்க வில்லை ? என்பதும் எனக்கு புலப்பட வில்லை. தொல்லியல் துறையில் இது சம்பந்தமாக புத்தகம் எதுவும் உள்ளதா என கேட்டபோது ,"இது சம்பந்தமாக குறிப்புகள் இருப்பதாக தகவல் இல்லை என்றும் சொல்லவில்லை, இது சம்பந்தமாக குறிப்புகள் இதோ என்றும் சொல்ல வில்லை. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி  உள்ளேன் . இம்மலை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை.தென் குன்றம் என்ற வேதாச்சலம் எழுதிய புத்தகமும் இல்லை.அத் துறையில் வேலை பார்த்த அவரின் தற்போதைய முகவரியும் இல்லை. அதனால் தான் என்னவோ இதை கல் குவாரிக்கு அரசு கொடுத்துள்ளதோ என்று ஐயாப்படும் நிலவுகிறது "

         தயவு செய்து இது சம்பந்தாமாக ஒரு போர்டை தொல்லியல் துறை வைத்தால் நலமாக இருக்கும் . மேலும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு இதன் வரலாற்று முக்கியத்துவம் எடுத்துச் சொல்லலாம். இப்பகுதியை சுற்றி தான் கல்லூரிகள், பல்கலைக்கழகம் உள்ளன. ஏன் இம்மாணவர்கள் இத் தொன்மையை பற்றி உணர வில்லை ? வரலாற்றை தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை , தொல்லியல் துறையின் வேலை தயவு செய்து , விரைவில் ஒரு போர்டை வைத்து அதன் தொன்மையை அறிய செய்யவும். இது ஒரு மக்கள் போராட்டமாக உருபெற்றால் தான்  சாத்தியமா? மலை தான் இதற்க்கு சாட்சி . கிராம மக்கள் விழிப்புணர்வு பெற்று அதை மேற்கொள்ள வேண்டும் . பொறுத்திருந்து பார்ப்போம்.

            இப்படி பட்ட சிந்தனைகள் அம்மலை அடிவார அரச மர காற்றில் அமர்ந்திருந்த என் எண்ணத்தில்  தோன்றியது . ரோட்டின் ஓரம் ஒரு கல்  மண்டபம் இருந்தது . அது எனக்குள் ஏதோ ஒன்றை சொல்லுவது போல் உணர்ந்தவனாக , அருகில் இருந்த தங்கச் சாமியிடம் எதற்கு அங்கு மண்டபம் என கேட்டேன். அவர் இதுவரை மகிழ்ச்சியாக பதில் சொல்லியவர் . இவன் ஏன் இதனை கேட்கிறான் என்பது போல என்னை ஏறிட்டு பார்த்தார். "என்னங்க ஐயா ...எதுவும் பேசாமல் இருக்கீங்க என்றேன். "" இல்லைப்ப இது தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் குல தெய்வம் ..அவர்கள் கும்பிடுகிற சாமி ." என மெல்லிய  தேய்ந்த குரலில் கூறினார்.

          கிராமத்து ஏற்றத்  தாழ்வுகள் அங்கும் குடி கொண்டுள்ளதை அறிய முடிந்தது. சமணர்களால் இவர்கள் வாழ்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலும் அவர்களின் மனதில் புரையோடி உள்ள இந்த சாதிய தாழ்வுகள் இன்னும் மறையாமல்  , அப்படியே அடி மனதில் புதைந்துள்ளது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள ஊரணிகள் வற்றாமல் இருப்பது , இவர்களின் அறியாமையை நினைத்து நித்தம் கண்ணீர் வடிப்பதால் தானோ ? என்ற எண்ணம் ஏற்படச் செய்தது. மலை மீது இருந்து வழியும் தண்ணீர் கூட  இவர்களின் அறியாமையை, மூடதனத்தை பார்த்து மலை விடும் கண்ணீராகவே தென்பட்டது.

          நானும் அப்பாவியாக , "அங்க தனியா குல தெய்வம் இருக்குன்னா.. இந்த கோவிலில சாமி கும்பிட வர மாட்டங்களா ...?" என்று அதிர்ச்சியுடன் அரிச்சந்திரனிடம் கேட்டேன் . "இல்லை அவர்கள் தாராளமா கும்பிடலாம் ...ஆனா கோவிலுக்கு உள்ள செல்ல அனுமதி கிடையாது.." என்றார். "இன்னும் இந்த  கொடுமை இருக்கா ...காந்தி மீனாச்சி அம்மன் கோவிலுக்கு அரிஜனங்கள் நுழைந்த பின் தான் சென்றார்....அது போல இன்னும் ஒரு காந்தி பிறக்கணும் போல " என்றேன். அதற்குள் அவர் " நாங்கள் யாரயும் தற்போது தடுப்பதில்லை , ஆனாலும் அவர்கள் யாரும் இது வரை இந்த கோவிலுக்குள் சென்று கும்பிடனும்ன்னு அனுமதி கேட்டதும் இல்லை. அந்தமாதிரி யாரும் தப்ப நினைக்கவும் இல்லை .." என்றார்.

     மலையை போல கிரமாமும் தன் பழமையை மறக்காமல் இருக்கிறது . மிகவும் ஆச்சரியம் தான். நீண்ட மௌனத்திற்கு பின் அவர்களிடம் இருந்து விடை பெற்று , எங்கள் காரில் பயணத்தை தொடங்கினோம்.

      சமண மலை விட்டு வெகு தொலைவில் வந்திருப்போம். அப்போது தான் நினைவுக்கு வந்தது , மதியம் உணவு அருந்தவில்லை என்பது . மலையில் வசித்த சமண முனிவர்கள் இப்படித்தான் இயற்க்கை காற்றை சுவாசித்து நீண்ட சக்தியுடன் வாழ்ந்திருப்பார்களா!  என வியக்க வைக்கிறது. மலை மீது இருக்கும் போது , நாங்கள் எந்த அக நினைவுகளும் அற்று , மலையை போன்ற உணர்வுடன் , எங்களுக்குள் சக்திகள் நிரம்பி , அமைதியாகவும் , சாந்தமாகவும் , வந்த வேலையில் கவனாமாக இருந்து இயற்கையை ரசித்து, அதனுடனே லயித்து ,தகவல்களை மட்டும் செகரிப்பவர்களாக இருந்தோம் !
மலை நமக்கு புகட்டும் பாடமும் , வரலாறும் விலை மதிப்புகள் அற்றவை .அவைகள் மீண்டும் எம்மை தன் நினைவுகளுக்குள் அழைப்பதாகவே  உணருகின்றேன் ! அடுத்த முறை புதிய தகவல்கள் நமக்கு தரும் என்று நம்புகிறேன்.

                                                பயணம் தொடரும் ...அடுத்து சாமநத்தம்.
 

Saturday, October 16, 2010

உணர்த்துதல் மற்றும் உணர்தல்

 இன்று சீன அய்யாவின் பிறந்த நாள். அய்யா இன்று போல் என்றும் நலாமாக ,வளமாக வாழ வாழ்த்துகிறேன். அவரின் நட்பு ஒரு வழிகாட்டியாக , என்னை நல் வழிப்படுத்துவதாக   உள்ளது. அவர் தன் வயதை மறந்து அனைவருடனும் நட்பாக பழகுவது என்னை வியக்க வைக்கிறது. பதவியில் இருப்பவர்கள் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பகட்டில்லாத , பதவியின் பந்தாவில்லாத ஒரு நபர். எல்லாருக்கும் ஓடிச் சென்று உதவும் மனப்பான்மை என்னை வியக்க வைக்கிறது. ஒரு கல்லூரி மாணவனைப் போன்று சுறுசுறுப்பு கொண்டவர்.  எழுதும் ஆர்வம் உள்ள அனைவரையும் உற்ச்சாகாப் படுத்தும் ஒரு டானிக். அவரின் பக்க பலம் அவரின் துணைவியார். (மனைவி கிடைப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ... வரிகளை உண்மை ஆக்கியவர். )மதுரை பிளாக்கர் என்றாலே சீனா வர்கள் தான் நினைவில் வருவார் . அவர் அனைவரையும் ஒருமுகப் படுத்தும் விதம் அவர் உயர்வுக்கு எடுத்துக்காட்டாகும். அவரை வாழ்த்த வயதில்லை எனவே வணக்குகிறேன்.


 கடந்த வாரம் என் கணினி என்னுடன் சண்டை போட துவங்கியதால் என்னால் சரியாக என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக மருத்துவரை (அதான் சாப்ட் வேர் இஞ்சினியர் )அழைத்து  சரி செய்துள்ளேன். கடந்த  திங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பயணம் செல்வதற்காக புறப்பட்ட போது ஒரு பெற்றோர் , இரண்டாம் வகுப்பு மாணவியை அழைத்து என் அறையில் காத்திருந்தனர். நான் வேகமாக விரைந்து , காரணம் கேட்டபோது  வெள்ளி மாலை பள்ளி பேருந்தில் தன் புது பையை தொலைத்து விட்டதாக புகார். அதுவும் ஆசிரியர் இது கனமாக இருக்கிறது என கூறி பள்ளி பேருந்தின் லக்ககேஜ்  வைக்கும் இடத்தில் வைத்துள்ளார். இறங்கும் போது காணவில்லை என்று கூறினார்கள். நானும் ஆசிரியரை அழைத்து விசாரிக்கிறேன் என்று மாணவர்களுடன் பயணித்தேன். மதியம் வந்தவுடன் சார் எழாம் வகுப்பு மாணவி திவ்யா என் பையை வைத்துள்ளதாக தெரிகிறது என்றனர். நானும் அழைத்து விசாரிக்கிறேன் என சொல்லி என் வகுப்பிற்கு சென்று படம் நடத்தினேன். பின்பு மறந்து விட்டேன். மீண்டும் மறுநாள் காலை அதே பெற்றோர் சார் எல்லாரிடமும் கெட்டு விசாரித்து கொடுங்கள் . அது புது பை என் இப்படி திருடுகிறார்கள். பிறர் பொருளை எடுக்கக் கூடாது என தெரியாதா ? என அடுக்கினார். அன்று பள்ளி பேருந்தில் சென்றா ஆசிரியரை அழைத்து என்ன விசாரித்தீர்களா என கேட்டேன். ஆமாம் சார் , ஒரு பேக் இருக்கு என்றனர். நான் திவ்யா வீட்டிற்கு சென்றேன் விசாரித்தேன் அதற்கு அவர்கள் அம்மா இல்லை என்று கூறி விட்டதாக சொன்னார் . அவரை வகுப்பிற்கு அனுப்பி விட்டு , ஒரு மாணவியை அழைத்து திவ்யாவை அழைத்து வர செய்தேன். திவ்யா வந்தாள்.
அவள் வந்தவுடன் இரண்டாம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கோபமாக பேசினார். நான் அவர்களை சற்று அமைதியாக இருக்க சொல்லி விட்டு , மெதுவாக திவ்யாவிடம் என்ன நீ நல்ல பிள்ளை ஆயிற்றே..என்னை ஏன் இப்படி தப்ப சொல்லுறாங்க ...? உனக்கு புதுசா பேக் வேண்டுமென்றால் சொல்லு நான் வாங்கி தருகிறேன்.தெரியாம எடுத்திருந்தா என் கிட்ட வந்து கொடுத்திடு ... நானே பச்சில கிடந்துச்சுன்னு கொடுத்து விடுகிறேன். .. ஐந்தாம் வகுப்பு வரை நல்ல  பிள்ளை என பெயரெடுத்து , ஆறாவது சென்றவுடன் குணம் மாறுகிறது என்றால் என் மீது தான் தவறு இருக்கிறது என்றேன். உன்னை நல்ல முறையில் பாடங்களுடன் நல்ல ஒழுக்கத்தை அல்லவா கற்றுக் கொடுத்தேன் , நீ இப்படி மாறிவிட்டாய் என்று சொல்லுவது என்னையே திருடன் என்று கூறுவது போல உள்ளது .. நீ வகுப்பறையில் பேனா கிடந்தாலும் , நோட்டு கிடந்தாலும் சார் யாரோ கீழே போட்டு விட்டார்கள் கொடுத்து விடுங்கள் என்று அல்லவா சொலுவாய் ... நீ செய்திருக்க மாட்டாய் இருப்பினும் நான் வளர்த்த முறை சரி இல்லை போலும் என்று மனம் வருந்தி உரையாற்றினேன்.  மேலும் காலை  வீட்டிற்கு ஆசிரியரை அனுப்புகிறேன் , எடுத்திருந்தால் கொடுத்து விடவும் என்றேன்.   பின்பு அவளை அவள் வகுப்பிற்கு செல்லும் படி சொல்லி விட்டேன்.

     பெற்றோரிடம் விரைவில் எடுத்துக் கொடுக்கிறேன். இரண்டு நாள் விடுமுறை என்பதால் பஸ்ஸில் சென்ற மாணவர்களை அழைத்து பேசி , யார் எடுத்துள்ளார்கள் என கண்டு பிடித்து கொடுக்கிறேன் என்று பெற்றோரையும் அனுப்பி வைத்தேன். மீண்டும் வகுப்பிற்கு சென்று என் வேலையை செய்தேன். மாலை பள்ளி கல்வி அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பினேன். சரியாக எழு மணிக்கு ஒரு போன் வந்தது என் கை தொலை பேசியில் .."சார், நான் திவ்யா சார்,சாரி சார் என்னை மன்னிச்சுடுங்க சார் ... நான் உங்க மாணவி தான் சார்... மனவருத்தப்பட வைத்ததற்க்கு மிகவும் சாரி சார்... நான் தான் அந்த பையை வைத்துள்ளேன்... காலையில டீச்சை அனுப்ப வேண்டாம் நானே பையை கொடுத்து விடுகிறேன்... சார் மன்னிச்சுடுங்க சார் .... இனிமே இந்த தவறை செய்ய மாட்டேன் .. என்று அழும் குரலில்  திவ்யா பேசினால்.

      என் மனைவி என்னை பார்த்தால் "யாருங்க ... எதுவும் பேசாமல் இருக்கீங்க  ...." நடந்ததை சொன்னேன். பரவாயில்லையே உங்க பள்ளிகூடத்தில் இதுவும் நடக்குதா.. நல்ல பிள்ளை.... தவறை உணர்வது மிகவும் அபூர்வம் ... அதை உணர்த்துவது அதை விட அபூர்வம் ... இன்னைக்கு தான் உருப்படியான விஷயத்தை பார்க்கிறேன். " என்றாள்.

   இதற்க்கு முன்னாள் இப்படி பட்ட விசயத்தை சொல்லுவேன் .. ஆனால் நம்ப மாட்டாள் தற்போது ஆவலுடன் இருக்கும் போதே ஒரு மாணவி தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது அவளை உணர்ச்சி வசப் படச் செய்து என்னை பாராட்டச் செய்தது.

   உணர்த்துதல் மற்றும் உணர்தல் எவ்வளவு கடினாமான விஷயம் தெரியுமா...? அதை உணர்பவர்கள் தான் அதன் அருமையை உணர முடியும் . என் பணியினை சரியாக செய்த உணர்வோடு என் பகிர்தலை நிறுத்துகிறேன். உணர்த்தல் வாழ்வு முழுக்க நடைபெறும்.    

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -5

                படிகளில்  இறங்கும்  போது காற்று நம்மை கீழ் நோக்கி தள்ளி , குளத்தில் வீழ்த்திவிடுவது போல் இருந்தது. உடலை இறுக்கி கொண்டு , உயிரை கெட்டியாக பிடித்துக் கொண்டு கீழே இறங்கினோம். ஆம்., மலை மீது இருக்கும் போது உயிர் எங்களிடம்  இல்லை. அது சுதந்திரமாக மலை மீது அலைந்து திரிந்தது. எதவித பற்றுதலும் இல்லை. ஆனால் அங்கு இருந்து கீழே இறங்க இறங்க, எல்லாவற்றின் மீதும் உள்ள பற்றுதல் மீண்டும் தொற்றிக் கொண்டது.  மலை மீது இருந்து அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் பார்க்க அழகாக தெரிந்தது
    


   கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டதற்கு அதிகமான சான்றுகள் வைக்கப்படுகின்றன. இருப்பினும் அங்குள்ள மீன் சின்னம் அதை உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. கோவிலை அழுகுற பெயிண்டிங் செய்துள்ளனர்.இது கல்லில் செதுக்கப்படுள்ளதா அல்லது வரையப்பட்டுள்ளதா  என்ற ஐயப்பாட்டை தோற்றுவிக்கிறது.




கோவிலுக்கு நுழைவதற்கு முன்னாள் ஒரு சின்ன கோவில் உள்ளது . அதன் சுற்று சுவரில் ஒரு கல் பதிக்கப் பட்டுள்ளது . அதில் , முசுறுப்படைகளை விரட்டிய வீரத்தேவன் குறித்த செய்தி நம்மை இந்த மண்ணின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தி இதன் வரலாற்றை  ஆவலுடன் அறிய உதவுகிறது.




மலை மீது இருந்த பேச்சியம்மன் கோவில் கீழே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. குதிரைகள் நம்மை குலை நடுங்கச் செய்கின்றன.காவல் தெய்வங்கள் பலம் பொருந்தி , நம்மை கை எடுத்துக் கும்பிடச் செய்கின்றன. 'காவல் கோட்டம்' படித்தவர்களுக்கு இந்த காவல் வீரரின் கடமைகள் அதன் இரண்டு பக்கங்களிலே அருமையாக விளக்கப்பட்டுள்ளது. அந்த நாவலில் உள்ள சடச்சி இந்த மலையில் தான் தங்கிய உணர்வு  படிக்கும் போது ஏற்படுத்துகிறது. படித்து சொல்லுங்களேன். 



அய்யனார் கோவிலின் புதுமைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தன. கூன் பாண்டியனின் உடல் இரண்டாக பிரிக்கப்பட்டது போன்று இந்த கோவிலும் இரண்டாக பிரிக்கப்பட்டு , ஒருபுறம் சைவ சாமிகளும், மறுபுறம் அசைவ சாமிகளும் உள்ளன. ஒருபுறம் மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட உக்கிரமா பாண்டியன் , பாண்டிய ராஜன், சொக்கேஷ்வரர், பைரவர் என்று உள்ளன. மறுபுறம் வீர பத்திரர்,முனியாண்டி, சோனை சாமி, முத்துக் கருப்பான சாமி ,இருளாயியம்மன் என்ற எல்லா காவல் அசைவ தெய்வங்களும் வைக்கப்பட்டு வணக்கப்படுகின்றன.  
  இந்த கிராம  மக்களின் வாழ்வில் சமணர்கள் தங்கள் கருத்துக்களை பரப்பியுள்ளனர் என்பது இவர்களின் வழிப்பாட்டு முறைகளில் வெளிபடுகிறது. கிராம மக்கள் சமணர்களுக்கு மரியாதை கொடுத்தனர் என்பதும் நம்மை அதிசியக்கச்  செய்கின்றன. காவல் தெய்வங்களுக்கு பலிக் கொடுக்கும் போது , சுவாமி சன்னதிக்கு திரையிடப்படுகிறது. இது உயிர்களை கொல்லாதே என்று சொல்லும் சமணர்களுக்கு மரியாதை என்கின்றனர். 

   கோவில் ஆகம விதிக்களின் படி கட்டப்பட்டுள்ளது , கோவில் இராவதம் என்ற பெண்யானையை உதன்மையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து ரேகை மண்டபம், பாவாடை மண்டவம், பூஜை   மண்டபம் ,அதற்கடுத்து சுவாமி சன்னதி என வடிவமைக்கப்பட்டுள்ளது. 
   
   இது பாண்டியர் காலத்தை சார்ந்தது என்பதற்கு சான்றுகள்....

1. மீனாச்சியம்மன் கோவில் போல் மண்டபம் சிறியதாக உள்ளது. ஆம் மீன்ச்சி யம்மன் கோவில் பழைய  மண்டபம் மிகவும் சிறியதே.     

2. பாவாடை மண்டவத்தில் மீன் சின்னம் பொறிக்கப் பட்டுள்ளது.  நவ கிரகங்கள் உள்ளன. 

3. பாவாடை பூஜை மீனாச்சி அம்மன் கோவிலில் மட்டுமே பாண்டியனின் காலத்திலிருந்து அய்யானாருக்கு நடத்தப்படுகிறது. அதே போல இங்கும் , மார்கழி மாதத்தில் நடத்தப்படுகிறது. இது பிற எல்லை தெய்வங்களுக்கு நடத்தப்படாது என்பது குறிப்பிடத் தக்கது. 

4. மண்டப தூண்களில் சிவன் சிலை , மற்றும் அஷ்ட லச்சுமியின் சிலை இவை பாண்டிய காலத்து கோவில் வடிவமைப்பாகும் . 

5.இந்த கோவில் பாம்பாட்டி சித்தர் என்பவரால் உருவாக்கப்பட்டது . இவர் கார முனிவர்  என அழைக்கப்படுகிறார். மலை மேலேவுள்ள கார் சுனை இவர் பெயாரால் அழைக்கப்படுகிறது. இவர் பாண்டிய காலத்தவர் என்பதாலும் இக் கோவில் பாண்டியர் காலத்தது ஆகும் 

      நம் கண் முன் பல வரலாற்று காட்சிகளை கொண்டு வந்தாலும் சாதிய அமைப்புகளில் இன்னும் மாற்றம் இல்லை என்பதை அங்கே அருகில் உள்ள ஒரு கல் மண்டபம் சாட்சியாக உள்ளது.  
                                   சாதி அது ஒரு தீ ... பொறுக்கவும் . தீ எப்படி என்னை பற்றியது என்பதை அடுத்த முடிவு பகுதி சொல்லும் .  

Friday, October 15, 2010

பள்ளியில் உலக கைகழுவும் தினம் ..

       இன்று அக்டோபர் பதினைந்து என் பள்ளியில் உலக கைகழுவும் தினம் கொண்டாடப்பட்டது. எம் பள்ளி இந்திரா ஆசிரியர் மாணவர்களை கொண்டு கை கழுவுதலின் முக்கியத்துவம் பற்றி அற்புதமான நாடகம் ஒன்றை நடத்திக் கொடுத்தார். மாணவர்களும் தங்கள் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தி இன்று காலை பிரார்த்தனையை பயனுள்ளதாக ஆக்கினர்.


கை எப்படி கழுவ வேண்டும் அந்த நாடகத்தில் அற்புதமாக மருத்துவரிடம் செல்லும் பள்ளி குழந்தைகள் வாயிலாக விளக்கமளித்தது அனைவரையும் கவர்ந்தது. 

                                          நாடகத்தில் நடித்த மாணவர்களுடன் நான்.

    நாடகத்தில் ஒரு காட்சியில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசுவது போல் காட்சி இருந்தது. அதில் துணி துவைத்துக் கொண்டும்  , மற்றொருவர் கீரை ஆய்ந்துக்கொண்டும் இருப்பது போல காட்சி. அதில் தொலைக்கட்சியில் செல்லமா நாடகம் பற்றி பேசுவதில், "இந்தா பாருக்கா, இந்த நாடகத்தில் அவன் வீட்டிலியே திருடுகிறதை...காலம் கேட்டுப் போய் கிடக்கு ..."என்ற எதார்த்தமான வசனம் எல்லாரையும் கை தட்ட செய்தது.



                         
     
    பின்பு மரபாட்சி பொம்மைகளைக்   கொண்டு தன் சுத்தம் பற்றி நாடகம் என்னால் மாணவர்கள் உதவியுடன் செய்து காட்டப்பட்டது. 
மரபாட்சி பொம்மைகள் கொண்டு நாடகம் 

 மாணவர்களைக் கொண்டு எம் பள்ளியில் அடுத்த மாத முதல் வாரத்தில் பொம்மலாட்டம் கண்காட்சி நடத்த உள்ளது. அதில் முப்பது கதைகள் மாணவர்கள் செய்து காட்ட உள்ளனர். எம் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட இன்று முதலே மாணவர்களை தாயார் படுத்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. . 
    
      இன்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் தினம் , மற்றும் பார்வை அற்றவர் தினம் இதன் முக்கியத்துவமும் மாணவர்களுக்கு என்னால் எடுத்து சொல்லப்பட்டது. 

     நாடகத்தில் நடித்த  அனைவருக்கும் பேனா பரிசாக வழங்கப்பட்டது. 


Thursday, October 14, 2010

இரயிலை பார்க்க ....

ரவீந்திர நாத் தாகூர் அவர்களின் நூற்றி ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக , இந்திய ரயில்வே , ஒன்பது மே அன்று ஹவுராவிலிருந்து , தாகூர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தாங்கிய இரயிலை , இரயில்வே அமைச்சர்  மம்தா பானர்ஜி கொடியசைக்க  இயக்கியது. அந்த இரயில் மதுரையை ஒன்பது அக்டோபர் அன்று வந்தடைந்தது. 
                                                                            இரயிலை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் எம் பள்ளி மாணவர்களின் புகைப்படம். 
                 இரயிலில் கண்காட்சியை பார்வையிடும் எம் பள்ளி மாணவர்கள்.                                                                            
                    அந்த இரயிலை பார்க்க திட்டம் தீட்டி , என் பள்ளி செயலர் திரு.பி . சௌந்தர பாண்டியன் அவர்களிடம் அனுமதி பெற்று , திங்கள் பதினொன்று காலை மதுரை ரயில்வே நிலையத்தின் எட்டாவது பிளாட்பாரத்தை நோக்கி, எம் பள்ளியின் நான்காவது, ஐந்தாம் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டோம் . என்னையும் சேர்த்து ஐந்து ஆசிரியர்கள் பள்ளி பேருந்தில் சென்றோம். வெயில் வாட்டினாலும் , தீபாவளி முன்னிட்டு மதுரை அதிகாமான மக்களை சுமந்தது , தன் அழகை வெளிப்படுத்தியது. 


ரயில் நிலையம் இறங்கியவுடன் பாதி மாணவர்கள் நான் இன்னும் ரயிலையே நிஜத்தில் பார்த்தது இல்லை என்று கூறியது  எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும் , அந்த வாய்ப்பை இன்று நாம் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மன மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் இரயிலில் குளிர்சாதன வசதி இருக்கிறதா என ஆச்சரியம் வேறு. குளு குளு பெட்டியில் தாகூரின் நினைவுகளில் மனக் குளிர்ச்சி அடைந்தனர் மாணவர்கள்.


குரு தேவ என்று அழைக்கப்பட்ட தாகூர் கொல்கத்தாவில் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தி ஒன்றில் மே எழாம் நாள் பிறந்தார். எட்டு வயதில் கவிதை புனைந்திருந்த
தாகூர் ,  தனது பதினாறாவது வயதில் முதல் கவிதை தொகுப்பை வெளியிட்டார்.
இவரது தலை சிறந்த படைப்புகள் என்பன கீதாஞ்சலி, கோரா , காரே-பிரே ஆகும்.



இரண்டு நாடுகளின் தேசிய கீதத்தை இயற்றிய தாகூரின் வாழ்வை விளக்கும் என் பள்ளி ஆசிரியை .



                                                 தாகூரின் ஓவியங்களுள் ஒன்று.

           நம் தேசிய கீதமான 'ஜன கன மன' மற்றும் வங்காள தேசத்தின் தேசிய கீதமான 'அமர் ஷோனார் பங்களா ' ஆகிய இரண்டும் தாகூரால் இயற்றப்பட்டவை.   




ஆயிரத்து தொள்ளாயிரத்து  பதிமூன்றாம் ஆண்டில் நோபல் பரிசை பெற்றார். நோபல் பரிசை   பெற்றதில் முதல் ஐரோப்பியரல்லாதவர் என்ற சிறப்பும் உண்டு .   ஆயிரத்திற்கு
மேற்பட்ட கவிதைகள், எட்டு சிறுகதைத் தொகுப்புக்கள், இருபதிற்கு மேற்பட்ட நாடகங்கள், எட்டு நாவல்கள் இவர் எழுதியவைகளாகும் .

 
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதில் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் நடைபெற்ற விவாதத்தில் தன் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க தேவை இல்லாத அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இது அவரின் அறிவு திறத்திற்கு சான்றாகும் .    
தாகூரின் ஓவியத்தை பார்வையிடும் என்பள்ளி மாணவர்கள் .

தாகூரின் ஓவியத்தில் என்னைக் கவர்ந்தது இதோ.... 
தாகூர் பன்முக புலமை பெற்று விளங்கினார். கவிஞர் , நாடக ஆசிரியர், ஓவியர், இசைக் கலைஞர் என்று திகழ்ந்த அவரின் வாழ்க்கை என் மாணவர்களுக்கு பல துறைகளில் சாதிக்கலாம் என்ற ஊக்கத்தை கொடுத்தது. அத்துடன் வெளியே வந்ததும் ரயில்வேயின் எச்சரிக்கை படம் மற்றும் கண்காட்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  


 
பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் தலைமை ஆசிரியர்.

காந்தியுடன் தாகூர். 
பெட்டி ஒன்றில் அவரின் வாழ்க்கை, சாந்தி நிகேதன் , ஸ்ரீ நிகேதன் பற்றி விளக்கும் படங்கள் இருந்தன. 

இரண்டாவது பெட்டியில் பாடல்கள் கவிதைகள் இடம் பெற்றிருந்தன. 
மூன்றாவது பெட்டியில் சிறு கதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் இடம் பெற்று இருந்தன. 
நான்காவது பெட்டியில் ஓவியங்கள் கண்களை கவர்ந்தன. 
ஐந்தாவது பெட்டியில் அவரின் இறுதி பயணம் குறித்து விளக்கப்பட்டு இருந்தது.  

       மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த இந்த ரயிலை ஏற்பாடு செய்து கொடுத்த ரயில்வே துறைக்கு எம் பள்ளி சார்பாக வாழ்த்துக்கள். இன்று ரயில் ராமேஸ்வரம் அடைந்துள்ளது.  

Saturday, October 9, 2010

உன் மனதை காட்டி ...

என் கண்கள் உன்னை பார்க்கும்
நீ உன் மனதை காட்டி
என் மனதில் பதிந்து  போகிறாய்
நீ மட்டுமே என் நெஞ்சில் உறங்கினாலும்
என் தூக்கத்திலும் வந்து வசியப்படுத்துகிறாய்...
என் மனைவி இருக்கும் போதும்
என்மீது உறங்கும் உரிமை உனக்கு கொடுக்கப்பட்டுள்ளது...
அவள் உன் மீது என்றும் பொறாமை பட்டது கிடையாது ....
நீ அதிகநேரம் என் மீது உறங்கினால்
கசங்கி விடுவாய் என்று ...
அவளே உன்னை பாதுகாப்பாய் பார்த்துக் கொள்கிறாள்  ....
என் குழந்தைகளும் என்னுடன் நீ உறவாடுவதை பார்த்து
உன்னுடன் உறவு கொள்ளத் துடிக்கின்றன...
நான் இல்லாத சமயங்களில் நீ ...
அவர்களுக்கும் துணையாக இருக்கிறாய் .!
என் மனைவி, என் குழந்தைகள்
என் தாய் , தந்தை
என் உற்றார் , உறவினர்
என அனைவரும் உன்னுடன் பேசி சிரிக்கின்றனர்,  வியக்கின்றனர்.
என்னையும் உன்னால் பாராட்டுகின்றனர். ..!
மரங்களை அழித்தது பிறந்தாய் என்பதை தவிர்த்து
வேறு குறை இல்லை ..!

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -4




           சமணர்கள் படுக்கை பற்றி கதைகள் என்னை மேலும் ஆச்சரியப் படுத்தின. அங்கு உள்ள தீர்தங்கர்கள் சிலை மற்றும் அதிலுள்ள பிராமி கல்வெட்டுகள் எனக்கு அதன்மீது தனிப்பட்ட காதலை உருவாக்கியது. மலையில் உருவங்கள் செதுக்கப்பட்டு இருந்தாலும் , அவை என் இதயத்தை செதுக்கி கொண்டிருந்தன.  ஒரு முதல் வகுப்பு மாணவனைப் போல் ஆர்வமுடன் அந்த எழுத்துக்களை கற்றுக் கொள்வதற்கு என்னை தாயார் படுத்திக் கொண்டேன். அதன் விளைவு எனக்குள் ஒரு தேடுதலை உண்டாக்கியது. மறுநாள் மதுரையின் தொல்லியல் துறை அலுவலகம் சென்று மதுரையின் தொன்மை சம்பந்தமாக  ஆராய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.  பிராமி எழுத்துக்கள் மட்டுமின்றி , நம் தமிழ் எழுத்து வடிவத்தின் பரிமாணத்தை பற்றி அறிந்து அது சம்பந்தமான புத்தகங்கள் வாங்கி வந்தேன். 

         மலையின் முகப்பிலிருந்து புகைப்படம் எடுக்க நினைத்து , காசியையும் அழைத்து மலையின் ஓரத்தில் நின்று போஸ் கொடுக்க முயலும் போது தெரியாமல் , பின்னே திரும்பி பார்த்தேன், தலை சுற்ற ஆரம்பித்தது. நாம் எவ்வளவு உச்சியில் இருக்கிறோம் , இப்படியே கிழே விழுந்தால் எலும்புக் கூட மிஞ்சாது என்ற கற்பனையே , என்னை பயமுறுத்தி , அங்கிருந்து நகரச் செய்தது. அதன் மீது நின்று பார்க்கும் போது வெள்ளைச் சாமி கல்லூரியின் கட்டிட அமைப்பு அழகாக இருந்தது. இம் மலை எட்டு மலைகளின் தலைமை இடமாக இருந்திருக்கலாம் என்பது உறுதியாகிறது. நான்கு பக்கமும் அந்த எட்டு மலைகளும் இங்கிருந்து அழகாகத் தெரிகிறது. 

இந்த மலையில் ஆறு சமணப் படுக்கைகள் உள்ளன. அவை பஞ்ச பாண்டவர் கதைகளை இங்கே தொடர்பு படுத்து கின்றன. பாண்டவர்கள் ஐவரும் இந்த மலையில் தங்கியதாகவும் , பாஞ்சாலிக்கு ஒரு படுக்கையும் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படும் கதைகள் இம் மலைமீது கொண்டுள்ள காதலை அதிகப்படுத்துவதாக உள்ளது.


                                                                                                                                            
கார் ஊற்றை நோக்கிய எங்கள் பயணம் மிகவும் கடினமானதாகவே இருந்தது. ரவி பறைகளில் தாவித் தாவி வந்தார். இருப்பினும் மலை ஏறும் போது  எளிதாக இருந்தது. கார் ஊற்றுக்கு  செல்லும் போது பாதை மீண்டும் சரிந்தது , அது மிகவும் கடினமானதாகவே இருந்தது . என்னுள் மலையின் மீது இறக்குவது என்பது அதிக பயத்தை உண்டாக்கியது. இம்  முனிவர்கள் எதற்கு பயந்து மலைகளை  தேர்ந்தெடுத்தார்கள் அல்லது யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காவா  ? என்பது மிகவும் யூகிக்க கடினமானதாகவே இருந்தது. அவர்கள் விட்டுச் சென்ற தடங்கள் அவர்களின் மகிமையை உறுதி செய்தது.    பாறைகளில் தவழ்ந்து , ஒருவருக்கொருவர் கைகளை பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்கினோம். பயணம் ஆபத்தானதாக இருந்தாலும் , ஆனந்தமானதாகவே இருந்தது. இமய  மலை ஏறிய டென்சிங் பயணம் எவ்வளவு கடுமையானதாக இருந்திருக்கும் என்று என்னை தொடர்பு படுத்தி பார்க்கச் செய்தது. 

பாறைகளில் இறங்குவது மிகவும் கடினமான செயலாகவே பட்டது. ஏறும்போது எளிமையாகவே இருந்தது. ரவி என்னை அன்புடன் கனிவான சொற்களால் அழைத்து சென்றார். மலையில் காலடி எடுத்து வைத்தவுடன் தானாக மனம் அன்பு வயப்பட்டு , கனிவான சொற்களால் எங்களை வழிநடத்தியது. நான் பயந்த போதெல்லாம் காசியும் ரவியும் என்னை தேற்றினார்கள்.ஒரு வழியாக இறங்கி விட்டோம் என்று நினைத்தபோது , புல் புதர்கள் சில இடங்களில் மண்டிக் கிடந்தன. சாம்பு ராணி அதிகமாக திரிந்தது  . எனக்கு பாம்பு இருக்குமோ என்று பயம் . "காசி இங்கு பாம்பு எதுவும் இருக்குமா...?"என்றேன். இருக்கலாம். பாறை இடுக்குகளில் தேள்  இருக்க வாய்ப்பு உண்டு என்று என்னை பயமுறுத்தினான். 

      சமணர்கள் மூலிகை வைத்தியம் நன்கு அறிந்தவர்கள். இதனால் இப்பகுதி மக்களுக்கு மூலிகைகள் பற்றி நன்கு பரிச்சயம் உண்டு என்றான். மேலும் பாம்பு வராமலிருக்க பொங்கலுக்கு நம் வீடுகளில் வைக்கப்படும் கூரைப்பூவையும் , துளசியும் சேர்த்து வைத்தால் , நம்மை பாம்பு அண்டாது என்றான். பாம்பு பிடிப்பவர்கள் இதை இரண்டையும் வைத்திருப்பார்கள் என்றான். 
   
    மலையில் உள்ள செடிகளில் நறுமணம் எங்களை உற்ச்சாகத்துடன் வைத்து இருந்தது. காற்று எங்களுக்கு உறக்கத்தை அளிப்பதை விட்டு , ஒரு வித சந்தோசத்தையும் , அதன் மீது ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தியது. ஒருவழியாக கார் சுனையை அடைந்தோம். அதில் உள்ள தண்ணீர் மிகவும் தூய்மையானதாக இருந்தது . குடித்தோம். தாகம் தணிந்தது. பயத்தால் உறைந்திருந்த நாக்கு தற்போது உற்சாகம் எடுத்து பேசத்தொடங்கியது. கார் ஊத்திற்க்கு அருகில் சிறிய பாறை ஒரு ஆள் படுத்து உறங்குவதற்கு ஏற்றாற்போல் இருந்தது. அதன் அருகில் நம்மவர்கள் பாறைகளை வைத்து தீ மூட்டி கோழி வாட்டி இருந்ததற்கான தடங்கள் இருந்தன. அருகில் மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு இருந்தன. சைவம் போதித்த சமண மலையில் அசைவம் குடிகொண்டு விட்டது. 

        மலையை ரசித்தவாறு , மீண்டும் ஏறத் தொடங்கினோம். இப்போது வானம் இருட்டியது. திருப்பரம் குன்றம் மலை அருகில் மழை பெய்திருக்கும் என் நினைக்கிறேன். வானவில் தெரிந்தது.     ரவி மலையில் மழை நேரத்தில் இருப்பது ஆபத்து. மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே நாம் விரைவில் கிழே இறங்குவோம் என்று எச்சரித்தார்.காசி  அங்கிருந்த விநாயகர் மூஞ்சி போல உள்ள மலையை காட்டினான். புகைப்படம் எடுத்துக் கொண்டேன். தனியாக ஒற்றை பாறை மட்டும் நிற்பது போல் உள்ள பாறை எங்கு உள்ளது என்று கேட்டேன். அது மேலக் குயில் குடி பகுதியில் இருக்கும் என்றான் .

      மலையின் மீது உள்ள பேச்சியம்மன் கோவில் கீழே குடிப்  பெயர்ந்ததற்கான காரணம் ஆச்சரியப் படுத்துகிறது . இந்த கோவில் சொல்லும் கதை என்னை வியக்க வைக்கிறது. இங்குள்ள பேட்சியம்மன் மதுரை மீனச்சியம்மன் கோவில் வரை ஆட்சி நடத்தியதாகவும், தவறு செய்தவர்களை கட்டுப்படுத்தியதாகவும் சொல்லுகின்றனர். அதனால் இக்கோவில் அங்கிருந்து கீழே இறக்கப்பட்டதாக ஒரு வரலாற்றை சிறுவர்களும், விவரமறிந்த பலர் இது பாண்டியன் காலத்தில் சைவ சமய பிரச்சனையில்   அழிக்கப்பட்டது, அதில் இருந்த சிலைகள் இன்றுவரை கீழே காக்கப்படுகின்றன என்று சொல்கின்றனர். . மேலும் உக்கிரமப் பாண்டியனால் இக்கோவில் எழுப்பப்பட்டு தற்போது  கீழே உள்ளது என்கிறார். இது பாண்டிய மன்னனால் தான் உருவாக்கப்பட்டது என்பதற்கு பல காரணங்களை முன் வைக்கிறார்.        

                                                                                 மலை  பேசுவது தொடரும். 

Tuesday, October 5, 2010

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -3

   இன்று கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்தக்  கல்வி கட்டணம் தொடர்பான உயர்நீதி மன்றத் தீர்ப்பில் ஏழை மாணவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டமே வசூலிக்க வேண்டும் . மேலும் மேல் முறையீடு செய்தவர்களுக்கு கமிட்டி பரிந்துரைக்கும் கட்டணம் தான் செல்லும் . அதனால் விரைவில் கமிட்டி மேல் முறையீட்டு பள்ளிகளை மறு ஆய்வு செய்து அனைத்து மாணவர்களுக்கும் வழி பிறக்கச்  செய்யும் என்று நம்புவோம்.



       என்ன சமண மலை பற்றித் தகவல்களை சொல்லாமல் நேரத்தை வீணடிக்கிறீர்கள் ?என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். கல்வி தான் நம் சொத்து. அதை பற்றி செய்தியை கொடுக்காமல் சென்றால் என் மனம் வருத்தப்படும். பாருங்கள் வருத்தம் என்றவுடன் எனக்கு கீழக் குயில் குடி மலை  பராமரிப்பை நினைத்து வருத்தப்படுகிறேன்.

       காற்று என்னை முன்னோக்கி தள்ள தள்ள அனைத்தும் பின்னோக்கி செல்லத் தொடங்கின. ஆம் ... மரம் , செடி , கொடி , எதிரே தென் படும் வானம் என எல்லாம் பின்னோக்கி நகர ,என் முன்னேயுள்ள பாறைகள் தன்  காலச் சக்கரத்தை  பின் நோக்கி நகர்த்தி வரலாற்றை சொல்லத் தொடங்கின...

        மலையின் உச்சியில் கோவில் இருந்ததற்கான திட்டுக்கள் இருந்தன. கோவில் தூண்கள்  அதற்கு அருகில் உள்ள பாறையிலிருந்து உடைக்கப்பட்டு எடுக்கப்பட்டிருந்தது .பாறையிலிருந்து கோவிலுக்கான தூண்கள் வெட்டி எடுத்ததற்கான அடையாளம் உள்ளது. இதை தான் ரவி என்னிடம் சுட்டிக்காட்டினார். கோவில் இருந்ததற்கான அடையாளம் உள்ள இடம் பேச்சியம்மன் திட்டு என்று அழைக்கப்படுகிறது.

          பார்த்தீர்களா ............என் வருத்தத்தை மலைக்  காற்றின் ஆனந்தத்தில் சொல்ல மறந்து விட்டேன்.    பேச்சியம்மன் திட்டுக்கு கீழே உள்ள பறையில் சிறிய சுனை உள்ளது. இப்போது அதில் கலர் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அய்யனார் கோவில் குளத்திலிருந்து தனியாக பைப் போடப்பட்டுள்ளது. நான் சென்றது மழைக் காலமானதால் தண்ணீர் நிரம்பி அந்த குளத்திலிருந்து வழிந்துக் கொண்டிருந்தது. ஆடு மேய்க்கும் காசி ,"சார், மலை தொடர்ந்து பெய்வதால , குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி நிறைய இருக்கு , அதுவும் இந்த சுவர் வரை இருக்கு மலை அற்றக்  காலங்களில் ...,அந்த பறை திட்டு வரை தான் இருக்கும் "என்றான்.சுனையில் தண்ணீர் வற்றிவிட்டால் மோட்டார் போட்டு நிரப்பபடுகிறது.


        சுனை உள்ள பறையின் மீது தீர்த்தங்கர்கள் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் தீபம் ஏற்றுவதற்கு திண்டுகள் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தீர்த்தங்க்கர் உருவம் சிதைக்கப்பட்டுள்ளது. அதை கூர்ந்து பார்த்தவுடன் , மிகவும் வருத்தப்பட்டது. அரிச்சந்திரன் , "இது தற்காலத்தில் சில விசமிகளால் அழிக்கப்பட்டது. எந்நேரமும் மாலையின் மீது கவனம் இருந்தாலும் சில சமயங்களில் எங்களையும் மீறி தண்ணி (அதாங்க சாராயம் ) போட்டு இதன் மகிமை தெரியாமல் அட்டுழியங்கள் செய்கிறார்கள்.  அடிச்சு விரட்டியும் விட்டுருக்கேன்...."என ஆதங்கப்படுகிறார்.       
  
       மலை முழுவதும் பீர் பாட்டில்கள் உடைக்கப்பட்டு உள்ளன. சாராய பாட்டில்கள் உடைக்கப்பட்டுள்ளன. அப்போது தான் நாங்கள் செல்லும் முன் இரண்டு பெண்களும் , ஒரு இளைஞனும்  கைகோர்த்து எதையோ சாதித்தவர்கள் போல் சென்றனர். ( என்ன இயலாமையில் வந்த வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். இயன்றாலும் இதன் புனிதத்தை கெடுப்பதில் உடன் பாடில்லை. )  

       காசியிடம் ,என்ன மலைமீது அமர்ந்து பீர், சாராயம் குடிப்பதில் இவ்வளவு ஆனந்தம் இவர்களுக்கு என்று கேட்டேன். அதற்கு அவன் சார், குடிக்கட்டும் , குத்தடிக்கட்டும் அது பரவாயில்லை .. குடித்த பாட்டில்களை மழைக்கு கீழே போட்டாலும் பரவாயில்லை அல்லது அப்படியே ஓரத்தில் வைத்தால் என்னை போன்று மாடு மேய்க்கும் யாரவது அதை அடுத்து அப்புறப்படுத்துவோம். இது போல பறையில் சிதறு தேங்காய் போல் சிதறவிடுவது மிகவும் ஆபத்து என்றான்.


        காசி எங்களை பேச்சியம்மன் திட்டிற்கு செங்குத்தான பாறையில் தவழ்ந்தவாறே  அழைத்து சென்றான். ஆனால் அவன் தன் குதிங்காலை உண்றி அருமையாக நடந்தான். என் வூட் லேன்ட் செருப்பை கீழே உள்ள சுனைக்கு அருகில் உள்ள பறையின் ஓரத்தில்  வைத்து நடக்க ஆரம்பித்தேன். சார் சும்மா வைங்க யாரும் இங்க வர மாட்டாங்க ...அப்படியே தூக்கி சென்றாலும் மலை இறங்கும் முன் நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்று தைரியம் சொல்லி என்னை மேலே அழைத்தான் . நல்ல வேலை என் கவனம் முழுவதும் செருப்பில் சென்று (இரண்டாயிரத்து ஐநூறு ) என் பயணம் சுவையில்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தை போக்கிவிட்டான்.
    
          பாறையில் ஏறும் போதே  தண்ணீர் வழிந்தோடிய தடங்கள் இருந்தன. அவை பறையில் தெளிவாக தெரிந்தன. நான் அந்த வழித்தடங்களில் நடந்த போது ," சார் அதில் நடக்காதீர்கள் , அது பிடிப்பு இருக்காது, உங்களை கீழே வழுக்கி விழச் செய்யும் , அப்படி கீழே தள்ளுவது போல தோன்றினால் உடம்பை நன்றாக கீழே விழாத படி பிடித்து அந்த இடத்திலேயே அப்படியே நின்று விடுங்கள். இப்படி தான் என் தம்பி சின்ன பிள்ளையில் தவறி வ்ழுந்து விட்டான் , நான் வேகமாக சென்று அவன் கால்களை பிடித்து காப்பாற்றி விட்டேன். .."என் திகில் அடையவைத்து என் சந்தோசமான நடையில் தயக்கத்தை உண்டாக்கினான்.    ரவி எந்தவித பயமும் இன்றி வேகமாக ஏறினார். 
    
            மனிதனுக்குத் தான் தன் உயிர் மீது எத்தனை பிடிப்பு. வாழ்க்கையில் பிடிப்புக்கள் கூடாது என்று தான் எந்த பிடிமானமும் இல்லாத இந்த செங்குத்தான பறைகளை சமணர்கள் தேர்ந்தெடுத்தார்கள் போலும் . ஒவ்வொரு வழுக்களும் நமக்கு வாழ்வின் சறுக்கலை போதிப்பதாகவே உணர்ந்தேன். சமண போதனைகள் உயிர்களிடத்து அன்பு செய் , உயிர்களை கொல்லாதே என்பதை உணர்த்தவே ,தன் உயிர் மீது உள்ள மதிப்பு அறியவே இந்த செங்குத்தான பாறைகளை தேர்ந்தெடுத்து பள்ளிகள் அமைத்திருப்பார்களோ என்று நான் அசை போடத் துவங்கி இருந்தேன்.


             மலையின் உச்சியை தொட்டவுடன் மலைமீது பேச்சியம்மன் திட்டு அமைந்து இருந்தது. அதற்கு அருகில் புனித மரம் அரசமரம் புதிதாக நடப்பட்டு இருந்தது. அதற்கு மிக அருகில் மற்றொரு மரம் வைத்து இருந்தனர். ஆனால் அது உயிர் பெறவில்லை. வளர்ந்த இந்த மரம் வைத்து ஐந்து ஆறாண்டுகள் இருக்கும் என்று காசி சொன்னான். அதனை தொடர்ந்து சமவெளி பகுதி இருந்தது. பரந்த  பறை திட்டு. ஓடினேன். பாடினேன். காசியின் ஆட்டுக்குட்டியை கையில் எடுத்துக் கொஞ்சினேன். ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடியது. என் உடல் அசைவுகளுக்கு தகுந்த வண்ணம் காற்றும் என்னோடு சேர்ந்து நடனமாடியது. ரவி பெரும் மகிழ்ச்சியில் பேச்சு அற்று இருந்தார். திடீர் என ஞானம் பெற்றவரை போன்று பேசத் தொடங்கினார். "இந்த இடம் மட்டும் பிள்டர்சுக்கு தெரிந்தது ,இதை பட்டா போட்டு விற்று, காட்டேஜ் அமைத்து விடுவார்கள் "என்று என்னை திகிலடைய செய்தார்.


       "சார் அந்தா இருக்கு  பாருங்க ...அங்க ஒரு தீபம் ஏற்றும் சட்டி தெரிகிறாதா ....?வாங்க அழைத்து செல்லுகிறேன்" என்றான் . அதன் அருகில் போக முடியுமா..? என தயங்கிய என்னை, ரவி இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் வாருங்கள் என்று உற்சாகம் ஊட்டினார். மலை உற்சாகம் ஊட்டியது, ஒரு பெண்ணை போல் வெட்கப்படாமல் தன் அழகை ஒரு பேரழகனை போல நெஞ்சை முறுக்கி , தன் கட்டுடலை காட்டிக்  கவர்ந்தது. இப்போது சமவெளியை கடந்து பாறைகள் கரடு முரடாக இருக்க , ஆடுகள் சர்வ சாதரணமாக ஓட்டப்பந்தயத்தில் தாவிகுதித்து ஓடும் தடகள வீரனைப் போன்று தாண்டிச்  சென்றது. அவைகள் அவனுக்கு வழிகாட்டியது போலவே உணர்ந்தேன். ஏசு மலை மீது தன் கைகளில் ஆட்டுக் குட்டியை சுமந்து இருப்பது நினைவில் வந்தது. ஒருவேளை ஆடுகள் மலைகளில் அவருக்கு சரியான பாதையை வழிக் காட்டி இருக்குமோ என்று நினைக்கத் தோன்றியது. அதற்குள் ரவி , ஏம்பா ஆடும் உன்னுடனே வருகிறதே என்றார்.ஆமாம் சார் பாதை காண்பிக்க அது உதவும். திடீர் என்று மலை வந்தால் , வீட்டிற்கு செல்ல எளிதான அதே சமயம் ஆபத்தில்லாமல் பயணிக்க அது தான் எனக்கு வழிக் காட்டும் என்றான் .  தண்ணீர் தாகம் எடுக்கவே "தம்பி காசி,இங்க குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்றேன்?" . "சார், கீழே ஒரு சுனை இருக்கு வாங்க" என்றான். திரும்ப கீழே செல்ல வேண்டுமா...என்றேன். இல்லை சார் . இந்த பாறை ஏறி கடந்தால் , பின் ஒரு பாறை கீழ் நோக்கி செல்லும் , அங்கு ஒரு பெரிய பாறை உள்ளது .அதன் கீழ் ஒரு சுனை உள்ளது. அதன் பெயர் கார் சுனை என்றான்.  அது குளம் போல இருக்கும் என்றான். ரவி குளிக்கலாமா என்றார். அவனும் ,"ஆழம் குறைவுதான் இருந்தாலும் நீச்சல் தெரிய வேண்டும் ... உங்களுக்கு தெரியுமா..?"எனக்   கேட்ட மாத்திரத்தில் ,, "டவுனுல எவனுக்கு நீச்சல் தெரியும்" என்றேன். எனக்கு தெரியாது என பளிச் பதில் தந்தேன். அப்போது ஒரு சமணரை போல போதிக்க தொடங்கினான்.


         "சார், தனியா வந்திருக்கீங்க , முன்ன பின்ன தெரியாத யாருகிட்டயும், இப்படி தெரியாதுன்னு சொல்லாதீங்க ,,, அப்புறம் அழைத்து சென்று தள்ளி விடுவார்கள். ... " என எனக்கு தெரியாத ஒன்றை கற்றுத் தந்தான். எதை கேட்டாலும் தெரியும் என நடியுங்கள். "சார், இங்க சில வருடங்களுக்கு முன் எலும்பு கூடுகள் கண்டு எடுத்திருக்கிறார்கள். எல்லாம் கொலையாம் , தெரியாத  யாரும் கூப்பிட்டால் , இப்படி பட்ட மலைகளுக்கு வராதீங்க" என பாடம் புகட்டினான். உயிர்கள் கொல்லாமை போதித்த மலையில் உயிர் பலியா...? இல்லை அது வடக்கிருந்து உயிர் துறந்தவர்கள் எலும்பா ...? என மார்புக்குட்டுக்குள் உள்ள இதயம் வேகமாக அடித்து என்னை முச்சிரைக்கச் செய்தது.

       பயணம் தொடரும் திகிலுடன் காத்திருக்கவும்.

Monday, October 4, 2010

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -2

      மலை தன் வரலாறு கூறுக என கட்டுரை எழுத சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது . அது எவ்வளவு அபத்தமானது என்பது இப்போது புரிகிறது. வெறும் படத்தில் மலையைக் காட்டி அதன் வரலாற்றை எழுதச் சொல்லுவது எவ்வளவு பெரிய தவறு..! கிட்ட சென்று மலையைப் பார்த்த என்னாலே மலையை சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. பின் எப்படி ...? கற்பனைக் கட்டுரை என்று சொல்லியே கற்பனையே செய்ய முடியாத ஒன்றை இத்தனை நாள் செய்யச் சொல்லியிருப்பதை நினைத்து வருந்துகிறேன். 


      மணாவின்  தமிழகத்தடங்கள் புத்தகத்தில் கழுவேற்றம் பற்றி படித்தது எனக்கு நினைவில் வந்தது. சமணர்களை எதிர்த்த பாண்டியன் வரலாறுக்கும் இந்த மலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று கேட்டேன். விரிவாக கூறினார். நம்ப முடிய வில்லை இருந்தாலும் நம்பித் தான் ஆக வேண்டியுள்ளது.

      பாண்டிய மன்னர்கள் காலத்தில் சமண சமயம் மதுரையில் பிரபலமடைந்தது. சைவ மதத்தை சேர்ந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சியும் , பொறாமையும் கொண்டனர். சமண மதம் தழைத்து வருவதை கண்ட கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசி அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

     எட்டாம் நூற்றாண்டில் இந்த மலையில் நாற்பத்திஎட்டு தீர்தங்கர்கள் (சமண குருக்கள் )   இருந்ததாகவும் , அவர்களை தழுவி எட்டாயிரம் சீடர்கள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். இப்படி சமணம் வளர்ந்த நிலையில் , கூன் பாண்டியன் வெப்பு நோயால் அவதிபட்டான். அரண்மனை வைத்தியர்களால் குணப்படுத்த  முடிய வில்லை. மன்னன் குணம் பெற ஆன்மிக வழியில் சமண முனிவர்களை நாடினார். சமண குருக்களும் மூலிகை வைத்தியம் மற்றும் தியானம் மூலம் மன்னனை குணப்படுத்த முயற்சி செய்தனர்.

     சமயம் பார்த்த மங்கயர்க்கரசி அமைச்சர் குலச்சிரையர் மூலம் , திருஞான சம்பந்தருக்கு தூது அனுப்பினார். சமயம் பார்த்து பழி தீர்க்க நினைத்த அவரும்
விரைந்தார். தானும் வைத்தியம் பார்த்து குணப்படுத்துவதாக கூறினார். அப்படி தன்னால் உங்கள் வெப்பு நோய் குணமானால் , சமணர்கள் அனைவரையும் கழுவேற்றம் செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

       மன்னனின் உடல் இரண்டாக பிரிக்கப்பட்டு , ஒருபுறம் அதாவது வலப்புறம் சைவ சமயம் சார்ந்தவர்களால் வைத்தியம் பார்ப்பது எனவும் , மறுபுறம் அதாவது இடபுறம் சமண குருக்களால் வைத்தியம் பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு , வைத்தியம் ஆராம்பமாயிற்று . என்ன நடந்திருக்கும் ...?

        திருஞான சம்பந்தர் பதிகம் பாடி , திருநீறு பூசி , வலது பக்கம் நோய் குணமாக , இடது பக்கம் வலப்பக்கத்தின் குளிர்ச்சி தங்காமல் வெப்பு அதிகமாக , மன்னன் திருஞான சம்பந்தரை
இடது பக்கமும் வைத்தியம் பார்க்க சொல்ல , இடது பக்கமும் திருநீறு பூசி , நோயை முற்றிலும் குணமாக்கினார். பின் என்ன நடந்திருக்கும் ..?

           மாணா தமிழகத்  தடங்களில் சொல்லியிருப்பதில் சில கருத்துக்கள் மாறுபட்டாலும் , இவை உண்மைதான் என்பது ஒரு ஒப்பிட்டில் யூகிக்க முடிகிறது.

            நோயை குணப்படுத்த முடியாத சமண குருமார்கள் நாற்பத்தி எட்டு பேரும், இந்த     
மலையின் உச்சியில் கழுவேற்றப்பட்டனர். கழுவேற்றம் நடந்த மலை உச்சி இரத்த நிறத்தில் இருக்கிறது. இப்போது அந்த இடத்தின் அருகில் அய்யனார் கோவில் தீப விளக்கு  உள்ளது. மலையின் உச்சிப் பகுதி அதுவே ஆகும்.

            மீதம் உள்ள எட்டாயிரம் சமண மதத்தைப் பின்பற்றியவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள தற்போது சாமநத்தம் என்று அழைக்கப்படும் இடத்தில் கழுவேற்றம் செய்ய பட்டனர்.இது மதுரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவாகும். விரைவில் அப்பகுதிக்கும் சென்று பார்த்து எழுதுகிறேன்.

         சமணர் ரத்தம் சிந்திய அப்பகுதி , மதுரை தமிழில் சாம ரத்தம் என்று அழைக்கப்பட்டு, அதுவே அவரச உலகில்( சாம ரத்தம் வேகமாக அழைத்து பாருங்கள் ) சாமநத்தம் என்று அழைக்கப்படுகிறது. மாணா இதை சாம்பல் நத்தம் என்பது தான் சுருங்கி சாமநத்தம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார். எது பொருத்தம் என்பது வரலாற்று ஆசிரியர்கள்தான் கூறவேண்டும். அதே போல் சமணர்களுக்கும் , சைவ சமயத்தவருக்கும் சமய வாதம் நடை பெற்றதாகவும் , சாந்த குணம் படைத்த சமணர்கள் அவர்களை வெல்ல முடியாததால் கழுவேற்றம் செய்யப்பட்டார்கள் என்கிறார்.


         இது பற்றி குறிப்புகள் பெரிய புராணத்தில் உள்ளளன. சித்திரை திருவிழாவில் ஆறாவது நாள் கழுவேற்றம் ஆகும்.

  இந்த சமண மலையில் சில பாண்டிய மன்னார்கள் நோன்பு இருந்து உடலை வருத்தி இறந்து போனதாகவும் சிலர் கூறுகின்றனர். (உடல் வருத்தி இறந்த மன்னன் உக்கிர பாண்டியன் எனவும் சொல்லுகின்றனர். )

       அய்யனார் கோவில் இடப்புறம் மலை ஏறி செல்ல படிகள் அழகாக வெட்டப்பட்டுள்ளன. படிகள் இருபுறமும் கம்பிகள் பிடிமானமாக உள்ளது. மலை செங்குத்தாக செல்கிறது. மூச்சு வாங்குகிறது . கொஞ்சம் இளைப்பாற கம்பியை பிடித்து நிற்கிறேன். தூர உருவங்கள் ஊர்வது  தெரிகிறது. காற்று அருமையாக வீசி என் வியர்வையை காணமல் போகச் செய்கிறது. மலையில் இருந்து சரிந்து விழுந்தால் நேராக குளத்தில் போய் விழலாம். குளத்தில் நான்கைந்து வாலிபர்கள் குதித்து விளையாடுகின்றனர். நீந்துகின்றனர். மலையின் மேல் இருந்து நீர் ஒழுகி வருகிறது . அது  நேராக இந்த குளத்தில் விழுகிறது. வியப்பாக இருக்கிறது. என்னுடன் வந்த மற்றுமொரு தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் என்னை வியப்பில் பார்கிறார். "உங்கள் ஆர்வம் என்னை ஆச்சரியபடுத்துகிறது" என்று என்னையே வியந்து பார்கிறார். அவரின் பார்வை என்னை கூசச் செய்தது . அவரையும் போஸ் கொடுக்க சொல்லி ஒரு புகைப்படம் எடுத்து சமாதனப் படுத்தினேன் . 

     மலை மீது  சில தீர்த்தங்கர்கள் உருவம்  செதுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏதோ பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளது. "சரவணன்....இங்க வாங்க .." என அழைத்த ரவியை நோக்கி சென்றேன். இன்னும் வியப்பு காத்திருகிறது. மலை தன் வரலாற்றை கூறுகிறது அப்போது புரிந்தது மாணவர்களிடன் அவர்களின் கற்பனைக்கு எட்டாத விசயங்களை எழுத செய்வது அபத்தம் ஆகும் .

     ரவியை நோக்கி பயணம் ....காற்று என்னை தள்ளிக் கொண்டு அவர் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றது. காற்றின் அருமை மலையில் தான் தெரிகிறது . நான் இப்போது மலையின் உச்சியில் இருந்தாலும் பறந்து கொண்டு இருந்தேன். மலையின் பரவசம் அதனை தொட்டு , மிதித்து , அதன் மீது பயணிப்பவர்களுக்கு தான் தெரியும். யானை மீது சவாரி செய்வது போல் உணர்ந்தேன். மிதக்கிறேன் .  எந்தன் பரவசத்தை எப்படி சொல்லுவது....? விவரிக்க வார்த்தை இல்லை . அப்போது என் பார்வை மலையின் ஒரு இடத்தில் குவிந்தது.

         (மலை தொடர்ந்து பேசும் )
        
  

Saturday, October 2, 2010

மதுரை கீழக்குயில்குடி சமணர்மலை -1




        கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சமணர்களின் வரலாற்றை தாங்கி கம்பிரமாக நிற்கும் கீழக் குயில்குடி சமண மலை தன்னுள் புதைத்துள்ள வரலாறு நம்மை பிரமிக்க வைக்கிறது. நான்கு வழிச்சாலை வழியாக  நுழையும் போதே மிடுக்கான தோற்றத்துடன் வெளிப்பட்டு நம்மை ஆர்வமூட்டுக்கிறது. மதுரையிலிருந்து நாகமலை புதுக்கோட்டை செல்லும் வழியில் கீழக்குயில் குடி உள்ளது .மெயின் ரோட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அய்யனார் கோவிலை அடிவாரத்தில் கொண்டு சமண மலை நம்மை வரவேற்கிறது.

        கடம்ப மரம், மருத மரம் , வில்வ மரம் , நாவல் மரம் , ஆல மரம், கருங்கால வேங்கை என அத்தனை புனித மரங்களும் (தல விருட்ச்சங்களும் )  இந்த சமண மலையில் இருந்ததாக, அங்கு வசிக்கும் எழுபத்தைந்து வயதான தங்கச்சாமி சொன்னாலும், தற்போது மருத மரம் , வில்வ மரம்  மட்டமே உள்ளதாக ஆதங்கப் பட்டு கூறுகிறார்.   "அப்பாவி ஜனங்க பிழைப்புக்காக மரங்களின் அருமையும் புனிதமும் தெரியாமலே விறகுக்கு வெட்டி எறிஞ்சுட்டாங்கப்பா .."என்று சொல்லும் போது நமக்கும் கஷ்டமாகத் தான் இருக்கிறது .

     இந்த சமண மலை புராணங்களை  தன்னுள் பொதிந்து வைத்துள்ளதாகச்  சொல்லும் செய்தி இம் மலையின் தொன்மையை எடுத்துரைப்பதாகவே உள்ளது. கைலாயத்திலிருந்து முருகன் தன் காலடியை இம் மலையில் தான் முதன் முதலில் எடுத்து வைத்ததாகவும் ,இம்மலை அவரை தாங்க மறுத்து அதிரவே , அருகில் உள்ள திருப்பரம் குன்றம் மலையில் குடி கொண்டதாகவும் சொல்லும், இவர்கள் மலை உச்சியில் முருகன் பாதம் படித்த இடம் உள்ளதாக நம்பவும் செய்கிறார்கள்.

    இக்கிராமத்தில் உள்ள பாசி ஊரணியில் அர்ஜுனன் ஒற்றை காலில் சிவனை நோக்கி தவமிருந்ததாகவும் கதை சொல்லுகிறார்கள். அதனால் தான் அந்த ஊரணி இன்னும் கோடையிலும் வற்றாமல் உள்ளது என அதிர்ச்சி ஊட்டுகின்றனர்.

       அய்யனார் கோவிலிருந்து வலப்புறமாக செல்லும் சாலையில் கால் கிலோ மீட்டர் சென்றோமானால், இரு சமணர் படுக்கை உள்ளது. சமணர் படுக்கைக்கு செல்ல அழகாக படி வெட்டியுள்ளனர். படி வழியாக சென்றால் அழைத்து செல்லும் குகையில் சுனை இருக்கிறது . மேலும் வவ்வால்கள் கூட்டமாக உள்ளது . அதன் வாடை நம்மை அங்கிருத்து விரட்டிகிறது. குகையின் பாறையில் சமணர் கால சிற்பங்கள் வரையப்பட்டுள்ளன. புத்தர் உருவம் மிகவும் பெரியதாக வரைய பட்டுள்ளது. அதன் கீழ் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை எந்த மொழியில் எழுதப் பட்டுள்ளன என்பது தெரிய வில்லை. அதனை விளக்கும் எந்த போர்டும் இல்லை. தொல்லியல் துறையின் இப்பகுதி தொல்லியல் துறைக்கு சொந்தமானது இதை சேதப்படுத்தக் கூடாது என்ற போர்டும் எழுத்துக்களை இழந்து , துருப்பிடித்து உள்ளது. அதன் அருமை , அதன் வரலாறு தெரியாமலே வெளியில் நின்றோம்.அதற்கும் நமக்கும் கால இடைவெளி இருப்பது,  வெறுமையில் உணர்ந்தேன். அதன் அமைதியும் , இயற்கையின் நறுமணமும் நம்மை அதன் வரலாற்றை கற்பனை படுத்தி பார்க்கச் செய்கிறது . அதனை ஓட்டி பெரிய பாறை உள்ளது. அதனை அடுத்து மற்றொரு குகை உள்ளது.அங்கு செல்வது கடினம் .பாறைகள் கரடு முரடாக உள்ளன. ஒருபுறம் மிகவும் சரிவாக உள்ளது. ஏறுவது கடினம்.  அக்குகையிலும் சமணர்கள் இருந்து தியானம் செய்ததாக ஆடு மேய்க்கும் சிறுவன் காசி கூறினான்.

                    யாரிடம் இதை பற்றி விரிவாகக் கேட்பது என புலம்பியபடி அய்யனார் கோவிலின் அரச மரத்தடியில் உள்ள தேநீர் கடைக்கு வந்தோம். அங்கு அரிச்சந்திரன் என்பவரை பெரியவர் காசி அறிமுக படுத்தினார். "சார்...இவரு பேரு அரிச்சந்திரன் இவரு கிட்ட கேளுங்க ..இந்த மலையின் வரலாற்றை அருமையா கூறுவாரு...". நான் என்னை பற்றி அறிமுகப்படுத்தி கொண்டு , இதன் தொன்மை , அந்த கல்வெட்டுக்களில் பொறித்த எழுத்துக்கள் என்ன   கூறுகின்றன ?என கேட்ட தாமதத்தில் "சாமி , இந்த மாதிரி நிறைய பேரு இங்க வந்திட்டு போறாங்க ...இது ஆயிரத்து இரண்டாவது பேரு...இது எங்க மலை , இதை காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலை, நாங்க பாதுகாத்தோம் , குவாரிக்கு மலையை உடைக்க லீசுக்கு விட்டுட்டாங்க ... மொராசிதேசாய் காலம் ..நாங்க போராடினோம்... பலபேர் சிறை சாலைக்கு சென்றோம் ..நானும் சென்றேன் ..பலர் உயிர் நீத்து காப்பாத்தப்பட்டது இம்மலை.."என பொரிந்து தள்ளினார். "எல்லாம் இப்ப நடந்தது சாமி...இவ்வளவு பெரிய மலைக்கு ஒரேஒரு வாட்ச்மேன் போட்டுள்ளது தொல்லியல் துறை ..!"என நக்கலாக சிரித்தார்.

      மலை அமைதியாகத் தான் இருப்பதாக நினைத்தாலும் , அது பேசத்தான் செய்கிறது. மலை தனிமையில் உறங்குவதாக நினைத்தேன் , ஆனால் அது ஒரு கிராமத்தையே உறவாக வைத்திருப்பது மலைப்பைத் தருகிறது.

  சமணர்களின் இருபத்திநான்காவது தீர்த்தங்கம் . அதாவது சமணப் பள்ளி. தென்னிந்தியாவின் சமணப் பல்கலைக் கழகமாக  இந்த சமண மலை செயல் பட்டுள்ளது. இங்கு ஆறு சமணப் படுக்கைகள் உள்ளன. சில ஆண்டுகள் முன் ஆறாவது படுக்கை இடி தாக்கி சிதைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். எட்டு குன்றங்களின் தலைமை  பீடமாக இந்த சமண மலை இருந்துள்ளது . சமணர்கள் மதுரையில் தங்கள் மதத்தை பரப்பியதற்கான தடங்கள் திருப்பரங்குன்றம் மலை, யானை மலை, பெருமாள் மலை, அழகர் மலை , நாக மலை என அத்தனை மலைகளிலும் உள்ளன.

       திருத்தக்க தேவர் இந்த சமண பள்ளியை சேர்ந்தவர் என்றும் , இவர் மதுரையில் சமண மதத்தை பரப்பியவர் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள மலையில் பொறிக்கப்பட்டுள்ள விபரங்கள் இம்மலையின் செயல்பாட்டை தெளிவாக விளக்குகின்றன. இந்த கல்வெட்டின் எழுத்துக்களை தற்கால தமிழில் பேராசிரியர் வேதாச்சலம் 'என் குன்றம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் என்கிறார் ஐம்பத்து ஆறு வயதாகும் அரிச்சந்திரன். (இப்புத்தகத்தை தேடிக் கொண்டு இருக்கிறேன்)

      இங்குள்ள கல்வெட்டில் ,"இந்த சமணப்பள்ளியில் பயிற்சி பெற்ற வடக்கே சமண மதம் பரப்ப சென்ற ஒரு சமணர் கர்நாடகாவில் செல்லும் வழியில் பாம்பு கடித்து இறந்தான்"என்ற குறிப்பு உள்ளது .

  இம்மலையில் ஒரு சோக வரலாறு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. மலை அடிவாரத்தில் காற்று அருமையாக வீசியது. காற்றை சுவாசித்துக் கொண்டே கதை கேட்பது மிகவும் அருமை. டீக்கடையில் டீஅருந்திக் கொண்டு இயற்கையை ரசித்தவாறு பேசுவது டீயை விட இனிமையாக இருந்தது. நீங்களும் டீ குடித்து காத்திருக்கவும் . (மலை இன்னும் கதை பேசும் )