Saturday, October 16, 2010

உணர்த்துதல் மற்றும் உணர்தல்

 இன்று சீன அய்யாவின் பிறந்த நாள். அய்யா இன்று போல் என்றும் நலாமாக ,வளமாக வாழ வாழ்த்துகிறேன். அவரின் நட்பு ஒரு வழிகாட்டியாக , என்னை நல் வழிப்படுத்துவதாக   உள்ளது. அவர் தன் வயதை மறந்து அனைவருடனும் நட்பாக பழகுவது என்னை வியக்க வைக்கிறது. பதவியில் இருப்பவர்கள் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பகட்டில்லாத , பதவியின் பந்தாவில்லாத ஒரு நபர். எல்லாருக்கும் ஓடிச் சென்று உதவும் மனப்பான்மை என்னை வியக்க வைக்கிறது. ஒரு கல்லூரி மாணவனைப் போன்று சுறுசுறுப்பு கொண்டவர்.  எழுதும் ஆர்வம் உள்ள அனைவரையும் உற்ச்சாகாப் படுத்தும் ஒரு டானிக். அவரின் பக்க பலம் அவரின் துணைவியார். (மனைவி கிடைப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ... வரிகளை உண்மை ஆக்கியவர். )மதுரை பிளாக்கர் என்றாலே சீனா வர்கள் தான் நினைவில் வருவார் . அவர் அனைவரையும் ஒருமுகப் படுத்தும் விதம் அவர் உயர்வுக்கு எடுத்துக்காட்டாகும். அவரை வாழ்த்த வயதில்லை எனவே வணக்குகிறேன்.


 கடந்த வாரம் என் கணினி என்னுடன் சண்டை போட துவங்கியதால் என்னால் சரியாக என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக மருத்துவரை (அதான் சாப்ட் வேர் இஞ்சினியர் )அழைத்து  சரி செய்துள்ளேன். கடந்த  திங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பயணம் செல்வதற்காக புறப்பட்ட போது ஒரு பெற்றோர் , இரண்டாம் வகுப்பு மாணவியை அழைத்து என் அறையில் காத்திருந்தனர். நான் வேகமாக விரைந்து , காரணம் கேட்டபோது  வெள்ளி மாலை பள்ளி பேருந்தில் தன் புது பையை தொலைத்து விட்டதாக புகார். அதுவும் ஆசிரியர் இது கனமாக இருக்கிறது என கூறி பள்ளி பேருந்தின் லக்ககேஜ்  வைக்கும் இடத்தில் வைத்துள்ளார். இறங்கும் போது காணவில்லை என்று கூறினார்கள். நானும் ஆசிரியரை அழைத்து விசாரிக்கிறேன் என்று மாணவர்களுடன் பயணித்தேன். மதியம் வந்தவுடன் சார் எழாம் வகுப்பு மாணவி திவ்யா என் பையை வைத்துள்ளதாக தெரிகிறது என்றனர். நானும் அழைத்து விசாரிக்கிறேன் என சொல்லி என் வகுப்பிற்கு சென்று படம் நடத்தினேன். பின்பு மறந்து விட்டேன். மீண்டும் மறுநாள் காலை அதே பெற்றோர் சார் எல்லாரிடமும் கெட்டு விசாரித்து கொடுங்கள் . அது புது பை என் இப்படி திருடுகிறார்கள். பிறர் பொருளை எடுக்கக் கூடாது என தெரியாதா ? என அடுக்கினார். அன்று பள்ளி பேருந்தில் சென்றா ஆசிரியரை அழைத்து என்ன விசாரித்தீர்களா என கேட்டேன். ஆமாம் சார் , ஒரு பேக் இருக்கு என்றனர். நான் திவ்யா வீட்டிற்கு சென்றேன் விசாரித்தேன் அதற்கு அவர்கள் அம்மா இல்லை என்று கூறி விட்டதாக சொன்னார் . அவரை வகுப்பிற்கு அனுப்பி விட்டு , ஒரு மாணவியை அழைத்து திவ்யாவை அழைத்து வர செய்தேன். திவ்யா வந்தாள்.
அவள் வந்தவுடன் இரண்டாம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கோபமாக பேசினார். நான் அவர்களை சற்று அமைதியாக இருக்க சொல்லி விட்டு , மெதுவாக திவ்யாவிடம் என்ன நீ நல்ல பிள்ளை ஆயிற்றே..என்னை ஏன் இப்படி தப்ப சொல்லுறாங்க ...? உனக்கு புதுசா பேக் வேண்டுமென்றால் சொல்லு நான் வாங்கி தருகிறேன்.தெரியாம எடுத்திருந்தா என் கிட்ட வந்து கொடுத்திடு ... நானே பச்சில கிடந்துச்சுன்னு கொடுத்து விடுகிறேன். .. ஐந்தாம் வகுப்பு வரை நல்ல  பிள்ளை என பெயரெடுத்து , ஆறாவது சென்றவுடன் குணம் மாறுகிறது என்றால் என் மீது தான் தவறு இருக்கிறது என்றேன். உன்னை நல்ல முறையில் பாடங்களுடன் நல்ல ஒழுக்கத்தை அல்லவா கற்றுக் கொடுத்தேன் , நீ இப்படி மாறிவிட்டாய் என்று சொல்லுவது என்னையே திருடன் என்று கூறுவது போல உள்ளது .. நீ வகுப்பறையில் பேனா கிடந்தாலும் , நோட்டு கிடந்தாலும் சார் யாரோ கீழே போட்டு விட்டார்கள் கொடுத்து விடுங்கள் என்று அல்லவா சொலுவாய் ... நீ செய்திருக்க மாட்டாய் இருப்பினும் நான் வளர்த்த முறை சரி இல்லை போலும் என்று மனம் வருந்தி உரையாற்றினேன்.  மேலும் காலை  வீட்டிற்கு ஆசிரியரை அனுப்புகிறேன் , எடுத்திருந்தால் கொடுத்து விடவும் என்றேன்.   பின்பு அவளை அவள் வகுப்பிற்கு செல்லும் படி சொல்லி விட்டேன்.

     பெற்றோரிடம் விரைவில் எடுத்துக் கொடுக்கிறேன். இரண்டு நாள் விடுமுறை என்பதால் பஸ்ஸில் சென்ற மாணவர்களை அழைத்து பேசி , யார் எடுத்துள்ளார்கள் என கண்டு பிடித்து கொடுக்கிறேன் என்று பெற்றோரையும் அனுப்பி வைத்தேன். மீண்டும் வகுப்பிற்கு சென்று என் வேலையை செய்தேன். மாலை பள்ளி கல்வி அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பினேன். சரியாக எழு மணிக்கு ஒரு போன் வந்தது என் கை தொலை பேசியில் .."சார், நான் திவ்யா சார்,சாரி சார் என்னை மன்னிச்சுடுங்க சார் ... நான் உங்க மாணவி தான் சார்... மனவருத்தப்பட வைத்ததற்க்கு மிகவும் சாரி சார்... நான் தான் அந்த பையை வைத்துள்ளேன்... காலையில டீச்சை அனுப்ப வேண்டாம் நானே பையை கொடுத்து விடுகிறேன்... சார் மன்னிச்சுடுங்க சார் .... இனிமே இந்த தவறை செய்ய மாட்டேன் .. என்று அழும் குரலில்  திவ்யா பேசினால்.

      என் மனைவி என்னை பார்த்தால் "யாருங்க ... எதுவும் பேசாமல் இருக்கீங்க  ...." நடந்ததை சொன்னேன். பரவாயில்லையே உங்க பள்ளிகூடத்தில் இதுவும் நடக்குதா.. நல்ல பிள்ளை.... தவறை உணர்வது மிகவும் அபூர்வம் ... அதை உணர்த்துவது அதை விட அபூர்வம் ... இன்னைக்கு தான் உருப்படியான விஷயத்தை பார்க்கிறேன். " என்றாள்.

   இதற்க்கு முன்னாள் இப்படி பட்ட விசயத்தை சொல்லுவேன் .. ஆனால் நம்ப மாட்டாள் தற்போது ஆவலுடன் இருக்கும் போதே ஒரு மாணவி தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது அவளை உணர்ச்சி வசப் படச் செய்து என்னை பாராட்டச் செய்தது.

   உணர்த்துதல் மற்றும் உணர்தல் எவ்வளவு கடினாமான விஷயம் தெரியுமா...? அதை உணர்பவர்கள் தான் அதன் அருமையை உணர முடியும் . என் பணியினை சரியாக செய்த உணர்வோடு என் பகிர்தலை நிறுத்துகிறேன். உணர்த்தல் வாழ்வு முழுக்க நடைபெறும்.    

11 comments:

Balakumar Vijayaraman said...

உண்மை தானே! உணர்த்துவதும், உணர்வதும் எவ்வளவு கடினம்.

இன்னும் மனநிறைவோடு பணி செய்வீர்கள் :)

குமரன் (Kumaran) said...

சீனா ஐயாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! சீனா ஐயாவை முன்னோர் வாழ்த்தியபடி 'இன்னுமொரு நூற்றாண்டு இரும்!' என்று வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

குமரன் (Kumaran) said...

நல்லதொரு அனுபவப்பகிர்தல் தலைமையாசிரியர் ஐயா.

சுதர்ஷன் said...

உணர்ந்தாலும் உணர்த்துவது இன்னும் கடினம் ..

சற்று வெட்கம் கொள்வோம் ...இதையும் படியுங்கள்

http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

Jerry Eshananda said...

சீனா ஐயாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

மோகன்ஜி said...

ஒரு நல்ல ஆசிரியருக்கான முன்னுதாரணம் நீங்கள்.
பாடத்தோடு வாழ்க்கையையும் கற்றுத் தர பொறுமை வேண்டும். வாழ்த்துக்கள் சரவணன் சார்! உங்கள் சீனா ஐயாவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்

எஸ்.கே said...

நெகிழ்ச்சியான பதிவு!
சீனா ஐயாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

நேசமித்ரன் said...

பின்னூட்டப் பெட்டி ரொம்ப செய்யுது சார் கொஞ்சம் கவனிங்களேன். பாப் அப் விண்டோ எளிதா இருக்கும் கமெண்ட்டு போட :)


இடுகை உணர்தலும் உணர்வித்தலும்.

அய்யாவிற்கு வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

நல்ல மனநெகிழ்வான விசயம்!! சீனா அய்யாவின் பிறந்த நாள் முன்பே தெரியாமல் போய்விட்டது!

சுந்தரா said...

//உணர்த்துதல் மற்றும் உணர்தல் எவ்வளவு கடினாமான விஷயம் தெரியுமா...? அதை உணர்பவர்கள் தான் அதன் அருமையை உணர முடியும் .//

ரொம்ப ரொம்ப நிஜம்.

உணர்ந்த மாணவிக்கும் உணரவைத்த உங்களுக்கும் பாராட்டுக்கள்!

அமைதி அப்பா said...

மிக மிக நல்ல பகிர்வு.
நன்றி.

Post a Comment