கை எப்படி கழுவ வேண்டும் அந்த நாடகத்தில் அற்புதமாக மருத்துவரிடம் செல்லும் பள்ளி குழந்தைகள் வாயிலாக விளக்கமளித்தது அனைவரையும் கவர்ந்தது.
நாடகத்தில் ஒரு காட்சியில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசுவது போல் காட்சி இருந்தது. அதில் துணி துவைத்துக் கொண்டும் , மற்றொருவர் கீரை ஆய்ந்துக்கொண்டும் இருப்பது போல காட்சி. அதில் தொலைக்கட்சியில் செல்லமா நாடகம் பற்றி பேசுவதில், "இந்தா பாருக்கா, இந்த நாடகத்தில் அவன் வீட்டிலியே திருடுகிறதை...காலம் கேட்டுப் போய் கிடக்கு ..."என்ற எதார்த்தமான வசனம் எல்லாரையும் கை தட்ட செய்தது.
பின்பு மரபாட்சி பொம்மைகளைக் கொண்டு தன் சுத்தம் பற்றி நாடகம் என்னால் மாணவர்கள் உதவியுடன் செய்து காட்டப்பட்டது.
மரபாட்சி பொம்மைகள் கொண்டு நாடகம்
மாணவர்களைக் கொண்டு எம் பள்ளியில் அடுத்த மாத முதல் வாரத்தில் பொம்மலாட்டம் கண்காட்சி நடத்த உள்ளது. அதில் முப்பது கதைகள் மாணவர்கள் செய்து காட்ட உள்ளனர். எம் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட இன்று முதலே மாணவர்களை தாயார் படுத்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. .
இன்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் தினம் , மற்றும் பார்வை அற்றவர் தினம் இதன் முக்கியத்துவமும் மாணவர்களுக்கு என்னால் எடுத்து சொல்லப்பட்டது.
நாடகத்தில் நடித்த அனைவருக்கும் பேனா பரிசாக வழங்கப்பட்டது.
6 comments:
பாராட்டுகள்!
அனைவருக்கும் என் பாராட்டுக்களும் ..
பார்க்க
http://nanduonorandu.blogspot.com/2010/10/blog-post_14.html
வணக்கம் நல்லாசிரியரே...கலக்குங்க.
அன்பின் சரவணன்
அருமை அருமை - நாடகம் நடத்தும் பாங்கு அருமை. நடிக்கும் மழலைச் செல்வங்கள் - அவர்களின் மேக்கப் - அத்தனையும் அருமை. நன்றாகவே இருக்கிறது. கலக்கீட்டீங்க போங்க - சும்மா சொல்லக் கூடாது - சூப்பர்
நல்வாழ்த்துகள் நண்பா
நட்புடன் சீனா
மரப்பாச்சி பொம்மைகளை கொண்டு நாடகமா? நன்று நன்று. உங்கள் ஆசிரியர்களும் கொடுத்துவைத்தவர்கள். மாணவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
Post a Comment