Thursday, February 3, 2011

ஆசைப்படாதே ...!


கல்லாவை மூடி வைங்கப்பா
கொட்டப்போகுது பணமழை
ஜாக்கிரதை
திறந்தா போயிடும் சுதந்திரம்...!
வேலைவெட்டியில்லாப் பயலுகளுக்கு
வேலைத் தேடி வருகுது
சாராயக் கடையும்
ரேசன் கடையைப்போல
அடிப்பிடிச் சண்டைக்கு தயாராகுது
காலைப் பிடித்து கெஞ்சினாலும்
கண்டுக்காத கருமாந்திரப்பசங்க
கையெடுத்து கும்பிட்டுவாங்க
காலில் விழுந்து கெஞ்சுவாங்க
கலர் கலரா சட்டைபோட்டு
வேசம் காட்டவானுக...
பார்த்து கவனமா இரு
அசந்தா ஏமாந்து போயிடுவ
ஏற்கனவே ஏமாந்த மாதிரி..!

கூட்டுப்போட்டு கும்மியடிக்க வாரானுக
ஆடு மாடு வெட்டுவானுக
பிரியாணிச் சோத்த போடுவானுக
ஓட்டுப்போட்ட பின்ன ..
நம்மல நிக்க வைச்சு நித்தம்
கொல்லுவானுக
கவனமா போடு
காசுப்பணத்துக்கு ஆசப்பட்ட
கஷ்டப்படுவே...!






6 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத ஆளா வந்துட்டோம்ல! எப்பூடி?

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

வாழ்க மக்களாட்சி!

Bharath_HM said...

//ஓட்டுப்போட்ட பின்ன ..
நம்மல நிக்க வைச்சு நித்தம்
கொல்லுவானுக//

cheena (சீனா) said...

aakaa aakkaa சரவணன் - தூள் கெளப்புறீங்க

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

சூப்பர்ப்....:)

G.M Balasubramaniam said...

உங்கள் கவன ஈர்ப்புகள் உங்கள் மதுரைக்கு கொஞ்சம் அதிகமாகவே தேவை என்று கேள்வி.

Post a Comment