Thursday, February 17, 2011

ART FROM WASTE

ART FROM WASTE
குப்பைகளில் இருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் கண்காட்சி எம் பள்ளி ஆசிரியர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. இம் முறை பல இலக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் ,என் கல்லூரி ஆசான் திரு. தருமி
அவர்களை சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். அவருடன் எங்கள் அன்பிற்குரிய சீனா அய்யா அவர்களையும் , அவரது துணைவியாரையும் அழைத்திருந்தோம். அனைவரும் அன்று காலை பத்து மணிக்கு சரியான நேரத்தில் வருகைப்புரிந்தனர். அதேப்போல , கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி திரு எஸ். பிச்சைக்கனி அவர்களும் , சர்வ சிக் ஷாஅபியான் திட்டத்தின் தென் சரக மேற்பார்வையாளர் திரு பால்தாஸ் அவர்களும் விழா ஆரம்பிக்கும் முன்னே சொன்ன நேரத்திற்கு வந்தார்கள்.



கண்காட்சியை எழுத்தாளர் தருமி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி திரு.எஸ். பிச்சைக்கனி அவர்களும் பார்வையிடும் போது எடுத்தப்படம்.




கண்காட்சியில் கரும்பு சக்கையில் ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் எழுதிய படம்.


கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சாக்பீஸ் உருவங்களை பார்வையிட்ட போது எடுத்தப்படம்

எழுத்தாளர் தருமி அவர்கள் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஆகியோர் கண்காட்சி பார்த்து மகிழ்ந்த போது எடுத்தப்படம். (உண்மையிலேயே உடைந்த வளையலில் செய்தகலைப்பொருளா? இல்லை உடைக்கப்பட்ட வளையலில் செய்த உருவமா? என சிர்க்க வைக்கும் தருமி)
எம் பள்ளிச் செயலர் திரு சொளந்திரபாண்டியன் அவர்களுடன் மேற்பார்வையாளர் திரு பால் தாஸ் .


அனைவரும் நின்று ஒரு புகைப்பட பதிவு செய்துக் கொண்ட போது எடுத்தப்படம். 

தூர எறியும் டீக் கப்புகளை வைத்து ஒரு லைட் லேம்ப் ... விதவிதமாய் தொங்கும் காட்சி.


கண்காட்சியை வலைச்சரத்தின் ஆசிரியர் திரு சீனா அவர்கள் துணைவியாருடன் கண்டு களிக்கும் காட்சி...

             தின்று தூக்கி எறியும் சோளத்தட்டையில் கலை நயம்

                                   ஆர்வத்துடன் கண்டுக் களிக்கும் மாணவர்கள்..


தருமி அய்யா கண்காட்சியைப் பார்வையிட்ட பின் வாழ்த்திப்பேசும் போது , நான் படித்த பள்ளியில் இப்படி அசம்பிளி கிடையாது. உங்களுக்கு அது கிடைத்துள்ளது. எங்கள் காலத்தில் இது போன்ற விழாக்கள் கிடையாது, அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது. நீங்கள் படிக்கும் இந்த பள்ளியை நேசிக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆசிரியர்களை மறக்க கூடாது. உங்கள் வாழ்நாளில் உங்கள் பள்ளியையும் ஆசிரியரையும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இக் கண்காட்சி உங்களுக்கு கலை ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் . அனைவரும் வாழ்வில் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன் என சுருக்கமாகவும் ஸ்வீட்டாகவும் முடித்தார்.

              கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி திரு பிச்சைக்கனி அவர்கள் பேசும் போது இந்த சரவணன் எதையாவது செய்துக் கொண்டே இருப்பார் .எப்படியாவது மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வமுடன் செயல் புரிகிறார். அவருக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். இந்த நிர்வாகமும் துணைபுரிகிறது. அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள், வாழ்வில் வெற்றிப் பெறுவீர்கள் என வாழ்த்தினார்.

   இவ்வாறு அனைவரும் வாழ்த்த இனிமையாக நடந்து முடிந்தது. எது எப்படியோ இக் கண்காட்சி எம் பள்ளி மாணவர்களின் பாடம் சார்ந்த அறிவையும் தாண்டி , தங்களுக்குள் புதைந்துள்ள கலை தாகத்தை வெளிப்படுத்த உதவி இருக்கும் என்று நம்புகிறேன்.  

21 comments:

மோகன்ஜி said...

எடுத்துக்காட்டான ஓர் ஆசிரியர் நீங்கள்.. வருங்கால இந்தியாவை சிறப்பாய் உருவாக்க உங்களைப் போல் ஆசிரியப் பெருமக்களால் மட்டுமே இயலும்.. மென்மேலும் இவ்வண்ணம் பிள்ளைகளை ஊக்கப் படுத்துங்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் தலைவரே..:-))

shanmugavel said...

சந்தோஷமாக இருக்கிறது,சரவணன்.வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

நல்ல விஷயம் .

வாழ்த்துகள் சரவணன் :)

Chitra said...

இவ்வாறு அனைவரும் வாழ்த்த இனிமையாக நடந்து முடிந்தது. எது எப்படியோ இக் கண்காட்சி எம் பள்ளி மாணவர்களின் பாடம் சார்ந்த அறிவையும் தாண்டி , தங்களுக்குள் புதைந்துள்ள கலை தாகத்தை வெளிப்படுத்த உதவி இருக்கும் என்று நம்புகிறேன்.


...நிச்சயமாக..... ஒவ்வொரு படத்தையும் கிளிக் செய்து பார்த்தேன்.... அருமையாக இருக்கிறது.... குழந்தைகளின் திறனை கண்டு மகிழ்ச்சி. எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிங்க...

bandhu said...

மிக நல்ல முயற்சி! நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

good post,

ஓலை said...

நல்ல செயல். குழந்தைகளை இது மாதிரி நன்கு ஊக்கப் படுத்த வேண்டும். நன்றாக செய்துள்ளீர்கள். உங்கள் பள்ளி சிறார்க்கு வாழ்த்துகள்.

Philosophy Prabhakaran said...

புகைப்படங்களும் விளக்கங்களும் அருமை... பகிர்வுக்கு நன்றி...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மாணவர்களுக்கு நிறைய கற்றுக்கொள்வதற்கு நிறைய வாய்ப்புக்கள்.
வாழ்த்துக்கள்.

Kandumany Veluppillai Rudra said...

"ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி."

G.M Balasubramaniam said...

இதை உங்கள் ஆர்வத்தின் இன்னொரு கோணமாகக் காண்கிறேன்.வாழ்த்துக்கள் சரவணன்.

R. Gopi said...

சிறப்பான முயற்சி. படங்களும் மிக அழகாக வந்திருக்கின்றன.

குமரன் (Kumaran) said...

அருமை அருமை!

ஆயிஷா said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

Nimal said...

வாழ்த்துகள் சரவணன்...

Guna said...

நன்றி மதுரை சரவணன் .. REG WORLD CUP பொறுத்திருந்து பார்ப்போம்..

Thangalathu pathipugali padikka aarambithu irukiren

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
தொடரட்டும் உங்கள் பணி..

Guna said...

intha palli maanavargalai paarthal namaku palaya neyabagangal varugirathu.. intha mathiri palli koodangal namakku vaalkayin adi thattu , mel thattu anaithayum kattru tharum..

மாதேவி said...

நல்ல முயற்சி்.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

அருமையான கண்காட்சியினைக்கண்டு களித்தோம். மகிழ்ந்தோம். வீனாய்ப் போகும் பொருள்களை வைத்து அழகிய கண்காட்சி உருவாக்கப் பட்டது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment