Sunday, February 20, 2011

காசுக் கொடுத்து தனக்கு தானே பில்லி சூனியம் ....

    மதுரையில் தந்தையை மீறிக் காதல் செய்தப் பெண்ணை அப்பெண்ணின் தகப்பன் அடியாள்களை வைத்து ஊசி மூலம் கொலை செய்த சம்பவம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏற்கனவே திருமணமான ஒருவர் , காதலித்ததால்,அவனைப் பிரிய மனமின்றி, அவரின் மகனை தூண்டுத் தூண்டாக வெட்டிய சென்னைப்பெண்ணைப்பற்றி செய்திகளில் கேள்விப்பட்டுள்ளோம். தன் மனைவியின் காதல் வெளியில் தெரிய , அவளை காட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து புதைத்த கணவனைப் பற்றிய செய்தியைப் படித்து இருப்பீர்கள். கள்ள காதலால், நடக்கும் மிக மோசமான கொலைகளைப் பார்த்து இருப்பீர்கள். படித்து இருப்பீர்கள். இவைகளுக்கு எல்லாம் பின்னால் ஒரு மனநிலை பாதிப்பு அல்லது மனம் பித்து அடைந்து இக் கொலைகள் நடந்திருக்கலாம். அதுசரி இப்போது அதை யெல்லாம் ஏன் கூறுகிறேன் என்று நினைக்கிறீர்களா...?காரணம் இருக்கு என்னைப்போல நீங்களும் ஏமாந்து விடக்கூடாது என்று ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தத்தான்.

      தமிழ் திரையுலகின் முதன்மையான இயக்குநர் என்பதை மறந்து அல்லது தமிழர்கள் நாம் எதை எடுத்துப் போட்டாலும் பார்ப்பார்கள் என்ற தைரியத்தில் இப்படி ஒரு படம் எடுத்து விட்டார் போலும்.பலவீனமானவர்களுக்கு அல்ல என்ற அடித்தலைப்பிட்டு , தமிழர்களின் பலகீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ள கொளதம் ,”தமிழர்களை நாயே இனி திரில்லர் படம் கேட்பாய் என்பது போல ஒரு மோசமானப் படம்” எடுத்துள்ளார்.  இவரைத் தவிர யாரும் இப்படி எடுக்க முடியாது என்பதும் உண்மை.

      கதை என்னவென்றால், தாயை இழந்து, செக்ஸ் வெறிபிடித்து கார்ப்பரேட் கலவித்தனத்தில் ஈடுப்படும் தகப்பனால் வளர்க்கப்படும் மகனின் மனநிலைப்பாதிப்பு ,அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்லும் படம் .மனநிலைப்பாதிப்பை வன்மம் புகுத்தி, நடுநிசியில் நாய்கள் மத்தியில் கிளைமேக்ஸ் வைத்து கொடுக்கப்பட்ட கதைத் தான் இந்த நடுநிசி நாய்கள். திரில்லர் என்ற ரீதியில் என்ன சொல்ல வருகிறார் என்பதையே மறந்து , கடைசியில் ஒரு மருத்துவர் மூலம் மனநிலைப்பாதிப்பு இந்தியாவில் பெண் குழந்தைகளை இளமையிலே பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதால் தான் என்று சொல்லி , அதற்கு ஒரு டுவிஸ்ட் கொடுத்து முடிப்பது , ஆங்கிலப்பட ரேஞ்சுக்கு இவர் அடுத்து ஒரு பாகம் எடுப்பார் என்பதுபோல முடித்து இருப்பது அதைவிடக் கொடுமை சார்...

    கொளதம் படத்தில் செக்ஸ் எதிர்பார்க்கலாம்.. ரொமான்ஸ் எதிர்ப்பார்க்கலாம். காதல் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்தப்படத்தில் செக்ஸ் மட்டுமே எதிர்பார்க்கலாம் . அருகில் உள்ள பெண்கள் முகம் சுழிப்பதைப் பார்க்கும் போது எனக்கு அருவெறுப்பாக இருந்தது. எனக்கு எங்க அண்ணன் சாருநிவேதிதா இப்படத்தைப்பற்றி என்னச் சொல்லுவார்ன்னு ஒரு எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

      கொளதம் இப்படத்தின் மூலம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், இளம் வயதில் குழந்தைகள் பாலியல் வன்மத்திற்கு உட்படும் போது, அவர்கள் ஒரு சைக்கோ மனநிலைக்கு உட்பட்டு , கொலைகள் செய்ய நேரிடும் அல்லது தவறிய பாலியல் உறவுக்கு உட்பட நேரிடும்.   இப்படத்தில் வரும் ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தை தன் தந்தையால் பாலியல் வன்மைக்கு உட்பட்டு , மனநிலைப்பாதிப்புக்கு உள்ளாகி , தன்னை தத்து எடுத்து வளர்க்கும் தாயையே , தாயாக ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்கு ஆட்பட்டவனாக மாறி , தாயையே கற்பழிக்கும் அவலத்திற்கு ஆட்படுகிறான்.

       கதைக்கரு நன்றாகத் தான் எடுத்துள்ளார் .அதை திரில்லர் என்ற ரீதியில் எடுத்து , சொல்ல வந்தக் கருத்தை மறந்து ,  வன்மத்தை மட்டுமே காட்டி , ஏற்கனவே தழிழ் சினிமாக்களில் இருக்கும் அவலத்தையேக் காட்டி , ஏமாற்றி இருப்பது மன்னிக்க முடியாது . கொளதம் அடுத்தப்படம் தான் அவரைக் காப்பாற்றி , அவரைப் பழைய நிலைக்கு பார்க்க வைக்கும் என நம்புகிறேன். காசுக் கொடுத்து தனக்கு தானே பில்லி சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம். 

13 comments:

USA விஜய் ரசிகன் said...

நல்ல கருத்து

சாமக்கோடங்கி said...

அப்படி ஒரு படமா..?? கௌதமுக்கு என்ன ஆயிற்று..? ஏற்கனவே வேட்டையாடு விளையாடுவில் இந்தப் பாலியல் விவகாரத்தைக் கையாண்டுள்ளாரே.. வேறு எதாவது வித்தியாசமாகச் செய்து இருக்கலாம்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! இந்தப் படம் பாத்துடிங்களா? உங்களுக்கு எப்புடி ஆறுதல் சொல்ல?

ஆனந்தி.. said...

//அண்ணே! இந்தப் படம் பாத்துடிங்களா? உங்களுக்கு எப்புடி ஆறுதல் சொல்ல? //

ha ha..super prakash...:))

geethappriyan said...

நல்ல குமுறல் நண்பரே

Raj said...

this movie is rated as "A".. then what else the women near to u was expecting in this movie? If u choose to watch "A" grade movie then u should accept everything....

Anisha Yunus said...

hmm... all reviews i read about this movie say that it is a maniac puke. he he ... finally he showed what his real talent is... uvve...

well written thoughts though...!!

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...

நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க

Kandumany Veluppillai Rudra said...

தமிழ் படங்கள், இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைதான்.ஒரு சில படங்கள் தவிர,படம் பார்க்கும்போது
நல்ல நித்திரைதான் வருகிறது, இது எனது அனுபவம்

வருண் said...

**இப்படத்தில் வரும் ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தை தன் தந்தையால் பாலியல் வன்மைக்கு உட்பட்டு , மனநிலைப்பாதிப்புக்கு உள்ளாகி , தன்னை தத்து எடுத்து வளர்க்கும் தாயையே , தாயாக ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்கு ஆட்பட்டவனாக மாறி , தாயையே கற்பழிக்கும் அவலத்திற்கு ஆட்படுகிறான்.**

Gautam Menon must be is a sick mother f'cker to come up with a story like this! The censor should have banned this movie! May be he paid off the censor too!

வருண் said...

***Raj said...

this movie is rated as "A".. then what else the women near to u was expecting in this movie? If u choose to watch "A" grade movie then u should accept everything....***

Mr. Raj!
May I know who told you that A does not have any limits or boundaries? According to you "porn movie" can be rated as A and screened ? Is that right?

அவிய்ங்க ராசா said...

நல்ல விமர்சனம்..படம் பார்க்கும் நினைப்பில் இருந்த பலபேரை காப்பாற்றியிருக்கிறீர்கள்..)

பிரபாஷ்கரன் said...

உங்கள் விமர்சனம் சரியான சாட்டை அடி கௌதமிற்கு

Post a Comment