Sunday, February 6, 2011

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ...

     தேர்வு  எழுதும் மாணவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். தேர்வு நெருங்கும் இந்த நாளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.டாக்டர் , இன்ஞ்சினியர் கனவுடன் , புத்தகமும் கையுமாக உள்ள , உங்களுக்கு இது ஒரு பொன் முட்டையிடும் வாத்து போன்றதொரு காலம் . இதை ஒரேடியாக  அறுத்து , உங்கள் கனவுகளை தகர்த்து விடாதீர்கள்.
        விரல் நுனியில் விபரங்களை வைத்து , கேள்விகளை தொடுக்கும் முன்னே பதிலை அள்ளித்தெளித்து அதிக மதிப்பெண் எடுத்து, தம் பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்க காத்துக் கொண்டிருக்கும் கண்மணிகளே , உங்கள் உடல் நலத்தில் முன்பை விட அதிக கவனம் செலுத்த வேண்டும்.

      கணித பார்முலாக்களை கண்முன் நிறுத்தும் நீங்கள் , இனி கண்ணிற்க்கு அதிக நேரம் விழிப்பை தரக்கூடாது . இரவு அதிக நேரம் விழித்து படிப்பதை தவிர்க்கவும். விரைவில் தூங்கி  அதிகாலை விரைவில் எழுந்து படியுங்கள்.அதிக விழிப்பு உடலுக்கு சோர்வை ஏற்படுத்துவதுடன், மூளையை அதிகமாக சோர்வாக்கி , மெமரி லாஸ்  உருவாக்கும் .அதிக நேரம் விழிப்பு உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும், மேலும் உடல் செரிமானத்தை குறைக்கும் . இதனால் தேர்வுக்கு செல்லும் நாளில் வயிற்றுப் போக்கு  ஏற்பட்டு , மருத்துவமனையில் அனுமதிக்க  நேரிடும். ஆகவே , இரவில் அதிக நேரம் விழித்துப் படிப்பதை தவிர்க்கவும்.

       இடைவிடாத படிப்பிற்கு இடையிடையே ஓய்வு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஓய்வு இன்றி படிப்பு  மன அழுத்தத்தைக்  கொடுக்கலாம். மன அழுத்தம் உங்கள் லட்சியத்திற்கு தடையாக அமையலாம் .  ஆசிரியர்களும் , பெற்றோர்களும் உங்களின் மதிப்பெண்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இவ் வேளையில் , படிப்பிற்கு இடையே ஓய்வு என்பது ஒரு உற்சாக டானிக்காக அமைந்து உங்களின் இலக்கை சரியானப் பாதையில் எடுத்துச் செல்ல உதவும். 

   கனவிலும் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறன் படைத்த மாணவர்களே , தண்ணீர் விசயத்தில் கவனமாக இருக்கவும். கண்ட இடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். எப்போதும் வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லவும். முடிந்த மட்டும் சுட வைத்து ஆறவைத்த நீரைப் பருகவும் . படிப்பில் ஆர்வம் காட்டும் நீங்கள் தண்ணீர் குடிப்பதை மறந்து விடக் கூடாது.

    இரவு படித்து விட்டு புரோட்டா சாப்பிடுவதை தவிர்க்கவும் . சாப்பாடு விசயத்தில் கவனமாக இருக்கவும் .எளிதில் செரிக்கும் உணவு வகைகளை உண்ணவும். இரவு எட்டு மணிக்கு அல்லது அதற்கு முன் சாப்பிடுவது நலம். பொதுவாக திட ஆகாரத்தை தவிர்க்கவும். அதற்காக சாப்பிடாமல் படிப்பதும் கூடாது. காலையில் உணவு நன்றாக எடுத்துக் கொள்ளவும்.

  ஒரு மார்க் விடைகளை ஒரு நிமிடத்தில் எழுதுவதற்கு கற்றுக் கொள்ளவும். முதலில் ஒரு மதிப்பெண் விடைகளையும் , பின்பு இரண்டு மார்க் விடைகளையும், பின்பு ஐந்து  மதிப்பெண் அல்லது பத்து மதிப்பெண் விடைகளையும் செய்யவும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கி விடை அழைக்க இப்போது இருந்தே மாதிரி தேர்வுகளில் பழகிக் கொள்ளவும். முதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு பதிலளிக்கவும். பின்பு யோசனை செய்து பிற வினாக்களுக்கு பதிலளிக்கவும். கணிதத்தில் நிருப்பிக்கவும் போன்ற கேள்விகளை தேர்ந்தெடுக்கவும்.  கணிதத்தில் விதிகள் , தத்துவங்கள் , நிரூபி  போன்ற வினாக்கள் தேர்ந்தெடுத்தல் முழு மதிப்பெண்களை பெற்றுத்தரும்.

    மாணவர்களே கவனமாக உங்கள் உடல் நலத்தை பேணவும் , மன நலம் அதை விட முக்கியம் என்பதால் அதிக விழிப்பு , மற்றும் அதிக நேரம் மனப்பாடம் செய்தல் போன்றவற்றை தவிர்த்து ஓய்வு கொடுத்து படிக்கவும். அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்.

12 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மாணவர்களுக்கு நல்ல கருத்துக்கள். அறிவுரைகள்.

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல உபயோகமான பதிவு........வாழ்த்துக்கள்...

G.M Balasubramaniam said...

I DO NOT KNOW HOW MANY STUDENTS READ BLOGS. HOWEVER THESE ADVICES IF READ BY THE PARENTS ,MIGHT HELP THEM GUIDE THEIR WARDS. BEST WISHES TO YOU AND THE STUDENTS.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...
This comment has been removed by a blog administrator.
shanmugavel said...

உரிய நேரத்தில் சரியான,பயனுள்ள தகவல்.

புலிக்குட்டி said...
This comment has been removed by the author.
புலிக்குட்டி said...

தேர்வெழுதும் மாணவர்களுக்கு உபயோகமான நல்ல பதிவு.ஸ்ரீ அவர்கள் கூறியது போல் பிழைகள் இல்லாமல் எழுத முயற்சிக்கவும்.நன்றி.

February 6, 2011 6:23 AM

மதுரை சரவணன் said...

sorry sri. nan thalmilil type seiyum pothu pilaikal thannai ariyaamal varukirathu. athai maarra pira tamil soft ware kalaik karruk kolkiren. ungkal comment remove panniyathil varuththam vendaam. ungkal valikattalukku nanri.

Anonymous said...

மாணவர்களுக்கு அவசியமான தகவல்

Philosophy Prabhakaran said...

இதைப் படிக்கும் மாணவச் செல்வங்களின் பெற்றோர் இதை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்...

Kandumany Veluppillai Rudra said...

பாடசாலைக் கண்மணிகளுக்கு மிகவும் உபயோகமான பதிவு .ஏன் பெற்றோருக்கும் அவசியமான பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

தேர்வு நேரதைக் கவனத்தில் கொண்டு பதிந்த பாராட்டுக்குரிய பதிவு.

Post a Comment