Saturday, January 29, 2011

கோடிகள் கொடுக்க தயார்...!

கரையில் அவள்
கால்வயிற்று கஞ்சிக்காக
கைப்பிள்ளை வறண்ட மார்பில்
உயிர் தேடி ...

உயிர் கொடுப்பாள் என்று தான்
கடல் மாதாவை வேண்டி
துடுப்பு எடுத்து போனான்...
வரவில்லை அவன்
ஆனால் வந்தது அது
குண்டடிப்பட்டு...!


 குழந்தை வீல் என்றழுதது
பசியின் மயக்கத்தில் தடுமாறிய
அவளுக்கு ...
கடலின் கவுச்சி
நாற்றம் வித்தியாசப்படவே
கால் ஊன்ற முடியாமல்
தடுமாறி ஓடினாள்
கடல் நோக்கி...

கரைஒதுங்கியப்படகை
சுற்றிய கூட்டம் ஓலமிட...

வாழ்க்கைப் போராட்டத்தில்
என்றாவது ஒருநாள்
கரையேறி விடுவோம்
என்ற அவன்...
இன்று கரை ஒதுங்கிப்போனான்...!

இரைத்தேடிப்போனவன்
இரையானான்...
தமிழனாய் பிறந்ததால்
தரை ஒதுங்கிப்போனான்
தாரை தாரையாய் கொட்டியது
தமிழ் இரத்தம் ...
சுட்டவனுக்கு தெரியும்
எவனும் கேட்க வரமாட்டனென்று..
தமிழன் இளிச்சவாயன்
தமிழ் ஆட்சியாளனுக்கு
தமிழன் என்பவன்
ஒரு குடும்பத்துக்குள் அடைப்பட்டவனென்று..!

தமிழக மீனவனின் உயிர்
ஐந்தாண்டுக்கொருமுறை
பேசப்படும் தேர்தல் வாக்குறுதி....!

என் மீனவ சகோதரனின்
உயிருக்கு லட்சங்களை தரும்
அரசே ..! அரசியல் வாதியே...!
பல கோடிகளை தரத் தயாராய் இருக்கிறோம்
என் மீனவ சகோதரனின் உயிரை திருப்பி கொடு
என கேட்கவில்லை...
கொன்றவனின் உயிரை எடுக்க முடியுமா..?22 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத ஆளா வந்தோம்ல எப்பூடி?

தமிழ்வாசி பிரகாஷ் said...

எத்தனை பேர் திரண்டு வந்தாலும் மீனவர்களின் துயரை துடைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கை அரசியலாகி விட்டது.
*************
கிறுக்கலும், சங்கமும்

Asiya Omar said...

நிச்ச்யம் தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.

தூயவனின் அடிமை said...

நிச்சயம் அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

சுவாமிநாதன் said...

கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்

தமிழ் உதயம் said...

ஆட்சியாளர்களின் இதயங்கள் கல்லில் செய்யப்பட்டதா... இரும்பில் செய்யப்பட்டதா... தேர்தல் கூட்டணி பேச கூடுகிறார்கள். இனி இன்னுமொரு பிணம் விழும். இன்னுமொரு அறிக்கை. இன்னுமொரு நிதி. இன்னுமொரு பதிவு. முடியாத சோகங்களுக்கு முடிவில்லை.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல்கள் !

sivakumar said...

அனைவரும் ஒன்றுபடுவோம். கடைசிவரியில் எழுத்துப் பிழை. கவனிக்கவும்

G.M Balasubramaniam said...

மீனவர் கொலை எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடி கொடுத்தாலும் போன உயிர் வாராதுதான். கோபம் புரிகிறது. கொன்றவன் உயிர் எடுக்க முடியுமா என்ற கேள்வி சரியா, சிந்திக்க வேண்டுகிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....

MANO நாஞ்சில் மனோ said...

//வாழ்க்கைப் போராட்டத்தில்
என்றாவது ஒருநாள்
கரையேறி விடுவோம்
என்ற அவன்...
இன்று கரை ஒதுங்கிப்போனான்...!//


ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....

MANO நாஞ்சில் மனோ said...

//உயிர் கொடுப்பாள் என்று தான்
கடல் மாதாவை வேண்டி
துடுப்பு எடுத்து போனான்...
வரவில்லை அவன்
ஆனால் வந்தது அது
குண்டடிப்பட்டு...!//
ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....

MANO நாஞ்சில் மனோ said...

//நாற்றம் வித்தியாசப்படவே
கால் ஊன்ற முடியாமல்
தடுமாறி ஓடினாள்
கடல் நோக்கி...//


ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழக மீனவனின் உயிர்
ஐந்தாண்டுக்கொருமுறை
பேசப்படும் தேர்தல் வாக்குறுதி//

ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....

MANO நாஞ்சில் மனோ said...

//என் மீனவ சகோதரனின்
உயிருக்கு லட்சங்களை தரும்
அரசே ..! அரசியல் வாதியே...!//

ரத்தம் கொதிக்குதே இந்த மானகெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால்.....

Unknown said...

அண்ணே
நம்ம தலைவரு இன்னைக்கு கூட்டணி பத்தி பேச போயிருக்காரு அப்ப இத பத்தியும் கொஞ்சம் கடேசில பேசுவாரு

செங்கோவி said...

//வரவில்லை அவன்
ஆனால் வந்தது அது// மனதைத் தொட்ட வரிகள் நண்பரே..

தெய்வசுகந்தி said...

//ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல்கள் .//

Unknown said...

தமிழர்களின் வலியை பதிவு செய்துள்ளீர்கள்..

Unknown said...

//இரைத்தேடிப்போனவன்
இரையானான்...
தமிழனாய் பிறந்ததால்
தரை ஒதுங்கிப்போனான்//

மோகன்ஜி said...

மனசு கனக்கிறது சரவணன் சார்!

Priya said...

மனதை தொடுகிற..சிறப்பான பதிவு!!!

Post a Comment