Monday, February 7, 2011

எல்லாம் ஒரே விலைதான்

விழிப்  பிதுங்கி
நடு ரோட்டில் நின்றே யோசிக்கிறான்
இந்தியனாகியத்  தமிழன் ....
மனைவி வாங்கி வரச் சொன்ன
வெங்காயம் வாங்குவதா ?
எரிப்பொருள் காலியாகிப்
பாதியில் நிற்கும் வண்டிக்கு பெட்ரோல் போடுவதா?
யோசித்தே வண்டியை நகர்த்துகையில்
டாஸ் மார்க் கடை அழைக்க ....
எல்லாம் ஒரே விலைதான் என்று முடிவெடுத்து
பீர் வாங்கி குடித்தே
கவலையில் நடந்தான்
விலை வாசிக்குதான் கிக்கு இறங்காதா
என கிக்குடனே ..! 

14 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத ஆளா வந்துட்டோம்ல! எப்பூடி?

தமிழ்வாசி பிரகாஷ் said...

விலைவாசி உயர்விலும் நம்ம ஆளு சுயநலத்தை தான் பாக்கராங்கய்யா.

Chitra said...

சரியா போச்சு... விலைவாசியை எதிர்த்து போராடாமல், உணர்சிகளை நீர்த்துப் போக வைக்கத்தானோ டாஸ்மார்க்?

geethappriyan said...

நண்பரே
நிறைய பேர் மது குறைந்தவிலையில் கிடைக்கிறது என்று சந்தோஷப்படுகின்றனர்.எங்கே செல்லும் இந்த பாதை,ஏனைய பேர் குடிப்பதை பெருமையாக வேறு நினைக்கின்றனர்.வேலையை விட்டு வருகையில் தினமும் குடித்துவிட்டு தான் பைக் ஓட்டியபடி வீட்டுக்கு வருகின்றனர்.

geethappriyan said...

நண்பரே
நிறைய பேர் மது குறைந்தவிலையில் கிடைக்கிறது என்று சந்தோஷப்படுகின்றனர்.எங்கே செல்லும் இந்த பாதை,ஏனைய பேர் குடிப்பதை பெருமையாக வேறு நினைக்கின்றனர்.வேலையை விட்டு வருகையில் தினமும் குடித்துவிட்டு தான் பைக் ஓட்டியபடி வீட்டுக்கு வருகின்றனர்.

தூயவனின் அடிமை said...

//விழிப் பிதுங்கி
நடு ரோட்டில் நின்றே யோசிக்கிறான்
இந்தியனாகியத் தமிழன் ....//


நல்ல வரிகள்.

Philosophy Prabhakaran said...

எஸ்.எம்.எஸ் ல வந்த ஒரு மேட்டரை வச்சி அழகா கவிதை உருவாக்கியிருக்கீங்க... சூப்பர்...

ஹேமா said...

பீரும் பெற்றோலும் ஒரே விலையா !

ஆனந்தி.. said...

//எல்லாம் ஒரே விலைதான் என்று முடிவெடுத்து
பீர் வாங்கி குடித்தே
கவலையில் நடந்தான்
விலை வாசிக்குதான் கிக்கு இறங்காதா
என கிக்குடனே ..! //

இது தான் நிதர்சனம் ...

G.M Balasubramaniam said...

இல்லையென்றால் அரசாங்க கஜானா எப்படி நிரம்பும்.
மதுவின் கொடுமைகளை சிறார்களுக்கு எடுத்த்க் கூறுங்கள் ஆதங்கப்படுவதை மற்றவர்களுக்கு விட்டு விடுங்கள்.

Unknown said...

அண்ணே சூப்பர்

MANO நாஞ்சில் மனோ said...

ங்கொய்யால விலை வாசி....

Avargal Unmaigal said...

பீரை மறந்து இருந்த எனக்கு அதை ஞாபக படித்திவிட்டீர்கள். தமிழ் நாட்டுக்கு வரவேண்டாம் என்றுஇருந்த எனக்குள் ஆசையை கிளப்பிவிட்டது உங்கள் குற்றம் அதனால் ஒரு ரிடர்ன் டிக்கெட் வாங்கி அனுப்பவும்

டக்கால்டி said...

எஸ்.எம்.எஸ் ல வந்த ஒரு மேட்டரை வச்சி அழகா கவிதை உருவாக்கியிருக்கீங்க... சூப்பர்... repeattu

Post a Comment