Friday, February 18, 2011

காந்தி -மாறுபட்டக் கண்ணோட்டம்.

    எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் சுமார் நூற்று ஐம்பது மாணவர்கள் சென்ற வாரம் காந்தி மியூசியம் மற்றும் இராஜாஜி பூங்காவிற்கு இன்பச் சுற்றுலா சென்றனர்.

எங்கள் பள்ளிப்பேருந்தில் எழு ஆசிரியர்கள் , இரு ஆயாக்கள் மாணவர்களுக்கு துணையாய் ஆனந்தமாய் உணவு கூடைகளுடன் பயணம் மேற்கொண்டனர். முதலில் காந்தி மியூசியம் அடைந்தனர்.

   காந்தியின் அகிம்சை , நாம் சுதந்திரம் பெற்ற வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள் அதற்கான தமிழ் விளக்கங்களை ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல குழந்தைகள் கேட்டு மகிழ்ந்தனர். மாணவர்கள் சுதந்திர உணர்வுகள் பெற்று , உணர்ச்சியுடன் காந்தியின் இரத்தக் கறை படிந்த ஆடைகளைப் பார்த்து துடித்துப் போனார்கள். அவர் அணிந்த செருப்புக்களையும் பார்த்து அவரின் எளிமையை உணர்ந்தனர்.  
   காந்தியின் நல்ல விசயங்களை நாம் குழந்தைகளுக்கு காட்டினாலும் , வளர்ந்த பின் மாகத்மா பற்றிய தவறானக் கருத்துக்கள் அல்லது எதிர்மறையான கருத்துக்களை முன் வைக்கக் கற்றுக் கொள்கிறார்கள். இதை நான் மதுரையில் மிலாடி நபி அன்று புத்தக அறிமுகம் பற்றிய மதுரை பிளாக்கர்கள் சந்திப்பில் காந்தியைப் பற்றி படித்த விபரங்களை அனிமல் ஜெயா முன் வைக்கும் போது காந்தியின் எதிர்மறையானத் தோற்றங்கள் பற்றி முன் வைத்தார்.இதைப் பார்க்கும் போது , வயதிற்கு ஏற்ப பார்வைகள் மாறுபடுகிறது என உணர்ந்தேன்.
     காந்தி தன் மூத்த மகனை அவரின் துணைவியாருடன் வாழ விட வில்லை. அவர் வீட்டை விட்டு துரத்தப்பட்டார். காந்தி அவ்வளவு கொடுமையானவர் என்றும் . நீண்ட காலத்திற்கு பின் ஒரு இரயில்வே நிலையத்தில் அவரின் மகன் கஸ்தூரி பாய் மற்றும் காந்தியை சந்தித்த போது, அவரின் தாய்க்கு மட்டும் வணக்கம் செலுத்தி, பழம் தந்ததாகவும், அதை அவர் மட்டுமே உண்ண வலியுறுத்தியாதகாவும், காந்தியுடன் பேச மறுத்ததாகவும் சொன்னார்.ஸ்ரீதர் குளிக்கும் கல்லை எடுத்துவர நள்ளிரவில் பெண்ணை அனுப்பி நாற்பது மைல் கடந்து கல்லை எடுத்துவரச் செய்த கதையை எடுத்துரைத்தார். அது ஒரு காலில் அழுக்குத் தேய்க்கப்பயன் படுத்திய கல் அது கிடைக்காதா ?எனவும்ஆதங்கப்பட்டுக் கொண்டார். பின் அச்சம்பவம் பற்றி காந்தி வருத்தம் தெரிவித்ததாக ஜெயா சொன்னார். நிஜ வாழ்வில் காந்தி கடுமையானவராக காணப்பட்டார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. கா. பா அம்போத்கார் படத்தை வைத்து , காந்தி அம்பேத்தாகாரின் வர்ணத்தைக் கேட்டதாகவும், இத்தைனை நாள் இவர் ராவ் வகையறா என்று நினைத்தேன் என்ற வசனம் வருவதாகவும். அம்பேத்தாரிடம் காந்தி வர்ணாசிரமத்தை வலியுறுத்தியதாகவும் சொன்னார். அதனாலே இப்படம் திரையிடப்படாமல் ஒதுக்கப்படுகிறது. நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் வலியுறுத்தினார். அடுத்த மாதம் இத்திரைப்படம் பார்த்து , கருத்துக்கள் பகிர்வது என முடிவெடுக்கப்பட்டது. சீனா அய்யா தமிழருவி மணியனின் அன்பில் ....என்ற புத்தகத்தை பற்றி பகிர்ந்துக் கொண்டார்.  
அக்காலத்தில் குடும்பங்கள் எவ்வாறு தோன்றின என்பதனை சங்க காலப் பாடல்களை உதாரணமாக கொடுத்துள்ளார் என்று சொன்ன சீனாஅவர்கள் புத்தகத்தின் முக்கியமான வரிகளை வாசித்துக் காட்டினார்.


    காந்தி அருங்காட்சியகம் சென்ற எம் குழந்தைகள் அருகில் உள்ள இராஜாஜி பூங்கா சென்று ஆனந்தமாய் விளையாடினர். டிரையினில் (ரயிலில்) ஏறி சுற்றினர். வாத்தில் அமர்ந்து சுற்றி மகிழ்ந்தனர்.

     செவ்வாய் அன்று மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பைச் சார்ந்த நூற்றி இருபது மாணவர்கள் அழகர் மலைக்கு சுற்றுலா சென்று இயற்கையை ரசித்தனர். கள் அழகரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துக் கொண்டனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையை கண்டுக் களித்தனர். குரங்குகளையும் அவற்றின் சேட்டைகளையும் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

    மாணவ பருவத்தில் சுற்றுலா செல்வது எவ்வளவு ஆனந்தம் என்பதை அவர்களுடன் செல்லும் போது தான் உணர முடியும் . அதேத் தருணத்தில் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று நல்ல முறையில் கொண்டு வர ஆசிரியர்கள் எவ்வளவு பாடுப்பட வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ள உணர்வு ஆகும். பல சிரமங்களுக்கு நடுவில் ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் சென்று மாணவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்தமைக்கு என் ஆசிரியர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.  

27 comments:

Chitra said...

பள்ளி கால சுற்றுலா பயணங்களை நினைவுக்கு கொண்டு வரும் பதிவு. அருமை.

Kandumany Veluppillai Rudra said...

"அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்."

இன்று... said...

சுற்றுலாவை விட,காந்தியைப் பற்றிய பார்வை குறிப்பிடும்படியாக இருந்தது சரவணன்...எனக்கு,கல்லூரியில் படிக்கும்போதுதான் காந்தியை பற்றி மூன்றாவது கோணத்தில் ஆராயும் பக்குவம் கிடைத்தது,அப்போதுதான் அவரது சத்தியசோதனையின் தமிழாக்கமும் கிடைத்தது.படித்திருந்தால் நினைவு படுத்திப் பாருங்கள்,அல்லது இணையத்தில் கிடைக்கிறது,படித்துபாருங்கள்.அவர் செய்த தவறுகளை பற்றி அவரே குறிப்பிட்டு,அதற்கு குற்றவுணர்ச்சியுடன் கூடிய பதில்களையும் கூறியிருப்பார்.மன்னிப்பு கேட்க தெரிந்தவனும்,மற்றவர்களை மன்னிக்கக் கூடியவனுமே மகாத்மாவாகிறான்.

தமிழ் உதயம் said...

நூறு சதவிதம் சரியாக உள்ள மனிதர்களும் கிடையாது. சரியாக உள்ள தலைவர்களும் கிடையாது. மகாத்மா மட்டும் விதிவிலக்கா. நிகழ்காலத்தில் நம் கண்முன்னே, நம்மால் காணும் சில அயோக்கிய தலைவர்களையும், தூக்கி வைத்தாடவும் ஆட்கள் இருக்கிறார்கள். வரலாறு எப்படி வேண்டுமானாலும் எழுதப்படலாம். மேலும் நாணயத்தின் இரு பக்கங்களை போல், ஒரு பிரிவினர் தலைவர்களின் ஒரு பக்கத்தை பார்க்கின்றனர். குறை சொல்ல விரும்புவர்கள் தலைவர்களின் மறுபக்கத்தையே பார்க்கின்றனர். நாமும் நமக்கு எந்த பக்கம் தேவையோ அந்த பக்கத்தை எடுத்து கொள்ளலாம்.

G.M Balasubramaniam said...

மஹாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிராக பெருங்குரல் கொடுத்தவர்.ஆந்திராவில் கோரா என்பவர் நம் தமிழ்நாட்டில் பெரியாரைப் போன்றவர்.அவருடைய மூத்த மகளை ஒரு தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கப்பட்ட ஒருவருக்கு மணம் முடிக்க முடிவு செய்து காந்தியின் தலைமையில் திருமணம்நடத்த காந்தியும் விரும்பி ஒப்புதல் அளித்தார்.துரதிருஷ்ட வசமாக திருமண நாளுக்கு முன்பே காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்டார்.பிறகு அந்தத் திருமணம் நேரு, ஆச்சாரியா கிருபலானி,மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயன் முன்னிலையில் காந்தி சேவாக்கிரம ஆசிரமத்தில் நடந்தது.தகுதி இல்லாதவர்கள் எல்லாம் காந்தியை விமரிசிப்பது கொடுமை.

ஆர்வா said...

காந்தியைப்பற்றிய அந்த தகவல்களை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதைப்பற்றி பொதுவாக யாரும் வெளியே பேசுவதில்லை

கவிதை காதலன்

சாகம்பரி said...

காந்தியை பற்றிய இது போன்ற பார்வைகள் மதுரை இளைஞர்கள் பேசி கேட்டு இருக்கிறேன் - என்னுடைய மாணவர்களும் கூட. நேதாஜிக்கு இருக்கும் ஆதரவு இங்கு காந்திக்கு குறைவுதான்- இளைஞனின் பார்வையில் சொல்கிறேன். சிறிது காலம் கழித்து கருத்தை மாற்றிக் கொள்வதும் உண்டு.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா எழுதி இருக்கீங்க.....

வசந்தா நடேசன் said...

காந்தியைப்பற்றிய புதிய பார்வைகள்.. பகிர்ந்தமைக்கு நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன் வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்..

மாதேவி said...

பள்ளிகாலச் சுற்றுலாக்கள் என்றும் நிலைத்திடும் வசந்தம்தான்.

pichaikaaran said...

நல்ல இடுகை

மோகன்ஜி said...
This comment has been removed by the author.
மோகன்ஜி said...

பள்ளிப்பருவத்தில் என் முதல் சுற்றுலா பாண்டிச்சேரிக்கு சென்றது.அந்த நினைவுகள் மீண்டும் கிளர்த்தி மகிழ்வடைய செய்து விட்டீர்கள்

February 20, 2011 12:16 AM

Unknown said...

//மன்னிப்பு கேட்க தெரிந்தவனும்,மற்றவர்களை மன்னிக்கக் கூடியவனுமே மகாத்மாவாகிறான்.//

Unknown said...

சுற்றுலா என்றாலே குழந்தைகள் உற்சாகமாகிவிடுகிறார்கள். எங்கே போகிறோம் என்பதை விட, போகிறோம் என்பதே அவர்களுக்கு அதிக கொண்டாட்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.

Unknown said...

//நேதாஜிக்கு இருக்கும் ஆதரவு இங்கு காந்திக்கு குறைவுதான்- //

ஆனந்தி.. said...

வேறு எந்த கருத்தும் கூற விரும்பலை சரவணன்...ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு குமுதத்தில் புத்தக உரை பக்கத்தில் ஒரு அம்மா கஸ்தூரி பாய் யின் biography பற்றி ஆராய்ச்சி செய்து நூல் பற்றி வெளியிட்டு இருந்தாங்க...ஒரு மனைவியா அவங்களுக்கு நம் மகாத்மா மேலே இருக்கும் வருத்தங்கள்,ஏக்கங்கள்..குறைகள் எல்லாம் அந்த புத்தகத்தில் சுட்டி காட்டி பட்டதா இருந்தது..ஆனால் அந்த புத்தகம் நான் படிக்கலை சார்..ம்ம்...தமிழ் உதயம் சொல்வது போலே எந்த மனிதனுக்கும் மற்றொரு பக்கம் நிச்சய்ம் இருக்கும்..என்ன மகாத்மா வை நாம் கடவுள் ரேஞ் இல் வச்சிருக்கோம்..ஸோ குறைகள் யாரும் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மனசு விரும்புவதில்லை குறைகளே இருந்தாலும்...அதான் பாயிண்ட்...நன்றி சரவணன்...

கோலா பூரி. said...

பள்ளிக்காலங்களை நினைக்க வைத்து விட்டீர்கள். நன்றி

எல் கே said...

ஹ்ம்ம் யாரும் நூறு சதவீதம் சரி இல்லை நண்பரே. அவர் அனைவருக்கும் தெரிந்தவர் என்பதால் ஒரு சில விஷயங்கள் அதிகப் படியாக விவாதிக்கப் படலாம். சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கு மறுக்க இயலாது ஆனால் வேறு சிலவற்றில் பல மாற்றுக் கருத்துகள் எனக்கும் உண்டு

தருமி said...

two in one ...?

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - ஒரு கல்லில் இரு மாங்காய்களா ? பலே பலே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

செங்கோவி said...

ஆரம்பக் காலத்தில் வர்ணாசிரமத்தை முன்வைத்த காந்தி, 1930க்குப் பின் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். பின்னர் தீண்டாமைக்கு எதிரான தனது போராட்டங்களை முன்னெடுத்தார்..எல்லோரும் மதிக்கும் ஒருவரைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவது வாலிப வயதில் செய்யும் காரியம் தான்..ரத்தத்தில் சூடு குறைந்தால் எல்லாம் மாறும்..வாய்மையே வெல்லும்...நீங்கள் ஏன் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ படிக்கக்கூடாது?

Anonymous said...

முதலில் ஒன்றாம், இரண்டாம் வகுப்புச் சிறார்களை காந்தி நினைவகம் அருங்காட்சியகம் போன்றவிடங்களுக்குக் கூட்டிச்செல்லக்கூடாது. அழகர் மலை, விளையாடுமிடங்கள் போன்ற மகிழ்ச்சிதரும் இடங்களுக்குத்தான் கூட்டிச்செல்லவேண்டும்.

ஒரு அரசியல் தலைவர், அல்லது விடுதலைப்போராட்ட வீரர் போன்றவர்கள் இடங்கள் சிந்தனைத் தூண்டவேண்டியவை. அவை பெரியோர்கள், அல்லது வளர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமே.

சின்னஞ்சிறு மழலைகள் மனத்தில் நாம் ஏன் இப்படி எண்ணங்களை இப்போது புகுத்த வேண்டும்?

அவர்கள் வளர வளர காந்தி, நேரு, போன்றோரின் வாழ்க்கை எப்படி புகுத்தப்பட்டதோ அப்படிப் பார்க்கும்படித்தான் மூளைச்சலவை பண்ணப்பட்டு, பிற்காலத்தில் மாறுகோணம் தெரியவரும்போது மலைக்கிறார்கள். அல்லது அக்கோணத்தை வெளிச்சொல்வோரை வெறுக்கிறார்கள். இங்கே பின்னூட்டமிட்டோரின் செயலைப்போல.

காந்தியைப்பற்றி.

அம்பேத்கருக்கும் அவருக்குமிடையே நடைபெற்ற பிணக்கைப்பற்றி தெரிந்திருந்தால், பலர் காந்தியின் தீண்டாமை ஒழிப்பு ஒரு அரங்கேற்றபபட்ட நாடகம் எனப்புரிந்து கொள்வார்கள்.

பெரியாரின் காங்கிரசு விலகலுக்கு காந்தியே மூல காரம். காந்தியாரின் தஞ்சாவூர் பேச்சில் அனைவரும் வருணக்கொள்கையை ஏற்று பிராமணர்களைப்பூசனை செய்ய்வேண்டும் என்றார். காந்தியாரின் இக்கொள்கை பலரையும் வாட்டியது

காந்தியாரின் இருட்டடிக்கப்பட்ட கோணத்தைப் பற்றி உங்கள் மதுரை நண்பர்கள் சொன்னதைப் போட்டமைக்கு ரொம்ப நன்றி. எதுவே மறைக்கப்படக்கூடா.

Anonymous said...

//ஆரம்பக் காலத்தில் வர்ணாசிரமத்தை முன்வைத்த காந்தி, 1930க்குப் பின் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்//

திரு செங்கோவி, நான் சுட்டிய தஞ்சை காங்கிரசு மாநாடு 40 களில் நடந்தது. காந்தியின் பேச்சு தமிழக வரலாற்றில் ஒரு பெரும் திருப்பத்தைத் தோற்றுவித்தது: பெரியாரின் எழுச்சி, காங்கிரசு விலகல். பிராமண எதிர்ப்பு என்றெல்லாம் 6 பத்தாண்டுகளாக நடந்தன.

காந்தியார் தான் கடைசிவரை வருணாஷ்ர தர்மத்தை விடவில்லை. பிராமண்ர்கள் இறைவனால் உயர்னிலையில் படைக்கப்பட்டார்கள். அவர்களை ஒட்டு மொத்த சமூகம் பூசனை செய்யவேண்டும் என்பதே அவர் கொள்கை.

தலித்து செய்யும் சுத்திகரிப்பு வேலை சமூகத்துக்குத் தேவை. அதை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களை சமமாக நடத்த வேண்டும். என்பதுதான் சாரம். இதைக்காட்டவே நவகாலியில் அவர் மலம் அள்ளும் நாடகம் நடாத்தினார்.

இதன் உட்பொருள் மோடி சொன்னதுவே: அதாவது:

”ஒரு சக்கிலியன் மலம் அள்ளுவது அவனுக்கு வருணாஷ்ர தர்மம் இட்ட தர்மமாகும்..

அத் தர்மத்தை அவன் சிறப்புற செய்யின் மோட்சத்துக்கு செல்வான். மறுபிறவியில் மேனிலை அடைவான்.”

செங்கோவி said...

ஐயா, 1930 என்று நான் எழுதியது என் நினைவிலிருந்து..அவர் நவகாளியில் மட்டுமா மலம் அள்ளினார்..பலமுறை தன் ஆசிரமத்திலும், 3ம் வகுப்பு ரயில் பெட்டியிலும் அள்ளியிருக்கிறார்..மீண்டும் என்னால் சொல்லமுடியும்;அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்..நீங்கள் உங்கள் நிலைப்பாட்டைத் தொடர்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை பாஸ்..இத் தளம் ‘கல்விக்கான சிறப்பு வல்லை’ என்று போட்டதாலேயே உண்மையை இங்கே பதிந்தேன்.நன்றி.

Post a Comment