Tuesday, February 15, 2011

STD- ரூபாய் இருபதுக்கும் , ஐம்பதுக்கும்

  பிப்ரவரி 7ம் தேதி டெக்கான் கிரானிக்கல் பக்கம் இரண்டில் மதுரையை பற்றிய பயமுறுத்தும் செய்தி வெளியாகி இருந்தது. மதுரை சமூகவியல் கல்லூரி நடத்திய  ஆய்வின் ஆதாரமாக நடைபெற்ற(workshop ) பட்டறையில் விவாதிக்கப்பட்ட கருத்துப்பற்றி அந்த கல்லூரியின் பேராசிரியர் கூடலிங்கம் அவர்கள் அளித்த பேட்டியே அச்செய்தியாகும்.  அநேகமான இளைஞர்கள் பாலியல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்-ஆய்வு என்ற தலைப்பில் வெளியான அச்செய்தியின் சாரம் இதோ ....
     தொழில் முறை விபச்சாரிகளிடன் இருந்து இளம் மாணவர்களுக்கு பாலியல் தொற்று நோய்கள் பரவுகின்றன .
                     மதுரையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன், மருத்துவரிடம் (genitalia infection ) பாலியல் நோய் சம்பந்தமான சிகிச்சைக்கு வந்தான். அவனைப்போல உள்ள பிற மாணவர்களையும் அழைத்து வந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறி , அவனைப் பற்றி தனி நபர் ஆய்வு (case study )  மேற்கொண்டதில் , ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு என்ற முறையில் மாணவன் ஒருவன் மூலமாக அவனுடைய வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் வயதான விபச்சாரியுடன் அடிக்கடித் தொடர்பு கொண்டு  உறவில் ஈடுபட்டதால் இந்த நோய்(STD ) பரவியுள்ளது தெரிய வருகிறது. மேலும் ரெகுலர் வாடிக்கையாளர் கைவிட்டதால், இந்த வயதான தொழில் முறையிலான விபச்சாரிகள் , மாணவர்களிடம் உறவு வைத்துள்ளனர். மாணவர்கள் ரூபாய் இருபதுக்கும் , ஐம்பதுக்கும் விபச்சாசரிகளிடம் உறவு வைத்துள்ளனர். பின்பு அந்த மாணவர்கள் நோயில் இருந்து குணப்படுத்தப் பட்டனர். நாம் குழந்தைகளுடன் நட்பாக பழகும் முறையை பிரபலப்படுத்த வேண்டும் என்கிறது அந்த செய்தி .

ஜூனியர் விகடனில் பனிரண்டு வயது சிறுமியை , பதினான்கு வயது சிறுவன் கட்டித் தழுவுவதற்கு  உரிமை உண்டு .ஆனால் அதற்கு மீறி செயல் பட்டால் , கற்பழிப்பு குற்றம்.
என விரியும் செய்தி...

      எங்கே செல்கிறது நம் தமிழகம் .... ?அதுவும் மதுரை மிகவும் பயமாக உள்ளது. மெட்ரோ பாலிட்டன் நகரங்களை விட மிக வேகமாக குட்டிச்சுவராகிக் கொண்டு வருகிறது. இரண்டாம் வகுப்பில் சகமாணவியிடம் காதல் கொள்ளும் சிறுவன். காதலை வெளிப்படையாக வெகுளித்தனமாக படம் வரைந்து சொல்லும் ஏழுவயது  பாலகன் . அதை சிரித்து ரசித்து ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் உள்ள மாணவி. ஆசிரியர் முன்னிலையில் எதார்த்தமாக பார்வைகளை பரிமாறிக் கொள்ளும் அசுர வளர்ச்சி... இதன் விளைவு இன்று பாலியல் உறவு .... அதுவும் தொழில் முறையிலான  விபச்சாரியரிடம்...!

       இதில் எட்டாம் வகுப்பில் மாணவ மாணவியர் தவறான பாதைகளுக்கு ஆட்பட்டு , தவறு செய்யாமல் இருக்க வேண்டுமென , தழுவிக் கொள்வதில்  தவறில்லை , அதனை   மீறி தவறு செய்தால் மட்டுமே , அவர்கள் மீது கற்பழிப்பு குற்றம் பதிவு செய்யலாம் என சட்டம் இயற்ற முயற்சி. இதை மாணவர்களா கேட்டார்கள் ?என ஜு. வி யில் உள்ள கேள்விக்கு அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பதிலாகவே உள்ளார்கள் .

   இவர்கள் ஒருபுறம் இருக்க கோவி. கண்ணன் ஆதங்கம் போல சில ஆசிரியர்கள் மாணவர்களையே பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தும் அவலமும் நம் தமிழ் நாட்டில் தான்!  பணி பாதுகாப்பு சட்டம் என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமே உடைய ஒன்று. அதனால் , இவர்கள் எந்த தவறு செய்தாலும் , சஸ்பெண்ட் ஆகி , சில நாட்களில் இந்த சட்டத்தின் வாயிலாக பணிக்கு மீண்டும் திரும்பும் அவலமும் நம் தமிழ் நாட்டில் தான். வேலியே பயிரை மேயும் போது இவர்களுக்கு எங்கே கவலை  இருக்க போகிறது....? என்று இப்பிரச்சனையை சும்மா விடமுடியுமா..?

      பொதுவாக எந்த ஆசிரியரும் மாணவர்களிடம் பாலியல் தொந்தரவுகளை செய்வதில்லை. பெரும்பாலும் கிராமப்புறம் சார்ந்தே இப்பிரச்சனைகள் வெடிக்கின்றன. அதற்கு காரணம் சக ஆசிரியர்கள் மீது உள்ள காட்டம், பொறாமை , இயலாமை ஆகியவற்றின் வெளிப்பாடு , அப்பாவி மாணவர்களை தங்கள் சுய வஞ்சனைகளை தீர்ப்பதற்கு பயன்படுத்தி ,  பிற ஆசிரியர்கள் மீது பழி சுமத்துதலே நடக்கிறது.  அதனால் தான் பல செய்திகள் , சுடு குறைந்தவுடனே மறந்தும், மறைத்தும் போகின்றன.   உண்மையில் தவறு செய்யும் ஆசிரியர்கள் , தகுதி இழப்புக்கு உள்ளாக்கி , சிறையில் தள்ள வேண்டும் .

     அப்படி என்ன அவசியம் ஏற்பட்டது , இந்த படிக்கும் வயதில் பாலியல் தொழிலாயிடம்  உ றவு கொள்வதற்கு..?வயது வித்தியாசம் தெரியாமல் ஒரு காட்டு மிராண்டித் தனமான உறவு ? கல்வி முறையில் குற்றமா... ? வளர்ப்பு முறையில் குற்றமா..? ஆசிரியர்கள் கற்ப்பிக்கும் முறையில் குற்றமா..? இல்லை அவன் வளரும் சூழல் முறையில் குற்றமா?


    சமூக சூழலில் செக்ஸ் ஒரு பகட்டாகக்  காணப்படுகிறது. செக்ஸ் ஒரு பெரிய விசயமாக பேசப்பட்டாலும் , செக்ஸ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தவறாகவே உணர்த்தப்படுகிறது. சினிமாவிலும் அது பாடல்களில் வெளிச்சமாக காட்டப்பட்டாலும் , பொது  வெளியில் அக்காட்சிகளை நாம் பகிரங்கமாக அனைவர் முகத்தின் முன்னாலும் பார்க்கவும் மூடிய வில்லை, பேசவும் முடியவில்லை.நம் சமூகம் , வெட்ட வெளியில் பாத்ரும் கழித்தாலும் , ரயில் கடக்கும் போது முகத்தை முடிக்கொண்டு , மறைக்க வேண்டியதை மறைக்க தவறும் நபர்களாக இருப்பதால் , செக்ஸ் என்பது ஒரு கமுக்க நடவடிக்கையாக மாறிவிட்டது.  குழந்தைகள் அதனை அறிய வேண்டும் என முற்படுகின்றனர்.  செக்ஸ் கொள்வதில் ஒரு ஆனந்தம் இருப்பதாக உணரப்பட்டு, அதனை பகிர்வதில் கர்வம் கொண்டு , தன்னை ஒரு ஆண்மையின் அடையாளமாக வெளிப்படுத்த முயன்றதன் விளைவே , விபச்சாரிகளிடம் செக்ஸ் கொள்ள தூண்டி இருக்கிறது.

      சென்ற இடுகையை பற்றி தருமி அவர்களிடம் உரையாடிய போது , தாவரங்களின் பாலியல் பற்றியே கற்றுத்தராத தனக்குத் தெரிந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் இருக்கும் போது , மனித உடல் உறவு பற்றி எங்கே பேசப்போகிறார்கள் ? என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்  .  செக்ஸ் பற்றிய தவறான உணர்த்தல் மற்றும் புரிதல் , மாணவர்களை சிறுவயதிலே மாறுபட்டப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. மாணவர்களை நாம் செக்ஸ் சம்பந்த பட்ட விசயங்கள்  பேசும் போது விரட்டுகிறோம். "கல்யாணம் முடித்து ஏன் தனியாக ரூம்மில் செல்கிறார்கள் ?"என்று கேட்கும் குழந்தைகளுக்கு நாம் முறையான பதில் தருவதில்லை. நீ கல்யாணம் பண்ணும் போது தெரியும் போ நாம் விரட்டி அடிக்கிறோம்.  "மாமா அத்தைகிட்ட தனியா பேசிகிட்டு இருக்கும் போது நீ அவுங்க ரூம்முக்கு போகக் கூடாது" என கட்டுப்பாடு விதிக்கிறோம். இவைகள் தேக்கி வைக்கப்பட்ட அணை நிறைப் போல எங்காவது ஓட்டை இருக்காதா பாய்ந்து ஓட  என அலைபாய்வதால் ,பல இளம் வயதினர் பருவத்தை எட்டும் முன்னே பாவங்களை செய்யக் கற்றுக் கொள்கின்றனர்.

        முறையான செக்ஸ் கல்வியினை துவக்கப் பள்ளி முதலே கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு குட் டச் பேட் டச் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.மாணவர்களுக்கு மூத்த மாணவர்களால் உருவாகும் கசப்பான அனுபவங்களை கட்டுப்படுத்த வேண்டும் . மாணவர்களுக்கு நம் மீது நண்பனை போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் .அவர்களிடம் இயல்பாக பேசக் கற்றுக் கொள்ளவேண்டும். செக்ஸ் விசயத்தில் இருவேறுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. மர்ம உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களை பேச வேண்டும் .வயிற்று வலிக்  குறித்து  பெண்களிடம் விரிவான உரையாற்ற வேண்டும்.பல பெண்கள் வயதுக்கு வந்துக் கூடத் தெரியாமல் இருப்பது வருத்தமடையச் செய்கிறது. தற்போது மூன்றாம் வகுப்பிலே பருவமடைக் கின்றனர்.
 
       செக்ஸ் என்பது உடல் உறவு சார்ந்த விஷயம் என்றே அனைவரும் பார்க்கின்றனர்.
அது ஒரு பகுதியே என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள் . செக்ஸ் என்பது சமூகத்துடன்  மாணவனுக்கான உறவு ,ஒழுக்க நிலையில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை உணர்த்துவதாக இருக்க வேண்டும் .செக்ஸ் எப்போதும் ஆண், பெண் குறிகளைப்  பற்றி பேசுவதாகவும் அமைந்து விடக் கூடாது .பருவ மாற்றங்களில் மாணவனுக்கு ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பேச வேண்டும் . அதனால் அவனுக்கு ஏற்படும் அச்சங்களை அகற்ற முற்பட வேண்டும்.

       பகிரங்கமாக பள்ளிகளிலும் , வீடுகளிலும் செக்ஸ் பேசப்படாத வரை , நம் மாணவர்கள் ஐந்துக்கும் , பத்துக்கும் கூட உறவு கொள்ளும் நிலை ஏற்படலாம்...? செக்ஸ் கல்வியை ஆரம்பக் கல்வி முதலே வலியுறுத்துவோம். செக்ஸ் மீது உள்ள தவறான கருத்தை அகற்றுவோம். செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை மாணவனுக்கு ஏற்படுத்தி அவனின் எதிர் காலத்தினை செம்மையாக்குவோம். 

15 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத ஆளா வந்துட்டோம்ல! எப்புடி?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அப்படியே நம்ம கடைப் பக்கமும் வர்றது?

இதையும் படிங்க: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி

நீச்சல்காரன் said...

நல்ல கருத்துதான். ஆனால் எனக்கு ஒரு குழப்பம், வீடுகளில் பகிரங்கமாக எப்படி பேச வேண்டும்? அப்படி பேசுவதால் கூடுதல் ஈர்ப்பு ஏற்படாதா?

Kanchana Radhakrishnan said...

pakirvirku nanri.

வருண் said...

***பகிரங்கமாக பள்ளிகளிலும் , வீடுகளிலும் செக்ஸ் பேசப்படாத வரை , நம் மாணவர்கள் ஐந்துக்கும் , பத்துக்கும் கூட உறவு கொள்ளும் நிலை ஏற்படலாம்...? ***

அந்தக் காலத்தில் பகிரங்கமாப் பேசப்படலைங்க. எல்லாரும் எஸ் டி டி வச்சுக்கிட்டா அலைஞ்சாங்க?
அரைக்கிணறு தாண்டுவதுதான் பிரச்சினை. அரைக்கிணறு தாண்டுற ஒண்ணைத்தான் நம்மாளூ தெளீவாப் பண்ணுறான்!

G.M Balasubramaniam said...

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. சென்ற தலைமுறைகளில் இல்லாத தறிகெட்ட தன்மை இப்போது அதிகரித்துள்ளது ஏன்.?இப்போது பள்ளிகளில் மாரல் சயன்ஸ் வகுப்புகள் நடக்கின்றனவா.நல்ல குணங்கள் தீய குணங்கள் எது எது என்று கற்பிக்கப்படுகிறதா.?சரவணன், ஆசிரியப்பணி ஒரு டெடிகேட்டட் பணி. பொறுப்புகள் கூடுதலான பணி.எல்லோரும் உணரவேண்டும், எல்லோருக்கும் உணர்த்தவேண்டும்.

geethappriyan said...

நண்பரே
தலைசுற்றுகிறது.
இருங்க் நார்மலாயிக்கறேன்.
மிகவும் பயங்கரமாயிருக்குங்க.
அமெரிக்காவில் கூட கல்லூரிமாணவர்களிடம் தான் ஹெரிப்பீஸ் அதிகம் தொற்றுகிறது,அது இருந்தாலே மிகவும் அருவருப்பாக விலகி ஓடுவார்கள் என படித்திருக்கிறேன்.இங்கே 9ஆம்வகுப்பிலேயேவா?விளங்கிவிடும்.கலிகாலம்

geethappriyan said...

இந்த விபரீதம் விளையக்கூடாது என்று தான் என் மகள் படிக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பையே ஆண்,பெண் என பிரிக்கப்போகிறார்களாம்.

ஹுஸைனம்மா said...

என்ன சொல்றதுனே தெரியலை!! அதிர்ச்சியில உறைஞ்சு போயிருக்கேன்...

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் சமுதாய அக்கறை புரியுது சரவணன்...

ஹேமா said...

நம் நாடுகளின் நாகரீக மோகம்.எங்கள் வீடுகளில் பெரியவர்கள் பக்கம் இருந்து பேசிக்கூடக் காணமாட்டோம்.ஊடகங்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் கூடியே இந்தக் கேவலம் !

Philosophy Prabhakaran said...

இந்தப்பதிவுக்கு கருத்து சொல்ற அளவுக்கு நான் பக்குவப்படலைன்னு நினைக்குறேன்... எஸ்கேப்...

சுதர்ஷன் said...

நல்ல பதிவு ..அவசியமானது .. எல்லாம் அடக்கி அடக்கி வைத்ததன் விளைவு.....எங்கே அடக்குமுறை கூடவோ அங்கே தான் அதிகமாகும் ..இதை சரியாக அணுக வேண்டும் ...அறிவூட்டுவதன் மூலம் .

சுதர்ஷன் said...

நல்ல பதிவு ..அவசியமானது .. எல்லாம் அடக்கி அடக்கி வைத்ததன் விளைவு.....எங்கே அடக்குமுறை கூடவோ அங்கே தான் அதிகமாகும் ..இதை சரியாக அணுக வேண்டும் ...அறிவூட்டுவதன் மூலம் .

Kandumany Veluppillai Rudra said...

"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்."

Post a Comment