என் அறையில் இரண்டாம் வகுப்பு மாணவன் , தனக்கு பிறந்த நாள் என வெறும் டப்பாவுடன் வந்து "சார், பிறந்த நாள் என கூற ..." "வாழ்த்துக்கள் ...என புன்னகையுடன் ...அந்த பையனை கூப்பிடு ..".என மழுப்பி தப்பித்தேன் . அவனும் வந்த வெறும் டப்பாவுடன் ...என்னை ஏமாற்ற வந்து ஏமாந்து போனான்.
"சார்..சட்டையில என்ன சார்...."என ஏமாற்ற நினைத்த ஆசிரியருக்கு ..."அது என மனைவி ஏப்ரல் அன்று செய்த மாயம் ...உனக்கும் அதுபோல இருக்கே..."என்றேன்.
இயற்க்கை உபாதையை வெளியேற்ற வந்த மாணவன் ரவுன்ஷில் என்னை பார்த்தவுடன் "சார் ..பட்டாம்பூச்சி பறக்குது பாருங்க சார்..." என்றான். "அட அத இப்பதாண்ட... உங்க வகுப்பு சுல்தானுக்கு கொடுத்தேன்.. " "சார் ரெம்ப உசாரு..."என்று முனங்கியபடி சென்றான்.
"மதிய உணவு பத்தவில்லை ...இன்னும் பத்து பேருக்கு சோறு வேண்டும் ..." என கலாய்த்த பத்தாம் வகுப்பு மாணவனிடம் ...."இப்பதான் எட்டாம் வகுப்பு மாணவனிடம் காசு கொடுத்து ஹோட்டல் சாப்பாடு வாங்கி வர அனுப்பினேன்..." என்றவுடன்" சார் சுதாரிப்பா தாண்டா இருக்காரு ..."என்று சிரித்துக் கொண்டே சென்றான்.
மதியம் மூன்று மணி ....."சார்...ட்ரைவர் ....இன்னைக்கு மதியம் லீவு ...வேறு ட்ரைவர் வேணும்" என்றவரிடம்..."இப்பதான் ட்ரைவர் வந்து சார் வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் நானே வண்டி எடுக்கிறேன் ...நீங்க தான் (நடத்துனர்)லீவு ன்னு சொல்லிட்டு போனார்..." என்ற நடத்துனரிடம் புன்னகையை மட்டும் பார்த்தேன்.
ஒரு வழியாக எல்லாரிடமும் தப்பித்து வீட்டிற்கு வந்தால்.....என் மனைவி"என்னங்க சட்டை முழுவதும் ஒரே கரையா இருக்கு " "கரை நல்ல விஷயம் தானே..."என விளம்பரம் கொடுக்க ..." அப்பா ...ஏமாற மாட்டாருன்னு நான் அப்பவே...சொன்னேனா..."என்றால் என் அன்பு மகள்.
சரி ..நிமதியாக இனி யாரும் நம்மை ஏமாற்ற முடியாது ...இன்றைய பொழுதை புத்திசாலியாகவே ...கழித்த மகிழ்ச்சியில் ...நாம் இனி வலை விரிப்போம் என நினைத்து ...வலையை இயக்க தொடங்கினேன்...கரண்டு கட் ஆகியது.
"என்ன மாமா...இன்று நம் ஏரியாவுக்கு கரண்டு கட் எப்ப....?"
"அட மாப்பிள்ளை ...மதியமே...போயிருச்சு ....கருமம்பிடுச்ச பசங்க எப்ப ஆப் செய்யுறாங்க ....எப்ப கரண்டு வரும்...அப்படினே...தெரியலை ..."
"அப்ப இன்னைக்கு சிவா ராத்திரி தான்...."என்று மொட்டை மாடி செல்ல தயாரானேன்.
கரண்டு ...வந்தது...இந்த இடுகை இடும் வரை கரண்டு போகவில்லை. அனைவரிடமும் ஏமாறாத என்னை இ.பி . காரர்கள் ஏமாற்றி விட்டனர்.கடைசியாக இன்று ஏப்ரல் பூல் ஆக்கப்பட்டேன் உங்களை போல....
கரண்டு போனது தவிர அத்தனையும் டூப்பு....நம்ம ஏப்ரல் பூல் இடுகைதான் டாப்பு ...
அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள்.
6 comments:
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆகா அற்புதமாக இருக்கு ரசிச்சி எழுதினத சுவைத்துப்படித்தன் நானும் உங்களுக்கும் வாழ்த்துச்சொல்லுறன். முட்டாள்களை முட்டாள்களே அறிவர்
//கரண்டு போனது தவிர அத்தனையும் டூப்பு....
நம்ம ஏப்ரல் பூல் இடுகைதான் டாப்பு ...//
ஆற்காடு வீராசாமி சீக்கிரமே வைப்பாரு
ஆறேழு மணி நேர ஆப்பு... :))
நல்ல வேலை உருளை கிழங்கில் அச்சு பண்ணி சட்டைலலாம் குத்தலையே .நம்ம ஃபூல் ஆயிடோம்ன்னு தெரியாம நாள் பூரா சுத்திட்டு இருப்போம்
இதில் இருந்து என்ன தெரிகிறது முட்டாள் ஆக்குகின்ற தினமா? இல்லை முட்டாள்கள் முட்டாளாக இருக்கின்ற தினமா சொல்லுங்களேன்
உண்மையை உணர்த்தும் நேரம் சார்!!!
Post a Comment