Friday, April 9, 2010

அற்புத தீவும் அசத்தும் குழந்தைகளும்

          அருணை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது! திரு பள்ளியில் அருண் ஒரு திறமையான மாணவன். மிகவும் புத்திசாலி. நண்பர்கள் வட்டம் மிக குறைவு. அருணை பற்றி சொல்லும் முன் அவன் படிக்கும் பள்ளி பற்றி சொல்லி ஆக வேண்டும். இந்த கதைக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

        "திரு உயர் துவக்கப் பள்ளி , மதுரையில் மிகவும் பிரசித்தம் பெற்ற பள்ளி. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் அருகில் நின்று கேட்டாலே சொல்லி விடுவர். என்ன ஆச்சரியம் என்று கேட்டு விடாதீர்கள். பள்ளி கல்வி ஆய்வாளர் அலுவலகம் அருகில் இருப்பதால் , எந்த பள்ளியை பற்றி விசாரித்தாலும் உடனே அங்கு அனுப்பிவிடுவர். பின்பு என்ன ? எந்த பள்ளியின் முகவரியும் தெரிந்து விடுமே..!" என்று காலாய்க்கும் ஆசிரியர் குரு பிரசாத் அந்த பள்ளியில் தான் வேலை பார்கிறார்.

       திரு பள்ளி காமராஜர் சாலையில் உள்ளது. திரு பள்ளி மதுரையின் ஒருசில நல்ல பள்ளிகளில் ஒன்று .ஆனால் இலவச கல்வியை தரமாக தருவதால்,கூலி தொழிலாளி முதல் முதலாளி வரை மாணவர் சேர்க்கைக்கு அலை மோதுவர். இந்த கோடை விடுமுறைக்கு முன்னரே மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாக சொல்லுகிறார்கள்.திறமை , படிக்கும் ஆர்வத்தின் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்ப்பர். இருப்பினும் சேட்டை செய்யும் மாணவர்கள் அதிகம் இருக்க தானே செய்வார்கள். மதுரையில் அறுபது ஆசிரியர்கள் வேலை பார்க்கும் ஒரே உயர் துவக்கப் பள்ளி.

       சேட்டை என்றதும் அருண் ஞாபகம் வந்து விட்டது. அருணை பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொன்னீர்களே...? ஆம் ! தலைமை ஆசிரியர் ஆனந்திடம் , எட்டாம் வகுப்பு மாணவன் ..." சார்,நம்ம  அருண் ...கிரவுண்டுல  உட்கார்ந்து அழுதுக் கொண்டு இருக்கிறான் ...சார் ..ஏன் டான்னு ?கேட்டா சொல்ல மாட்டுகிறான் சார்...."
"அப்படியா...உடனே குரு சார ...கூப்பிடு ..." என்று கிரவுண்டு நோக்கி செல்கிறார். மீண்டும் மாணவன் வழி மறித்து "சார்...குரு சார கிரவுண்டுக்கு வர சொல்லவா சார்.?"    " ஆமாம் ...வரச்சொல் " என விரைந்தார்.

      அருண் ஒரு சாதாரண ரிக்ஸா தொழிலாளி மகன் . ஒரு தங்கை , அவளும் இதே பள்ளியில் இரண்டாவது படிக்கிறாள். இருவருக்கும் மூன்று வயது வித்யாசம் மட்டுமே.அவனின் தாய் மகளீர் சுய உதவிக்குழுவின் உதவியுடன் ஊறுகாய் விற்பனை செய்கிறார். ஊறுகாய் வாங்க வரும் அனைவரும் "அக்கா! அருண் இருந்தா கூப்பிடுங்கள், நாளைக்கு அறிவியல் நோட்டில படம் வரைந்து  காட்டணும்,நோட்டை கொடுத்துட்டு போறேன் ..வரைந்து வைக்க சொல்லுறேங்களா...." "சரி சரி...நோட்டை அவுங்க அப்பன் கண்ணுக்கு தெரியாம .வச்சுட்டு போங்க ..." "ஏன் அவுங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ?" அப்படின்னு நீங்க கேட்கிறது புரிகிறது.

      "வாங்க அருணுக்கு எனாச்சுன்னு பார்ப்போம் ...?" விரைந்தார் அருணுக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர் ரேவதி. ரேவதி அன்பானவர் , அவரிடம் படித்து வெளி வரும் அனைவரும் தனி திறமையை ஒன்றாம் வகுப்பிலேயே வெளிபடுத்தி விடுவர், அதில் செழுமை அடையும் வரை பயிற்சி தாருவார். அவன் பள்ளி விட்டு செல்லும் வரை தொடர்ந்து ஊக்கம் தந்து , நிதி உதவிகளையும் செய்வார். தமிழ்நாட்டின் சிறந்த ஆசிரியர்களுள் ஒருவராவர். அருனின் ஓவிய திறமை வெளிப்பட , இன்று வரை ஜொலிக்க அவர் ஒருவரே காரணம்.

       "என்னாக்கா ...அருணோட திறமை அவுங்க அப்பாவுக்கு தெரியாத...ஏன் திட்டுவார்..." "அருண் நல்ல பையன் தான் ஆனா ....அவன் திறமைக்குள்   ஒரு சிக்கல் இருக்குதே ..?" " என்னக்கா விவரமா  சொல்லுங்க ....அடுத்தவங்க பாராட்டும் விதமா படம் வரையும் திறமை யாருக்கும் அமையாது....அதுவும் இந்த சின்ன வயசுல இப்படி ஒரு திறமை இருக்கிறது அனைவரும் சந்தோசப் படுகிற ஒன்னு.."
"அம்மாடியோவ் ...உன் திருவாயை மூடு....அவன் வரை வதில் அவருக்கு பெருமை தான் ...ஆனா அவனுக்கு அதையும் தாண்டி ஒரு திறமை இருக்கு ...அதுக்கு தான் பயப்புடுராங்க ..."
"திறமையை கண்டு யாராவது பயப்படுவங்களா....? புரியாத புதிராவே...இருக்கு...!"
"யாருகிட்டையும்  சொல்லிடாதடி...அருண் தனிமையில் ஏதாவது ஓவியம் அவனை அறியாமலே...சில சமயங்களில் வரைகிறான்...."
"ஏன் அந்த ஓவியங்களில் என்ன தவறு எதாவது இருக்கா...தப்பா ஏதாவது வரைந்து விடுகிறானா...?"
" போடி கிறுக்கட்சி...அப்படியெல்லாம் நீ நினைக்கிறமாதிரி தப்பா வரைய மாட்டான்... அவன் கரெக்ட்டா  தான் ...வரைவான் .... அது தான் பிரச்சனை..."
"அக்கா ...சொல்ல வராத ...பீடிகை போடாம ...நேர சொல்லுக்கா..."
" ஒரு தடவை ...ஊறுகாய் வாங்க  வர பொண்ணு படம் போட்டு ...ஒரு பையன் தர தரன்னு இழுத்துட்டு போற மாதிரி வரைந்து இருந்தான்...."
" அப்புறம்...." " அந்த பொண்ணு ....அடுத்த இரண்டு நாளில் ....அதே உருவம் கொண்ட ...பையனுடன் ஓடி போய் கல்யாணம் பண்ணிகிடுச்சு..."
"என்னக்கா இதுல இருக்கு ...அந்த பையனோட பேசினத பார்த்திருப்பான்.....அத வரைந்து இருப்பான் ...இதுக்கு போய் ..."
" அந்த பொண்ணு ஓடி போச்சா...அப்புறம் ஒருநாள் ...ஏன் துரத்து மாமா படம் வரைந்து ...லாரிக்கு அடியில் ரத்தம் ஒழுக செத்து கிடப்பது போல்  வரைந்து  இருந்தான் ...அதே மாதிரி ...அவர் லாரி ஏற்றி இறந்தார்..."
" என்னக்கா ...பயமா இருக்கு .....அப்புறம்..."
" என் மாமியார் ....கை எலும்பு முறிந்து கட்டு போட்டது போல ...வரைந்தான்...மாமியார் ..மறு நாளே ...பாத்ரூமில் வழுக்கி கை உடைத்து கொண்டார்...."
"அக்கா ...நீங்க சொல்லுறத பார்த்தா ....பயமாவும் இருக்கு ...நடக்கிறதா முன் கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளதாகவும் தெரியுது..."
"ஒரு பக்கம் ...சந்தோசமா இருந்தாலும் ...யாருகிட்டயாவது ...எதையாவது வரைந்து கொடுத்து அவனுக்கு அதுனால பிரச்சனை வந்து விடக்கூடாது..."
"அக்கா ...அது இருக்கட்டும் நான் வரைய கொடுத்த நோட்ட கொடுங்க ..."

    "டேய் ...அருண் டீச்சர் ...கிளாசுக்கு ...வாடா...ஏன்  அழுகிற ...? அப்படி என்னடா ..நடந்துச்சு....சொல்லு ...யாரவது ..அடிச்சாங்களா ?  ...." என ரேவதி கேட்க ..
"டீச்சரை கட்டி பிடித்து அழுக துவங்கினான்  .அவன் கையில் வைத்து இருந்த ஓவியத்தை பார்த்த ரேவதிக்கு பகிர் என்றது.

                                                                                         ......தொடரும்

1 comment:

Balakumar Vijayaraman said...

என்ன சார், குழந்தைகளுக்கான கதை என்று வாசிக்க ஆரம்பிச்சா, திரில்லரா இருக்கு. :) தொடருங்கள்.

Post a Comment