Thursday, April 8, 2010

கல்வி தரம் குறைய ஆசிரியர்கள் தான் முக்கிய காரணம்.

    மாணவர்களின் கல்வி தரம் , அதாவது திறன் அடைவு குறைந்து கொண்டே போகிறது வருத்தமான செயல் ஆகும். தொடர்ந்து கல்வியாளர்களும், பத்திரிக்கைகளும் குரல் எழுப்பினாலும் இன்றுவரை அது ஆசிரியர்களை சென்று அடைந்ததா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக வரும். இன்று கல்வி தரம் குறைய ஆசிரியர்கள் தான் முக்கிய காரணம்.
  
     சமீபத்தில் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பணிபுரியும் என் நண்பரை சந்தித்தேன் . அவர் சொன்ன ஒருவிசயம் எனக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. இன்று அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் சிலட் ,நெட் தேர்வு அல்லது பி.ஹிட்ச் .டி . படித்தவருக்கு மட்டுமே வலை என்றவுடன் பல பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளது . ஏன்? இந்த தொய்வு.? அறிவாளிகள் இல்லையா? அல்லது விரிவுரையாளர் வேலையை பலரும் விரும்ப வில்லையா? ஒன்று மட்டும் புலனாகிறது கல்வியில் எங்கோ தரம் குறைவது இந்த தொய்வுக்கு காரணமாக இருக்கலாம்.
  
       மீண்டும் விசயத்திற்கு வருவோம், கல்வி தரம் குறைவதற்கு காரணம் ஆசிரியர்கள் தான் என்பதை வலியுறுத்த கடமை  பட்டுள்ளேன். இந்த குறையை போக்க ஆசிரியர்கள் தங்களை நாளுக்கு நாள் தரம் உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டை வைக்கும் முன் ,இதற்கான காரணங்களை சொல்ல கடமை பட்டுள்ளேன்.

     அன்று எனக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களிடம் பாடம் சாராத நல்ல புத்தகங்கள் அதிகம் ,குறைந்தது ஒருநாளுக்கு ஒரு புத்தகமாவது கொண்டு வருவார்கள். பாடம் சாரா நிறைய விசயங்களை பேசுவார்கள். ஆனால் அது பாடம் நடத்தும் போது சம்பந்த படுத்தி பேசி நிறைய விசயங்கள் தருவார்கள் . மாணவர்களாகிய நாங்களும் அன்று ஆசிரியர் போல் நாமும் நிறைய விசயங்கள் சொல்ல வேண்டும் அல்லது அது போல நாம் படிக்க வேண்டும் என்பதற்காகவே நூலகங்கள் செல்லுவோம். அன்று குறைந்தது ஆசிரியர்கள் கையில் குமுதம் , ஆனந்தவிகடன் , கல்கி, சாவி போன்ற வார இதழ்களாவது இருக்கும்.
கதை படித்தாவது நல்ல கதைகளை சொல்லுவார்கள்   . அதுவும் அவர்கள் அபிநயத்துடன் சொல்லும் போது , நமக்கே கதை எழுத வேண்டும் போல் இருக்கும். மாணவர்களில் பலர் , அவரை போல் தானே கதை தயாரித்து , சொல்லுவதை பார்த்திருக்கிறேன் .ஏன் நானே பத்தாம் வகுப்பு படிக்கும் போது கதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி உள்ளேன்.                     ( தொடர்ந்து கதை எழுதி பிரசுரிக்காமல் இருந்த போதும் , ஆனந்த விகடன் ,தங்கள் கதை புரசுரிக்க பரிசிலிக்க பட்டது. இருப்பினும் தங்கள் எழுத்து ஆர்வத்தை  பாராட்டுகிறோம் ,  தொடர்ந்து எழுதவும் என்பது இன்று வரை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமாக உள்ளது. )

        இன்று ஆசிரியர்களிடம் வார இதழ்கள் பார்ப்பது அரிதாகவே உள்ளது. இன்னும் செய்தித்தாள் பார்க்காத ஆசிரியர்கள் உள்ளார்கள். முடிந்தால் உண்மையான சர்வே எடுத்து தர தாயாராக உள்ளேன். நான் ஒரு கூட்டதில் ஆசிரியர்கள் மத்தியில் பேசும் போது , நூற்று இருபது நபர்களில் தொண்ணூறு ஆசிரியர்கள் வார இதழ் வாங்கி படிக்க கூட நேரம் இல்லை என்று சொன்னது தான் ஆச்சரியம். சின்னத்  திரை மோகம் ஆசிரியர்களையும் விட்டு விடவில்லை. சாதாரண கதை சொல்லும் தகுதியைக்  கூட வளர்த்துக் கொள்ள  வார இதழ் படிக்காத ஆசிரியர்கள் , மாணவனுக்கு புது விசயங்கள் கூற , புத்தகம் எப்படி படிப்பார்கள்?

     மாணவர்கள் கல்வி தரம் உயர ஆசிரியர்கள் தம்  தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். எத்தனை கல்வி நிறுவனங்களில் , மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்துகிறார்கள். ஆசிரியர்களே பயன்படுத்தாதப் போது எப்படி மாணவர்களை சொல்ல முடியும். பின்பு எப்படி அவன் சிலட், நெட் எழுத முடியும்.  ஆசிரியர்கள் தரம் உயர ,தினம் தன்னை தானே  புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.நிறைய அறிவு சார்ந்த விசயங்களை படிக்க வேண்டும்.

       இன்று புத்தக பூங்கொத்து மூலமாக மாணவர்களுக்கு புத்தகங்கள் அரசு தந்தாலும் , அது முறையாக பயன்பட வேண்டும்.ஆசிரியர்கள் முதலில் புத்தகங்களை மாணவர்களுக்கு தாரும் முன் , அவர்கள் அதை படிக்க வேண்டும். மாணவன் சிந்தை தூண்டும் விதமாக ,ஆசிரியர்கள் பேச்சு , செயல் , தொடர் பணி இருக்க வேண்டும்.
  
         கல்வி தரம் உயர , அவசியம் ஆசிரியர்கள் தங்களை அப் டேட்  செய்து கொள்ள வேண்டும் . ஆசிரியர்கள் அப் டேட் ஆகாத வரை நாம் கல்வி தரத்தை உயர்த்த முடியாது.

3 comments:

Radhakrishnan said...

//கல்வி தரம் உயர , அவசியம் ஆசிரியர்கள் தங்களை அப் டேட் செய்து கொள்ள வேண்டும் . ஆசிரியர்கள் அப் டேட் ஆகாத வரை நாம் கல்வி தரத்தை உயர்த்த முடியாது.// :) உண்மை.

கல்விக்கோயில் said...

தங்களின் கருத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டிய அதே நேரத்தில் எனது வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனெனில் அனைத்து ஒருசில ஆசிரியர்களின் குறையை அனைத்து ஆசிரியர்கள் மீது திணிப்பது ஏற்புடையது அல்ல.
மேலும் குறைபாடென்பதும், புதியன கற்பதில் ஆர்வமின்மை என்பதும் கல்வித்துறைக்கு மட்டுமேயானதாகாது மற்ற துறைகளிலும் இது போன்ற விதி விலக்குகள் இருக்கவேச் செய்கிறார்கள்.

ரோகிணிசிவா said...

//கல்வி தரம் உயர , அவசியம் ஆசிரியர்கள் தங்களை அப் டேட் செய்து கொள்ள வேண்டும் . ஆசிரியர்கள் அப் டேட் ஆகாத வரை நாம் கல்வி தரத்தை உயர்த்த முடியாது. //
-WELLSAID ,
CONTINUING EDUCATION,UPGRADATION IS MUST

//புதியன கற்பதில் ஆர்வமின்மை என்பதும் கல்வித்துறைக்கு மட்டுமேயானதாகாது மற்ற துறைகளிலும் இது போன்ற விதி விலக்குகள் இருக்கவேச் செய்கிறார்கள்.//
-SIR ,IT AFFECTS ONLY THAT PARTICULAR INDIVUAL IN OTHER FIELDS, BUT WHEN IT HAPPENS IN EDUCATION FIELD THE UPCOMING GENERATION SUFFERS,STOP THE BLAMMING GAME AND DO THE RIGHT JOB,AFTER ALL U R PAID TO DO TE JOB

Post a Comment