Friday, April 2, 2010

பிறக்கும் போதே ...

   ஆக்சிஜன் வாழ்வில் முக்கியமானது. இன்று உலக வெப்பமாதலால் , கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகமாகி நமக்கு பல உபாதைகள் தருவதை பல கட்டுரைகளில் படித்திருப்போம்.  ஆனால் பிறப்பின் போது ஆக்சிஜன் குறைவால் என்ன நிகழும் என்பதை நாம் பார்ப்போம். பிறப்பின் போதே குழந்தைகளை காப்போம்.

     மன வளர்ச்சி  குன்றிய குழந்தைகள் பிறப்பு சதவீதம் , குறை பிரசவத்தால் அதிகரிக்கிறது.   அது மட்டும் அல்ல ,பிரசவத்தின் போது ஏற்படும்  காயங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் உலகில் நூற்றுக்கு பதினைந்து நபர்கள் ஆவார்கள். குறைபிரசவத்தை, நாம் நவீன கருவிகள் கொண்டு பிரச்சனைகளை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி தவிர்க்கலாம்  .

     பிரசவத்தின் போது கருப்பை சுருங்கி விரிவதில் பிரச்சனை இருந்தால் , குழந்தை பிறப்பில் பிரச்சனை உருவாகும், அதனால் குழந்தை வெளிவரும் வாயை அகலப்படுத்தப் பயன்படும் ஆயுதம் , குழந்தையின் தலையில் காயம் ஏற்படச் செய்வதால், மன வளர்ச்சி குன்றிய குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. அதே போல் , குழந்தையின் கழுத்தை, நச்சுக் கொடி சுற்றி இறுக்கும் போது ,குழந்தை சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, ஆக்சிஜன் அளவு குறைவதால், குழந்தையின் மூளை பாதிக்கப்படுகிறது.

      நம் முன்னோர்கள் , குழந்தை பிறந்தவுடன் அதன் கால்களை தலைகிழாக  பிடித்து தூக்கி சிறுது நேரம் வைத்திருப்பார்,  அதனால் குழந்தையின் மூளைக்கு ஆக்சிஜன் சென்று குழந்தை அழத் தொடங்கும் .
  
      கருவில் குழந்தை வளரும்போது , தாய் கவலை படக் கூடாது .மேலும் கோபப்படக் கூடாது .அவ்வாறு கோபப்படும் போது அட்ரினலின் ஹார்மோன் அதிகம் சுரந்து , குழந்தையின் இயக்கம் தடை பட்டு , மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தையின்  நுண்ணறிவு  குறைவு ஏற்பட வாய்ப்பு  உண்டு.

       குழந்தைகளை இன்று அடிக்க கூடாது என்று கூறுவது  ஏனெனில்,நாம் அடிக்கும் போது தெரியாமல் தலையிலோ, முதுகு தண்டுவடப் பகுதியிலோ படுவதால், மூளையின் செரிப்ரேம் என்ற பகுதி பாதிக்கப்பட்டு குழந்தையின்  மன நலம் பாதிக்கப்படலாம்.

      ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுன்ட் சோனோ கிராபி ,ஆம்னியோ செண்டாசிஸ் போன்ற சோதனைகள் மூலம் குழந்தைகள் மனவளர்ச்சி நிலையை கண்டறிந்து, கருசிதைவு செய்து மன வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதை தவிர்க்கலாம்.

     இக்குழந்தைகளை சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். மதுரையில் ஹெலன் ஹெல்லர் சர்வீஸ் சொசைட்டி பார் தி பிளைண்டு  ,விழியகம் ,விஸ்வநாத புறம், மதுரை 625014 .மற்றும் எம்.எஸ்.செல்ல முத்து ட்ரஸ்ட் ஆண்டு ரிசர்ஸ்  பவுண்டேசன் ,611 ,கே,கே. நகர் ,மதுரை-20.ஆகியவை சிறப்பு பள்ளிகளாக இருக்கின்றனர். விரகனூர் அருகில் ஆர் . சி . பள்ளி ஒன்றும் இயங்குகிறது .

  என் மனைவி இன்று மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு இடுக்கி வைத்து எடுக்கும் போது, தவறி கண்ணில் பட்டு அக் குழைந்தைக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாக சொன்னாள் . அதனால் ஏற்பட்ட பதிப்பு இந்த பதிவு ஆகும்.

   வயிற்றில் குழந்தை சுமக்கும் தாய் மார்களே ,நல்ல சத்தான உணவு அருந்துங்கள். அதிர்ச்சியான சம்பவங்கள் , கோபங்களை தவிர்பீர்.மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு மற்றும் மருந்து சாப்பிடுங்கள் . உடல் உபாதைகள் எதுவும் இருப்பின் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ளுங்கள். குழந்தை பிறந்த முதல் முன்றாவது மதத்தில் இருந்து முத்தடுப்பு ஊசி போடுங்கள்.

 குழந்தையை எப்போதும் நல்ல மனநிலையில் , நல்ல குடும்ப சூழலில் ஆரோக்கியமாக வளர்க்கவும். இல்லையெனில் குழந்தை வழிமாறி பாதை மாறுபட்டு , மன நலம் குன்றிய குழந்தையை விட மோசமான நிலைமையில் காண நேரிடும். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் நல்லக் குழந்தைகளே , நல்லவராவதும், கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே.

 ஆகவே பிறக்கும் போதே நல்ல குழந்தையாக பிறக்க நாம் பாடுபடுவோம்.     

4 comments:

koodai said...

நல்ல பதிவு.தாய்மார்கள் அவசியம் படிக்க வேண்டும்.

ஹுஸைனம்மா said...

அய்யோ, கண்ணில் பட்டுவிட்டதா? பாவம்.

Nathanjagk said...

நல்லப் பகிர்வு. வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

நல்ல பகிர்வு.வளர்ப்புக்கு அம்மாக்களை மட்டுமே சொல்லாதீங்கப்பா.. அப்பாக்களும் இந்தக்காலத்தில் பங்கு வகிக்கிறார்கள்.நல்லா வளர்க்கணும்ன்னு அம்மாக்கள் நினைச்சா மட்டும், போதாது :-))

Post a Comment