இளம் வயதில் மாணவர்கள் , தியானம், யோகா கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கோபம் , எரிச்சல் ஆகியவற்றை போக்க வேண்டும் . பிறரை பகைமை பாராட்டக் கூடாது . இளம் வயதில், மாணவர்கள் சிரித்த முகத்துடன் பள்ளிக்கு சென்று , ஆன்மிக சிந்தனையுடன் , அறிவியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்பன மாதவனின் கனவுகளில் ஒன்று.
"என்ன மது குட்டி ,பலத்த யோசனை, இன்று பள்ளி விடுமுறை....எங்கு செல்லலாம் என்று யோசனையா....."
"இல்ல மாமா ...நான் எப்ப பார்த்தாலும் கோபப் படுகிறேன்...அது மட்டும் அல்ல ..."
"கோபம் ஒரு விஷயம் இல்லை...எதுக்கு கோபம் வருது சொல்லு...."
"அது வந்து மாமா ,நியாயமே இல்லாத விசயத்துக்கு எல்லாம் நான் டீச்சரிடம் வை வாங்குகிறேன்..அந்த ராம சாமி, மாரி முத்து செய்கிற அட்டகாசம் தாங்க முடியலை..."
"அந்த பசங்களிடம் சேராதீங்க ....பிரச்சனைன்னு தெரிந்தா நாம் தான் ஒதுங்கிடனும் , அதுமட்டுமில்லை பிரச்சனைக்கு உரியவர்களை அணுகி நம் பாதிப்பை விளக்க வேண்டும் ...அதுனால நம்ம முட்டாள்ன்னு கூட நினைக்கலாம் , அதுக்காக பயந்து , அடுத்தவர் கேலி செய்வாங்கன்னு நினைத்து பிரச்சனையை .எதிர்கொள்ளாமல் தள்ளி போடக்க கூடாது "
"மாமா , பிரச்னையை காண்டு ஒதுன்குன்னு சொல்றீங்க , அப்புறம் எதிர்கொள்ன்னு குழப்புறீங்க "
"அது நாம பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது . அதாவது பிரச்சனைகளை நாம் உருவாக்காமல் ஒதுக்கிடனும், நம்மால் பிரச்சனைகள் வாரக்க் கூடாது புரிந்தாதா..அதற்காக நமக்கு வந்த பிரச்சனைகளை , அப்படியே விட்டு நாம் பகையை வளர்க்கக் கூடாது .என்ன புரிஞ்சுதா....."
"மாமா ...அதுவல்ல பிரச்சனை...அப்பா கோபத்தை அடக்க ஒன்ணு , இரண்டு , மூன்று எண்ணச் சொன்னார்கள் ..அப்படி கோபம் வரும் போது எண்ணி கொண்டே அந்த பயனை முறைத்தேன்...."
"பார்த்தியா ...மனசு இப்ப வேதனை படுத்து....கஷ்டப் படுது....அதுக்கு தான் கோபம் மட்டும் பாடாம இருந்தா பத்தாது, அவன் செய்த தப்ப மறந்து ...மனம் விட்டு பேசு....உன் எல்லாப் பிரச்சனையும் போயிடும்..."எனக் கூறிக் கொண்டே...."அண்ணே....மதுவும் நானும் ராஜாஜி பார்க்குக்கு போய்ட்டு வருகிறோம் "என தன் காரை நோக்கி நகர்ந்தான்.
"மாமா ...பிரச்சினை என்னான்னு முழுசா கேட்க மாட்டிங்களா..." "மது ....வா...போய்கிட்டே...பேசுவோம்...."
இருவரும் காரில் ராஜாஜி பார்க் நோக்கி காரில் பயணம் செய்ய...வெயில் என்றும் இல்லாதது போல் இன்று மிகவும் சூடாக இல்லை. தன்னை மேகத்துக்குள் மறைத்துக் கொண்டது. ஒருவேளை மது தன்னையும் கோபமாக பர்ர்த்து விடுவாளோ, அதனால் அதன் கதிர் கரங்கள் உடைந்து விடுமோ என்று பயந்து ஓடி ஒளிந்திருக்குமோ!
கார் அண்ணா நகர் தாண்டி , புதிதாக போட்ட சாலையில் அரவிந்த் கண் மருத்துவ மனை வழியாக , மெதுவாக சென்றாது. அண்ணா பேருந்து ...டிபி நோயாளி மாதிரி மெலிந்து,ஒடுங்கி ,புதிய அரசு மருத்துவ மனை விரிவாக்கத்துக்கு கொடுக்கப் பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் இருந்தது. விறுவிறுப்பாக காணப்படும் கலெக்டர் ஆபீஸ் இன்று வெறிச்சோடி கிடந்தது. ராஜாஜி பார் எதிர் புறம் லயன்ஸ் கிளப், உள்ளே வண்டி நிறுத்தி வைக்கப்பட்டதிலிருந்து மாதவன் ஒரு லைன் என்பது புரிகிறது.
காரை விட்டு பார்க்கிற்கு செல்ல நினைக்கையில் , மதுவின் காலடியில் ஒரு சார்ட் பேப்பர் , சுருட்டிய நிலையில் தட்டுப்பட ,அதை கையில் எடுத்தாள். ஓவியத்துடன் காரை விட்டு இறங்கினாள். காரின்கதவை அடைத்து விட்டு திரும்பிய மாதவன், மதுவின் கைகளின் ஓவியத்தை பார்த்தான்.ஓவியத்தை பார்த்த மது வாயடைத்து போனாள்.
" என்ன ஆச்சரியமா பார்க்கிற...போன வாரம் ...எங்க கிளப்பில் நடந்த ஓவிய போட்டியில் உங்க பள்ளி மாணவன் வரைந்த ஓவியம். என்னால நம்ப முடியல அதுனால ...உன்னிடம் இந்த ஓவியத்தை பற்றி காட்டி ..அசர வைக்கணும் ன்னு நினைத்தேன் அதுக்குள்ளே நீயே இதை எடுத்து பார்த்திட்ட...."
"!!!!!"
"ஏய் ,என்ன மது ஒண்ணும் பேசாம...நிற்கிற....வா...டிக்கெட் எடுத்து பார்க் உள்ளே போயிட்டே...பேசுவோம்..."
எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் ஓவியத்தை வைத்த கண் முடாமல் பார்த்துக் கொண்டே நகர்ந்தால்.
"எனக்கு ஒண்ணும் புரியல...அதுல நீ ஒரு பையனை பார்க்கிற ...அவன் சாப்பிடுகிற மாதிரி தெரியுது ...ஆனா அவன் ஸ்பூன் வளைந்து கொண்டு இருப்பது போல வரைந்து உள்ளான் , அருகில் உள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் பார்கின்றனர்......எப்படி உன் உருவம் அவனுக்கு தெரியும் நீ பள்ளியில் சேர்ந்து இரண்டு மாதம் தான் ஆகிறது ..!"
"மாமா ...படத்துல்ல உள்ளது அப்படியே நடந்தது...அதை பத்தி தான் சொல்ல வந்தேன்....நான் கோபத்தை குறைத்து அவனை முறைத்தேன்...அவனின் பேனா ஒடிந்தது....லஞ்சில் , அவன் சாப்பிடும் போது அவன் கை ஸ்பூன் பார்த்தேன், அது வளைய ஆரம்பித்தது...."
"அப்படியா...அவனை நாளை பார்க்கணும்...அது சரி நாம் நாளை மாலை நல்ல மன நல டாக்டரிடம் உன்னை செக் செய்கிறேன்....இப்ப போய் விளையாடு...."
மது குழந்தையாக , குழந்தை மனநிலையில் பிற குழந்தைபோல் ஆனந்தமாக விளையாடுகிறாள்.
நாளை என்ன நடக்கும்....?
1 comment:
waiting
Post a Comment