" வாம்மா ....உட்கார்...உன் பெயர் மது ...நீ திரு பள்ளியின் துரு ,துரு ...பொண்ணு ..."
"ஆமாம்... அங்கிள் ..." " எனக்கு கோபம் நிறைய வருமா .... " " சரி ..இங்க வா ....இந்த இருக்கையில் உட்கார்..."இருக்கையில் அமர்ந்தாள் . " கண்ணை அசைக்காத ...இந்த டார்ச் லைட்டை மட்டும் பாரு. விழியை இந்த பக்கம் திருப்பி பாரு.... சரி ...வா உட்கார்..."
" ஜெனரல் ஹெல்த் நல்ல தான் இருக்கு ...." " அது டாக்டர் ....கோபம் வந்த மட்டும் தான் ...அவ இதை பார்த்தாலும் அந்த பொருள் உடைந்து போகுது ..."
"உனக்கு கோபம் எப்ப எல்லாம் வரும் ...." " டாக்டர் ...அநியாயத்தை பார்க்கும் போது மட்டும் ,என்னை அறியாமல் கோபம் வருது ....முன்னால எல்லாம் சண்டை போடுவேன்..."
"சரி ..இப்பவும் சண்டை போடா வேண்டியது தானே...ஏன் போடா மட்டிங்கிற ..."
" இல்லை டாக்டர்...அப்பா தினம் என்னை திட்டுகிறார்...அதுனால ...நான் இப்ப எல்லாம் ..ஒன்ணு.., இரண்டு எண்ண ஆரம்பித்து விடுகிறேன்..."
"ரெம்ப நல்ல விஷயம் தானே...அப்புறம் ஏன் ..?"
"இல்லை டாக்டர் ...நான் கோபத்தை அடக்கினாலும் ... என் பார்வை எதாவது ஒரு பொருளின் மீது பட்டு பொருள் உடைந்து போகிறது... "
"உனக்கு அப்படி என்ன கோபம் ...அதுவும் நீ பொருளை பார்த்தால் உடையும் என்று சொல்லுவதை என்னை நாம்ப முடிய வில்லை...."
"டாக்டர்...நான் சொல்லுவது நிஜம் ....நம்புங்க ...அதுனால தான் ...எங்க மாதவன் மாமா என்னை அழைத்து வந்திருக்காங்க ...."
"டாக்டர் ...மது பொய் சொல்ல மாட்டா...நான் பள்ளியில் விசாரித்து ...அதற்கு பின் தான் இன்று ...உங்க கிட்ட அப்பாயின்மெண்டு ..வாங்கிட்டு வந்திருக்கேன்..."
"அது சரி தான் ...ஆனா ...இவ பொய் சொல்லுகிற மாதிரி எனக்கு தெரியுது ....இப்படி எல்லாரும் கோபப்பட்டு எதையாவது பார்த்தா ...உடையுமுன்னா ...உலகம் அழிஞ்சுடும்...புரியுதா...இவ பொய் சொல்லுறா...எங்க என்மேலே கோபப் பட சொலுங்க ..."
"என்ன டாக்டர்...நீங்களும் சின்ன பிள்ளைகிட்டா ...கோபப் படுகிற மாதிரி பேசுறிங்க ..."
" சார்...என்ன சார் நீங்களும் ஏதோ கோபம் அடிக்கடி வருதுன்னு சொன்னா ....பரவாயில்லை...அத விட்டுகிட்டு...கோபம் வரும்போது பார்க்குமா ...அப்புறம் ஏதாவது ...உடையுமா...எங்க என் கையில் உள்ள ...தெர்மா மீட்டரை பார்க்க சொலுங்க ...சரியான பொய் கோழி ....சின்ன பொண்ணு பேச்சை கேட்டு வந்துட்டீங்க ...."
"டாக்டர் ....நீங்க கோபம் வர மாதிரி பேசுறீங்க ....ப்ளீஸ் ..டாக்டர் ..என்னை ..புரிஞ்சுக்கங்க ...நீங்களும் எங்க ...மிஸ் மாதிரி ... நல்ல ஆராயமா ...என்னை கேவலமா ..பேசி கோப படுத்துறீங்க...."
" என்ன ....டீச்சர் பத்தி தாப்பா பேசுற.....அவுங்க சரியா தான் தண்டனை கொடுத்திருக்காங்க ....உன்மேல தான் தப்பு எல்லாம் இருக்கு ..."
(மது....மனதுக்குள் ...ஒன்ணு , இரண்டு , மூன்று எண்ணியவாறு ...டாக்டரின் தெர்மா மீட்டரை ...பார்த்தாள்...டாக்டரும் அவள் முறைப்பதை பார்த்து மேலும் அவர் அவரின் மாமா மாதவனிடம் கோபப்படுமாறு பேசினார்.)
சிறிது நேரம் சென்ற பின்....
"சாரி மாது ...நன் உன்னை செக் செய்யாதான் கோபமூட்டினேன் ...நீயும் கோபப் பட்டு ....என் தெர்மா மீட்டரை முறைத்தாய் ...ஆனால் ,பார் ...தெர்மா மீட்டரை உன் கோபம் ஒண்ணும் செய்ய வில்லை..."
"சார்....சில நேரங்கள பார்வை குவிப்பு மூலமா ...ஒருத்தர் மனசை கட்டு படுத்தி ....ஒரு பொருளை ...நாம் சில சமயங்களில் உடைக்கலாம்....அதுவே...எப்போதும் நடக்காது....அதுனால இது எதார்த்தமா..நடந்திருக்கலாம்..பயப்படாதீங்க ....சில மருந்துக்கள் தருகிறேன் ...அத சாப்பிட சொல்லுங்க....'
"தேங்க்ஸ் டாக்டர்..நான் பயந்துட்டேன்...உங்களை மறக்க மாட்டேன்..சரி வருகிறேன் "
அவர்களை அனுப்பி விட்டு தெர்மா மீட்டரை கையில் எடுத்தார்...உடைந்து வந்தது...!
ஆச்சரியம் தொடரும் .
No comments:
Post a Comment