Monday, January 11, 2010

சந்தேகம்!

என்
தேகம் சுடுகிறது
உன்
சந்தேகப் பார்வையால் !

தேகம் இணைந்ததால் 
பிறந்ததோ ...
சந்தேகம்!

உயிரோடு உறவாடி
என் உயிரானவளே !
உணர்வுகளோடு உரசி
உயிர் எடுப்பவளே..
எப்போது பிடித்தது
இந்த தோசம்
போனது சந்தோசம்
இருவருக்கும் !



உணர்வுகளை உசுப்பி
உரிமைகளை உதறி
உயிர்களை உறிஞ்சும்
ஊதாரி பேயே
போய்விடு ! மாண்டிடு !
உன்னை கொல்ல
ஒரு சுனாமி வராதா!

எத்தனை குடும்பங்கள்
எதுவுமில்லா பிரச்னைக்கு
எத்தனை இரவுகள்
பகலாய் பாழாய்
போனச் சண்டையில் !
பால் இருந்தும்
பாழம் இருந்தும்
பட்டினியில் ...
சத்தில்லா சச்சரவுகள்
சாவுக்கு வழிவகுத்தன !
வாழ்விழந்த பிஞ்சுகள்
எத்தனை எத்தனையோ!
சந்தேகம் வலுத்ததால்
தன் தேகத்தேயே
எரித்து மாண்டவர்கள்
எத்தனை எத்தனையோ!

இக் கொடுமை
இனி வேண்டாம் !
இனிக்கட்டும் வாழ்வு !
இந்த பொங்கல்
மனச் சங்கடத்தை
மாய்த்து
அனைத்துக் குடும்பத்திலும்
சந்தோசத்தை விதைத்து
சந்தேகத்தை புதைகட்டும் !

    ( சந்தேகத்தால் தன் மனைவியை இழந்த என் நண்பனுக்காக)

3 comments:

கலையரசன் said...

சூப்பர்.. பாஸ்! நல்லா புரியும்படி எழுதியத்துக்கு..

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

தேவன் மாயம் said...

இனிய பொங்கல் வாழ்த்த்க்கள்!!

Post a Comment