மனம் உரு மாறி
உணர்வை உயிராக்கி
உறவாக்கும் உணர்ச்சி
என்றுதான் நினைத்தேன்
உன் தங்கை என் கை
தொட்டப்போதுதான்
உணர்ந்தேன் .....
காதல்....
மனசு சம்பந்தப்பட்டதல்ல,
உடம்பும் சம்பந்தப்பட்டது .
உன் பார்வையின் உக்கிரம்
என் தோல் கருக்கியபோது
வெடுக்கென என் கை தட்டி
உன் தங்கையை கூட்டிச்
சென்றபோது உணர்ந்தேன்
காதல் ...
மனசு மட்டும் அல்ல
உடம்பும் சம்பந்தப்பட்டது.
No comments:
Post a Comment