" சார் மதுரை வாங்க ... பொங்கலுக்கு கூப்பிடல்ல .... வரும் ஜனவரி 30௦ வாங்க .!" "என்ன அண்ணே விசேசம் ..." என இழுக்காதிங்க . "எல்லாம் ' அண்ணே விசேசம் தான்' " .
" ஜனவரி ௦ 30௦ காந்தி இறந்தநாள் , தியாகிகள் தினம் .... கரெக்டா அண்ணே "
" விளக்கெண்ணை ..... யோவ் ... புரியல அதன் சொன்னேன்ல்ல .... எங்க அண்ணே விசேசம்..ன்னு "
" ஆ..அ புரிந்தது ...".
" யோவ் அ.. ஆ ... ன்னே சொல்லு " .
" அவரும் தியாகம் செய்துதானே வந்தாரு "
" 500 ரூபாய் நோட்ட ... கொடுத்து கொடுத்து ... "
" யோவ் மரியாத ... அப்புறம் மதுரை வர மாட்ட .."
" மதுரைக்காரரே .... அவசர படாதிக ... 500 ரூபாய் நோட்ட ... கொடுத்து கொடுத்து சில்லறை மாற்றினால் சி திரி வரிசைக்கு பேருந்துல ... புது நோட்ட .... கேட்கிறாங்க .... அத பத்தி சொல்லுறதுக்குள்ள ... அவசரப்படுறேங்களே ...இப்ப சொல்லுங்க ..."
" நீயும் தெக்கதிபயலுக ... மாதிரி வெவரமா தான் இருக்க ... "
" அப்ப திருவிழா தான்னு சொல்லு ... இலவச வேட்டி சேலை ... தையல் மிஷின் .. சைக்கிள் , முன்று சக்கர வண்டி , கலிபர் என ... மதுர கார பயலுக நீங்க பயன் அடைய போறிங்க ..."
" ஆமா.... ஆமாம் ... இந்த வருடம் அண்ணன் பிறந்த நாளில் இந்த சலுகைகளுடன் ... ஐ.நா . செய்ய முடியாத ஒன்றை செய்ய போறோம் ..."
" அப்படி என்ன புதுமை .... "
" அண்ணன் பிறந்தநாளில் புவி சூட்டை குறைக்கும் விதமாக மதுரையில் எழு லெட்சம் மரக்கன்றுகள் கழக கண்மணிகள் நடப்போறோம் ... உங்களுக்கு தேவைன்னா ... வந்து மரக்கன்று வாங்கிகங்க ..." "சரி அண்ணே பிறந்த நாளில் புது வசன விளம்பரம் எது ?...?"
"பிறந்தவனல்ல .... உதித்தவன் ."
"சரி ... அவசியம் வந்துவிடுகிறேன் "
" மதுரை பற்றி புது தகவலுடன் அடுத்த வாரம் வருகிறேன் ."
No comments:
Post a Comment