பசும் புல்
பால் மாடு
பச்சை குழந்தை
பசியுற்ற புலி
பாயும் சிறுத்தை
தாவும் குரங்கு
நண்பகல் நடுநிசி
நண்பன் பகைவன்
நல்லது கெட்டது
என பகுத்துப்
பார்க்கும் மானிடா ....
சமுகத்தில் மட்டும்
எந்த நலனுக்கும் இன்றி
சாதி மத வேறுபடுத்தி
பகுத்தறிவு மறந்ததேன்?
தாவும் குரங்காக
மனம் இருப்பதாலா?
இன்று புதிதாய்
சீரியலில் சீல்
பிடித்த மனமானதாலா
பகுத்தறிவு மறந்தாய்?
சிக்கித் தவிக்குது
சிறுசும் பெருசும்
சிரழியும் சமுகம்
நல்ல குடும்பம்
சரிவது புரியாம?
1 comment:
அருமையாக இருக்கிறது தோழரே...தொடருங்கள்...
Post a Comment