தாய் மொழியில் தான் பாடங்கள் நடத்த வேண்டும் . 2005 தேசிய கல்வி கொள்கை தாய் மொழி வழியாக சுற்றுபுறம் சார்ந்த அறிவு பெறுவது முலம் அறிவியல் அறிவை வளர்க்க முடியும் என வலியுறுத்துகிறது.
மாணவன் தாய் மொழியில் மூலமாக கல்வி கற்பதன் வாயிலாக தெளிவான சிந்தனை பெற்று , தன் அறிவை வளப்படுத்த முடியும். அதற்காக ஆங்கிலம் வேண்டாம் என்று அர்த்தமல்ல . ஆங்கிலம் ஒரு உலக தொடர்பு மொழியாக இருப்பதால் , அவசியம் தேவை. இத்தொடர்பிர்க்காக , தமிழை ஒரு மொழிப் பாடமாக மட்டுமே படிப்பது , அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆங்கில பள்ளிகளாக மாற்ற வழிவகுத்திடும்.
நாளடைவில் அரசு பள்ளிகளும் ஆங்கில மொழி வழிக் கல்வியை தொடங்கினால் தான் அரசு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு வேலை என்ற நிலை வந்துவிடும்.
தயவு செய்து அரசு ஒரு தெளிவான கொள்கை கொண்டு சமச்சீர் கல்வி முறையினை அமுல்படுத்த வேண்டும் என்ற வாதத்தை நினைவில் கொண்டு செயல் பட தமிழக மக்கள் என்றும் ஆதரவு தருவார்கள் .
சமச்சீர் கல்வி முறை இம்மாதிரியான இடர்பாடுகளை தவிர்த்து , முழுமையாக நிறைவேற்றி , ஏழை எளியவர்களின் கனவை நினைவாக்க வேண்டும்.
No comments:
Post a Comment