மங்கள் பாண்டே 1857 தூக்கிலிடப்பட்டு, 1857 நம் சிப்பாய்களின் மதஉணர்வை புண்படுத்தியதால், முதல் சுதந்திர போராட்டமாக , சிப்பாய் கலகம் உருவெடுத்ததில் இருந்து , காந்தியின் நுழைவு கூறி , சத்தியாகிரகம் பலன் எடுத்துரைத்து, 1947 லில் நாம் சுதந்திரம் பெற்றது வரை தொகுத்துக் கூறுங்கள் . நம் சுதந்திரத்தின் அருமை நம் குழந்தைகள் உணர்ந்து நம் நாட்டிற்கு நன்மை செய்வர், நல்ல பொறுப்புள்ள குடிமக்களாக உருவாவார்கள்.
என் குழந்தையை சமீபத்தில் மதுரை காந்தி மீசியத்திற்க்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவள் தன் தாயிடம் பல விசயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டாள் அவள் தற்போது ukg படித்து வருகிறாள் . . . ஏற்கனவே பள்ளியில் அழைத்து சென்றதால் , அப்பா இங்க இந்த ரூம்ல காந்தி தாத்தா சுட்டு சாகிறப்ப இரத்தம் பட்ட டிரஸ் இருக்கு என்று மழலையில் கூறினால். அங்கு நிறைய அயல் நாட்டினர் வந்திருந்தார்கள் , அவர்கள் காந்தி என்று கூறும்போதேல்லாம் என் குழந்தை மிகவும் மகிழ்ச்சி அடைவது எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
அதை விட வீட்டிற்க்கு வந்து இரவு (அவள் எங்களுக்கு தினம் கதை கூறி உறங்கிவிடுவாள் )கதை கூறியது இன்றும் என் நினைவில் நிற்கிறது. இதோ ...
"நானு , அனுசியா , சௌந்தர்யா, கார்த்தி ஸ்கூல் விட்டு விளையட்டிகிட்டு இருந்தோமா ", "..... அப்போ அனுஷியா வாங்க நாம கடைக்கு போயி வாங்கி சாப்பிடுவோம்னு .... சொன்னா. கார்த்தி காசு இருக்கான்னு கேட்டான். இருக்கு இருக்கு வா போவோம் ன்னு குத்திகிட்டு போனா... "
"நாங்க எல்லாரும் கடைக்கு போனோம் ... லட்டு சௌந்தர்யா கேட்டா..அனுசியா எல்லாருக்கும் லட்டு எடுத்துக் கொடுத்தா.... எல்லாரும் நிறையா லட்டு சாப்பிட்டோம் .... கடைகாரர் திரும்புறதுக்குள்ள...வா எல்லாரும் ஓடிடுவோம்ம் ன்னு சொல்லி ஓடினா .... நாங்க என்ன செஞ்சோம்னா ...."
"சொல்லு" இது என் மனைவியின் குரல் ..
"அப்புறம் கடிகார அண்ணே பிடிச்சு திருடிட்டு போறியா நீ ....எங்கள பிடிச்சு ...."
"பிடிச்சு உதச்சாரு ..." மீண்டும் என் மனைவி .
"இல்லை ,இல்லை சாமி கண்ணு குத்திடும் ...அப்படிதானே பயமுறுத்தினார் ..."
இது நான் .
" இல்லப்பா.. இது காந்தி படத்து முன்னால வச்சு செஞ்ச லட்டு , பொய் சொல்ல கூடாது... காந்தி கொட்ச்சுகிருவார்னு...சொன்னார் "
"அப்படியா" ...இருவரும் சிரிப்பு கலந்த ஆச்சரியத்துடன் .
"அனுஷியா வீட்டில போயி காசு எடுத்து கொடுத்தா...தெரியும்மா ...அது னால நாம பொய் பேசக் கூடாது , திருடக்கூடாது புரியுதா ... காந்திக்கு இதெல்லாம் பிடிக்காது ..."
அன்று காந்தி வரலாறு என் குழந்தையின் சிந்தனையில் பதித்த பதிவுகள் ஏற்படுத்திய மாற்றம் எல்லாருக்கும் ஏற்பட நாம் நம் தேசத்தலைவர்கள் வரலாற்றை எடுத்துக் கூறுவோம்.
காந்தி இறப்பு ஒரு தினமாக மாறிவிடாமல் , தினம் தினம் நம் குழந்தைகள் வாழ்வில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும் தினமாக உருவாக்குவோம்.
No comments:
Post a Comment