மதுரை பிளாக்கர் சந்திப்பில் என்னை கவர்ந்த பதில்.
இன்று குழந்தைகள் மிகவும் சிவப்பாக இருந்தால் மட்டுமே பள்ளிகளில் பாட்டு , நடனம், பேச்சு போன்ற நிகழ்வுகளுக்கு அணுமதிக்கப்படுகிறார்கள். பொதுவான உண்மை, ஆசிரியர்கள் உணரவேண்டிய கசப்பான மருந்து, இனி இதை படித்து திருந்துங்கள் .
நம்மை பல ஆண்டுகளாக ஆண்டவர்கள் நிறம் வெளுப்பாக , அதாவது சிவப்பாக இருந்துவந்துள்ளது. ஆரியர்கள் முதல் பிரஞ்சு , போர்த்துகீசியர்கள் ,ஆங்கிலேயர்கள் வரை நம்மை ஆண்டவர்கள் சிவப்ப்பு , ஆகவே அது ஆளும் வர்க்கத்தை சார்ந்த நிறமாக இருப்பதால், இந்தியர்கள் அனைவரும் சிவப்பாக குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று விரும்ப , அதே தொடர்ந்து சிவப்புதான் சிறந்த நிறம் என்று ஆகி விட்டது. அதுவும் நம் குழந்தைகளுக்கு மனதில் பட்டு தாழ்வு மனபான்மையை ஏற்படுத்திவிட்டது.
அனால் இன்று அமெரிக்காவின் சூப்பர் பவர் ஆளுநர் ஓபாம என்ற கறுப்பர் வந்தவுடன் என்று பார்பி பொம்மை நிறம் கருப்பாக மாறிவிட்டது , ஓபாமா வின் உடை உலக பேஷன் ஆக மாறி வருகிறது. அன்று அனைவராலும் விரும்பப்பட்ட சிவப்பு நிறம் இன்று கருப்பு நிறமாக மாறியுள்ளது .
ஆகவே மாணவ செல்வங்களே டாக்டர் கூறுவது போல நிறம் என்று பார்த்தல் கருப்புதான் நிறமாக கொள்ளவேண்டும் .சிவப்பு என்பது நிற குறைபாடு . ஸ்டார் அந்தஸ்து நிறத்தில் இருந்து வருவது கிடையாது அது நம் செயலில் இருந்து வருவது . பரீட்சை நெருங்குவதால் படிப்பில் கவனம் செலுத்தி , நல்ல மதிப்பெண் பெற்று , தாழ்வு மனப்பான்மை போக்கி , பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் நல்ல பெயர் எடுத்து தரவும்.