Wednesday, February 9, 2011

அடையாளம்

மனிதனின் முகத்தில்
முகமுடிகள்
நிரந்தரமாகிப் போனது ..
வேடதாரிகளாய்
யுகங்களில்
ஒப்பனைகளை கச்சிதமாய்
மாற்றிக் கொண்டே ...
சமூக மேடுப் பள்ளங்களில்
தன்னை மறைத்தும்  வெளிப்படுத்தியும் ....
புதையுண்ட படிமங்களின் அடையாளமாயும்
வீதிகளில் தன்னை எரித்தும் புதைத்தும்
எகிப்திய மம்மிக்களாய்
சமூக அடையாளத்துக்காக         
முகமுடிகளைத் தேடித்தேடி
மாட்டிக் கொள்ளும் இவ்வுலகில்
முகம் பார்க்கும் கண்ணாடியிலும்
என் அடையாளத்தை  இழந்து நிற்கின்றேன்
மூடிய  அறைக்குள்ளும்
என் இதயம் பேச மறுக்கிறது
அந்த அறையும்
மற்றொருவனின் முகமுடியாக இருக்கலாம் ....!

12 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத ஆளா வந்துட்டோம்ல! எப்பூடி?

தமிழ்வாசி பிரகாஷ் said...

மனிதன் முகமூடிக்கு தான் நிறைய செலவு செய்கிறான்.
*********
இதையும் படிங்க:உடல் எடையை குறைக்க வேண்டுமா? கீழே படிங்க.

Chitra said...

முகமுடிகளைத் தேடித்தேடி
மாட்டிக் கொள்ளும் இவ்வுலகில்
முகம் பார்க்கும் கண்ணாடியிலும்
என் அடையாளத்தை இழந்து நிற்கின்றேன்


.....அருமையாக எழுதி இருக்கீங்க...

வருண் said...

***மூடிய அறைக்குள்ளும்
என் இதயம் பேச மறுக்கிறது
அந்த அறையும்
மற்றொருவனின் முகமுடியாக இருக்கலாம் ....!***

யாருங்க அந்த மற்றொருவர்? நம்ம கடவுளோ? :)

ஹேமா said...

முகமூடியற்ற மனிதன் ஞானியாகவோ கடவுளாகவோ ஆகிவிடுகிறான் !

Philosophy Prabhakaran said...

// முகமூடியற்ற மனிதன் ஞானியாகவோ கடவுளாகவோ ஆகிவிடுகிறான் ! //

உண்மை... வழிமொழிகிறேன்...

ஆயிஷா said...

அருமையாக எழுதி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

Unknown said...

நல்லாருக்கு சார்

MANO நாஞ்சில் மனோ said...

//என் அடையாளத்தை இழந்து நிற்கின்றேன்
மூடிய அறைக்குள்ளும்
என் இதயம் பேச மறுக்கிறது///

அருமை அருமை சரவணன்...

Unknown said...

அருமை பாஸ்!

Unknown said...

உலகமே ஒப்பனையால் ஆனது .வானம் ஒவ்வொரு நாளும் ஒப்பனை இடும் .பூமி வெள்ளத்தால் முகம் கழுவும் .இங்கே சில நாதாரிகள் முகமூடியால் எம்மதுகிரார்கள்

Anonymous said...

அருமையான அர்த்தமுள்ள கவிதை

Post a Comment