Wednesday, January 5, 2011

ஆர். ஐ.இ.யில் முப்பது நாட்கள்

  வணக்கம் . மதுரை வந்துவிட்டேன். இருப்பினும் ஆர். ஐ. இ. (Regional Institute of English for South India)யில் வாழ்ந்த அந்த முப்பது நாட்கள் மிகவும் இனிமையானது. எல்லா மாநில ஆசிரியர்களும் வேறுபாடின்றி மிகவும் அன்பாக சககோதரத்துவத்துடன் பழகிய நாட்கள் மறக்க முடியாது. என்னுடன் வந்த குமார் மிகவும் அருமையாக பழகினான். மொத்தம் எழுபத்து இரண்டு ஆசிரியர்கள். அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தே , பழகினோம். இது ஆங்கில பழக்கமோ என்னவோ , அங்கு இருக்கும் போது தானாகவே வந்தது. ஐம்பத்து ஐந்து வயது ரவிச்சந்திரனையும் நான் அப்படித்தான் அழைத்தேன். அவரும் மகிழ்ச்சியுடன் சரவணா என்பார்.

    என் எதிரே இருந்த ஜோசப் (ஐம்பதை தாண்டும்)ஒரு காது கேளாதவர்களுக்கான பள்ளியை நடத்தினாலும் , எந்த வித கொளரவமும் பார்க்காமல், வயது வித்தியாசம் பாராமல் எளிமையாக எங்களுடன் தொடர்பில் இருந்தார்.

    இளமை ஊஞ்சல் ஆடியது . அனைவரும் வயது வித்தியாசம் இன்றி காலை எழுந்து குளிக்க , படிக்க, மாலை நடக்க , பின்பு ஆங்கிலம் பற்றிய உரையாடல் என மணிக்கணக்கில் தன்னை மறந்த நிலையில் படித்தோம். தேர்வும் எழுதினோம். மாணவனைப்போல பரிட்சை ரிசல்டுக்காக காத்திருக்கிறோம்.


    திண்டுக்கல் ரோசா தவமணி , வெங்கடேசன், தருமபுரி நக்கிரன், சென்னை ஃபெளிக்‌ஸ், தூத்துக்குடி நிர்மல், ஆறுமுகம், சவரிகணேஷ், பிலால், திருநெல்வேலி பிரதாப் சிங், மகேந்திரன், அருண், ஜிஜி, ஜோ, செல்வின்,தஞ்சாவூர் இன்பம், சேலத்து விவேகானந்து, தேவன் அவர்களுடன் தோழி சித்ரா, லெட்சுமி, தனம்,சகிலா,  செல்வராணி, செலின்ராணி, சிஸ்டர் தவமணி, திலகா,காமாட்சி, கொளசல்யா,சகிலா, சித்தப்பா ஜெயசீலன், சகலை அருண் என இவர்களுடன் ரகளையுடன் பொழுது மகிழ்ச்சியுடன் களிந்தது.இளைய கவி மாரி செல்வம் கவிபாட வந்துவிடுவாரோ என அத்தனை அக்காமார்களும் மாறிச் செல்வது தினமும் ரகளை, ரசிக்க வைத்தது.

    கர்நாடக நண்பர்கள் சந்திர சேகர்,அன்னப்ப ராவ்( பன்னிரெண்டு மொழிகள் அறிந்தவர்) , பக்ரேஸ், பக்கிரி , கோபாலன்,  பரசுராம், என அத்தனைப் போரும மிகவும் மனம் கவர்ந்தவர்கள்.


     கல்லூரி நாட்கள் என் வயோதிகத்திலும் வரும் என்பதை நான் நினைத்துப்பார்க்க வில்லை. நல்ல அனுபவம். வயது முதிர்ச்சி எங்களை பக்குவப்படுத்தியது. எங்கள் இருப்பிடம் மெயின் ரோட்டில் இருந்து (டீ குடிக்க, சோப்பு வாங்க) வெகு தொலைவில் இருந்ததால் , தினமும் மூன்று கிலோ மீட்டர் வாக்கிங் சாத்தியமானது. மாலையில் பாண்டிச்சேரி ஆசிரியர்களுடன் கிரிக்கெட் விளையாட்டு எங்களை மேலும் இளமையாக்கியது.


     அனைத்து பேராசிரியர்களும் ஆங்கிலத்தை முழுமையாக பேச, உச்சரிக்க, எழுத , படிக்க கற்றுத்தந்ததுடன் , நாங்கள் கற்ற அதே ஆங்கிலத்தை வகுப்பறையில் மாணவர்களுக்கு எப்படி கற்றுத்தருவது என்பதை கற்றுத்தந்த விதம் மிகவும் எளிமை, அருமை. நம் குழந்தைகள் இவ்வளவு நாட்கள் ஆங்கிலம் என தங்கிலீசைப் படித்து இருப்பதை குறித்து வருத்தமடையச் செய்தது.  பேராசிரியர்கள் வெங்கடேஸ்வரன், ஹித்தேஸ், சிரிதர்,பத்மாவதி,பூஜா கிரி,எளிமையாக தமக்குரிய கவர்ச்சியில் ஆங்கிலத்தைக் கற்றுத்தந்தனர்.

     ஆங்கில வகுப்புகளில் ஒரு ஆசிரியர் அந்த நாற்பது நிமிடத்தை முழுமையாக ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தி நடத்துவாரானால், அவனுக்கு தானாக ஆங்கிலம் வந்துவிடும். ஆம், ஆரம்பத்தில் எங்களிடம் ஆங்கிலம் பேச பயந்த ஆசிரியர்கள் , பத்தாவது நாளில் ஆங்கிலத்தில் பொளந்து கட்டினர்.   இதே சுழல் வகுப்பறையில் ஏற்படுத்தினால், மாணவன் பயம் மறந்து , தானாக ஆங்கிலம் பேசுவான். தயவுசெய்து ஆங்கில வகுப்பை ஆங்கிலம் மட்டும் உபயோகித்து நடத்துவோமானால் , நம் மாணவர்கள் கார்பரேட் உலகில் வெல்லுவார்கள்.

        கர்நாடக ஆசிரியர்கள் அவர்களின் தாய் மொழியை அதிகமாக பயன்படுத்த வில்லை. அவர்கள் தங்களின் ஆங்கில அறிவை வளர்க்க , எந்நேரமும் ஆங்கிலத்திலே பேசினர். நம் தமிழ் மொழியில் இரவு ஆறு மணிக்கு மேல் சரளமாக அறையில் பேச கொண்டிருந்தாலும் , அவர்கள் அங்கும் ஆங்கிலமே பயன்படுத்தினர்.

      பெங்களுர் மார்க்கெட் காய்கறி விற்பவன், பேப்பர் காரன், பால் காரன், சமயல் காரன் என அனைவரும் சரியான உச்சரிப்பில், பிழையின்றி ஆங்கிலத்தைப் பொளந்து கட்டினர். இது ஒருவனின் சூழல் தான் அவனின் மொழியினை செம்மைப்படுத்தும் என்பதை உணர்த்தியது. ஆகவே, தயவு செய்து நம் பள்ளிகளில் இனி ஆங்கில வகுப்புகளில் ஆங்கிலம் மட்டுமே எளிய நடையில் பயன்படுத்துவோம்.

11 comments:

Ganesan said...

அருமை சரவணன்.

நம்ம மதுர பக்கம் தமிழ் பேசியே , ஆங்கிலம் பேச விடாம பண்ணிடாய்ங்க.
உண்மை, சூழல் சரியான விதத்தில் கற்பிக்கும்.

Chitra said...

Interesting!!!


HAPPY NEW YEAR!!

G.M Balasubramaniam said...

ஆர் ஐ இ -யின் இனிய நினைவுகளுடன் உங்கள் ஆசிரியப் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

மாணவ மனநிலையில் பாடம் கேட்டது இனிமையாக இருந்திருக்குமே, ஆசிரியரை கலாய்த்தல், இடையிடையே அரட்டைக்கச்சேரி இதெல்லாம் அனுபவித்தீர்களா?

Unknown said...

இன்னமும் ஆங்கிலத்தை சரியான மனநிலையில் எடுத்துக்கொள்ளாமலே இருக்கிறோம். நிச்சயம் நிறைய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும், அதுவும் முழுமையாக.

இராகவன் நைஜிரியா said...

செய்வன திருந்தச் செய்... எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

நீங்கள் கூறியது போல், பாடங்கள் நடத்த ஆரம்பித்தால், மாணவர்களுக்கும் அதில் ஒரு நாட்டம் வரும். நாட்டம் வரும் இடத்தில் இயல்பாக செய்ய முடியும். இயல்பாக செய்யும் போது, சுலபமாக வேலை முடியும்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Nice !

குறையொன்றுமில்லை. said...

நிறைய மொழிகள் தெரிந்து கற்றுக்கொள்வது நல்லதுதானே.

சிவகுமாரன் said...

சரி , நண்பரே. இன்று பல பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளில் மட்டுமல்ல. எல்லா வகுப்புகளிலும் ஆங்கிலம் தான் பேச வேண்டும். தமிழ் பேசினால் அடி விழுகிறது. ஆங்கிலம் பேச வராததால் நாள் முழுக்க பேசாமல் இருக்கும் குழந்தைகள் உண்டு. இந்த கொடுமைக்கு என்ன பதில்.?

Unknown said...

நல்ல விசயம்தான் சொல்லியிருக்கீங்க சரவணன்..

செயல்படுத்துங்க.. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி..

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - முப்பது நாட்கள் - பெங்களூரில் - நல்லதொரு வாய்ப்பு - நன்கு பயன்படுத்தியமை நன்று - நட்பு வட்டமும் வளர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment