தேசிய வாக்காளர் தினம் எம் பள்ளியில் ஜனவரி 25 கொண்டாடப்பட்டது. அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் . வாக்காளர் பட்டியலில் நம் பெயரை கவனமாக சேர்க்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
காலை ஒன்பது மணிக்கே புகைப்பட அடையாள அட்டை வாங்க மக்கள் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர் . வந்த அனைவரையும் அந்த வார்டு சூப்புரைசர் உறுதிமொழி எடுத்த பின் தான் கொடுப்போம். காலை பத்து முப்பது மணிக்கு வாருங்கள் என அனுப்பிவைத்தார். சரியாக பதினொரு மணிக்கு விழா ஆரம்பமானது. விழாவிற்கு தலைமை தாங்கினேன். பின் நான் உறுதிமொழி வாசிக்க , அனைவரும் கூறினர். பின் என்னை பேச அழைத்தனர். இன்று முதல் வாக்காளர் ஆவதை நாம் பெருமையாக கொள்ள வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும். நாம் பணம், மொழி, சாதி , இனம் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்காமல் சிறந்த ஒரு வேட்பாளருக்கு ஓட்டளிக்கவேண்டும். நாம் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாவிட்டாலும் அதையும் நாம் வாக்குச்சாவடி சென்று பதிவு செய்யலாம் என பேசி முடித்தேன். பின்பு புதிய வாக்காளருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டது.1989 ல் வாக்காளர் வயது வரம்பை 21ல் இருந்து 18 ஆக குறைத்து சட்டம் இயற்றப்பட்டது . ஆனால் தற்போது அதனை 16 ஆக குறைக்கலாம் என்று ஒரு விவாதம் நடைப்பெற்று வருகிறது . என்னைப் பொறுத்த வரை அது தவறான வயதாகும் . பள்ளிப்படிப்பை கடந்த நிலையில் , நல்லது கெட்டது எது என புரியாத வயது. அதுவும் அவர்கள் வெளியுலகிற்கு காலடி எடுத்து வைத்து , புதிய அனுவங்களை பெறும் வயது. அதில் அவர்கள் எதையும் முடிவு செய்யும் பக்குவத்தை அடைந்திருக்க மாட்டார்கள். அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பதால்பணம் , சாதி, மொழி , இனம் ஆகியவற்றிற்கு எளிதில் வயப்படுவர்களாக இருப்பதால், இவை சார்ந்தே வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், மக்களுக்கு சேவை செய்யும் மனபக்குவம் உள்ள வேட்பாளரை தேர்ந்தெடுக்க தவறி விடுவர். நம் ஓய்வு பெற்ற தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அவர்களும் ஓட்டளிக்கும் வயதை16 வயதாக மாற்றக்கூடாது என்கிறார்.
என்ன நான் சொல்வது சரிதானே ? பதிலை பகிரவும்.
12 comments:
கொண்டாடுங்க...
கொண்டாடுங்க....
இன்றைய 80% சதவீத ஓட்டுகளை பணம், ஜாதி, மதம் ஆகியவையே தீர்மானிக்கின்றன. பதினாறோ பதினெட்டோ சீரிய சிந்தனையை தருவது கல்வியறிவு மட்டுமே. இயலக்கூடியதா என்ற விசயத்திற்கு நான் வரவில்லை. ஆனால் வாக்களர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து
அன்பின் சரவணன் - பதினாறெல்லாம் ஆக்கக் கூடாது - பதினெட்டே அதிகம் - ம்ம்ம் அரசையல்வாதிகளுக்கு வேறு வேலையே இல்லை - நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா
வாக்களிக்கும் வயது 16 என குறைக்கும் போது வெறும் சினிமா கவர்ச்சி மட்டுமே வைத்துக்கொண்டு அரசியல் நிர்ணயிக்கப்படும் நிலைமை இன்னும் தீவிரமாகும். கவர்ச்சி அரசியல் மட்டும் அதிகரிக்கும்..
நூறு சதவீத வாக்குப்பதிவு என்றைக்கு நடைப்பெறுகிறதோ அன்றைக்குத்தான் நாம் உண்மையான ஜனநாயக நாடாக மாறுவோம்..
தங்கள் கருத்து சரியே!
பதினாறாக மாற்றினால் டவுசர் பசங்க விஜய் மாதிரி ஆளுங்களுக்கு தான் ஓட்டு போடுவானுங்க...
பதினாறு வயதில் ஒட்டு போடும் உரிமையா ? கண்டிப்பாக தவறு
18-ஏ தப்பு. காலேஜ் படிக்கிற வயசுல வாக்குரிமையைக் கொடுத்து, கல்லுரியிலயும் அரசியலைப் புகுத்தி கெடுக்கிறாங்க. பழைய மாதிரி, 21 வயசே இருக்கணும்.
தங்களின் கருத்து மிக சரியே
நல்ல விஷயம் பாஸ். இந்த மாதிரி பதிவுகள் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு பதிவுகளில் கிடைக்காது. நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு என்ன செய்யலாம் என்று யோசனைகளை வைத்து அடுத்த பதிவு எழுதுங்கள். தேர்தல் நேரமாக இருக்கிறது. விழிப்புணர்வுக்கு விதை போடலாம்.
16 கூடவே கூடாது
Post a Comment