Friday, January 7, 2011

சிம் டு சிம் ...

ஒவ்வொரு விடியலும்
புதிய ஊழலின் பிறப்பிடமாய்
அதுவும்
தமிழ்நாடு சிறப்பிடமாய்...!


இந்தியாவின் எந்தக் கோடியிலும்
தெரிந்து வைத்திருக்கிறான்
கோடி ஊழலையும் ....
கேடிகளில் அரசியலையும்..
ஒரு சாமானியன்..!

ஊழலுக்கும் வர்ணமிடும் ஒரே
இந்தியன் தமிழனய்யா...
என்னடா இது
காச அள்ளி வீசுறான்னேன்னு
பார்த்தேன்....
நம்ம காச வாங்கி இவனுக்கு
எதுக்கு ஓட்டுப்போடணும்
இப்ப புலம்புறான்
இவனும் தமிழன்னய்யா...!

எது நடந்தாலும்
காந்தி அப்படியே
சிரிக்கிறார் கரன்சியில்...
காந்தியம் செத்தது தெரியாமல்...!

புகைவண்டி சென்றபின் தான்
தெரியும்
சட்டையில் படிந்த கரி...
ஆனால்
ஒவ்வொரு தடவையும்
தேர்தல் ரயில் செல்லும் போதும்
சட்டைக்கரை தெரியாமலே போகிறது..!

ஆச்சரியம் ஒன்றுமில்லை
இடது பெருவிரல் மை
படும் முன்னே
வலது கை கரையாகிறது
அரசியல் வாதியின் கரன்சியில்...!


எது எப்படியோ போகிறது
இலவச கால் அரைமணி நேரமாம்
சிம் டூ சிம் டாக் டைம் பிரியாம்
என போசியே மறக்கிறான்
எல்லாவற்றையும்...!

9 comments:

Chitra said...

எது நடந்தாலும்
காந்தி அப்படியே
சிரிக்கிறார் கரன்சியில்...
காந்தியம் செத்தது தெரியாமல்...!


......காலங்கள் மாறும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டியதுதான். :-(

pichaikaaran said...

எதற்கும் ஒரு முடிவு உண்டு

Philosophy Prabhakaran said...

அது மட்டுமா... கிரிக்கெட் பார்த்து மறக்குறோம்... சினிமா பார்த்து மறக்குறோம்... நடிகையின் இடுப்பை பார்த்து மறக்குறோம்... இன்னும் நிறைய இருக்கு...

சென்னை பித்தன் said...

”மறப்போம்,மன்னிப்போம்” என்பதுதானே தமிழனின் கொள்கை!நாம திருந்த மாட்டோம்!

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

வருந்த வைக்கும் உண்மை !

http://rkguru.blogspot.com/ said...

good post.....

arasan said...

அருமையான வரிகள் ...
நல்ல சிந்தனை ....
இனியும் திருந்த மனமிருக்கா பாப்போம்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

.....காலங்கள் மாறும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டியதுதான். :-(
எதற்கும் ஒரு முடிவு உண்டு .
அது மட்டுமா... கிரிக்கெட் பார்த்து மறக்குறோம்... சினிமா பார்த்து மறக்குறோம்... நடிகையின் இடுப்பை பார்த்து மறக்குறோம்... இன்னும் நிறைய இருக்கு...
மறப்போம்,மன்னிப்போம்” என்பதுதானே தமிழனின் கொள்கை!நாம திருந்த மாட்டோம்!
வருந்த வைக்கும் உண்மை !
good post.....

அருமையான வரிகள் ...
நல்ல சிந்தனை ....
இனியும் திருந்த மனமிருக்கா பாப்போம்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.

Post a Comment