Tuesday, January 25, 2011

பாலா திருமணம்


மதுரையில எங்க பாலா கல்யாணம் அனைவரும் வாங்க... வாங்க... வாழ்த்தி விட்டு செல்லுங்கள். 

மதுரையின் சோலையழகுபுரம் பாலாவின் திருமணம் நாளை காலை பத்துமணியளவில் சந்திரா குழந்தை கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அனைத்து பிளாக்கர்களும் வருகை தந்து திருமணத்தை சிறப்பித்து தரும்படி மதுரை பிளாக்கர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன். வாரமுடியாத அன்பு நெஞ்சங்கள் இப்பதிவின் மூலம் தங்களின் வாழ்த்தை தெரிவிக்கலாம்.இன்று மாலை சீனா அய்யா, அவரின் துணைவியார்,கார்த்திகைப்பாண்டியன்(கா.பா) ,சிரிதர் மற்றும் நான் நிச்சியார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அருமையான விருந்து . நாளை மெனுவையும் சிரிதர் பார்த்து வைத்துள்ளார். உணவு பலமாக இருக்கும் என்று நம்புவோம் என்று என் தொப்பையை பார்த்தார். கா. பா. நாளை கல்லூரியில் கலை நிகழ்ச்சி என்பதால் விரைந்து சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் இரவு உணவு தயாரானது.பாவம் வடை போச்சு என்று சிரிதர் வருத்தப்பட்டார். பின்பு இரவு ஒன்பது மணி வாக்கில் பாலாவிடம் விடைபெற்று சென்றோம். அனைத்து பிளாக்கரும் வர வேண்டும் எனஅன்பு வேண்டுகோள் வைத்துள்ளார். நீங்களே பாருங்க கீழே எப்படி இரு கரம் கூப்பி நம்மை அழைக்கிறார் என்று. அதற்காகவாது அனைவரும் வந்து சேரவும் . காலை ஒன்பது மணிக்கு சீனாய்யா வீட்டில் ஒரு சிறப்பு கலந்தாய்வு நடைபெறலாம் . நேசன் வருகை புரிகிறார் . எனவே, இலக்கியம் மிக்க திருமணமாக இருக்கும்.
பாலா அனைத்து வளங்களும் , செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.


திருமண மண்டபம் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ளது. தியாகராசர் கலைக் கல்லூரி முன்பு உள்ளது. தவறாமல் கலந்து கொண்டு வாழ்த்தவும். கரைக்குடி ஆர்.வி. சந்துரு , அழகு பாண்டி நாளை திருமணத்திற்கு வருகை தருகின்றனர்.


14 comments:

Unknown said...

பாலக்குமார் மற்றும் சக்தி தேவி ஆகியோரின் இல்வாழ்க்கை இனிதே அமைந்திட ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் மலர்க்கொத்து வாழ்த்துக்கள்..

Unknown said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் பாலா சார்..

Philosophy Prabhakaran said...

அவர்தான் சீனா அய்யா என்று தெரிந்துக்கொன்டத்தில் மகிழ்ச்சி...

Rathnavel Natarajan said...

Heartiest Blessings.
N.Rathnavel & Smt N.R.Uma Gandhi.

சுவாமிநாதன் said...

பாலக்குமார் மற்றும் சக்தி தேவி ஆகியோரின் இல்வாழ்க்கை இனிதே அமைந்திட எல்லாம் வல்ல அந்த பழனி ஆண்டவனை வேண்டி கொள்கிறோம்

MANO நாஞ்சில் மனோ said...

பாலாவிற்கு எனது மனமார்ந்த கல்யாண நாள் வாழ்த்துக்கள்...
இன்று போல் என்றும் வாழ்க சுகமுடன் வளமுடன்....

geethappriyan said...

மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

பாலாவுக்கும் சக்திதேவிக்கும் இந்த ஜிஎம்பி-யின் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

சிவகுமாரன் said...

My Best Wishes

cheena (சீனா) said...

ஆகா ஆகா சரவணன் - கலக்கிட்டீங்க - இன்று திருமணம் சிறப்பாக நடைபெற்றது - நேசமித்ரனுடனான சந்திப்பும் வெகு சிறப்பாக நடைபெற்றது - மதுரையில் இரு புதிய பதிவர்கள் மணிவண்ணன மற்றும் பிரகாஷ் குமார் கல்ந்து கொண்டனர். சிவகாசி அன்பு மதியும் வந்திருந்து மகிழ்வித்தான். எல்லாம் நீங்க இடுகை இட்டு ஆரம்பிச்சு வச்சது தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

CS. Mohan Kumar said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் பாலா..

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவர் பாலாவின் திருமணம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. இங்கு மதுரைப் பதிவர்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அன்பு சொராவாணன் அவர்களுக்கு என் பெயர் ஸ்ரீதர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Balakumar Vijayaraman said...

மணவிழாவிற்கு வந்து சிறப்பித்த, இங்கு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் உளம்கனிந்த நன்றி.

Post a Comment