Tuesday, January 25, 2011

முதல் தேசியக் கொடி

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்றோம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சுதந்திர இந்தியாவில் டெல்லியில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தமிழகத்தில் உருவாக்கப்பட்டது என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  இந்திய விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு அளவிட முடியாதது என்பதை அனைவருக்கும் தெரியும். பெரிய போராட்டங்கள் மட்டுமின்றி நுட்பமான விஷயங்களில் கூட தமிழகம் அதன் பங்களிப்பை பெரிதும் வழங்கியுள்ளது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி.

   ஸ்கிரீன் பிரிண்டிங் என்ற தொழில் நுட்பம் அவ்வளவாக பரவாத காலம் அது. அப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆர். வெங்கடாசலம் என்பவர் வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் பட்டுத் துணியில் ஸ்கிரீன் பிரிண்டிங் செய்து வந்தார்.தரமாக செய்து கொடுத்ததால் இவ்ருக்கு ஆர்டர்கள் குவிந்தன. அந்த காலகட்டத்தில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கும் காலம் நெருங்கி வந்தது.

     சுதந்திரம் பெற்றதும் நாடு முழுவதும் கொடியேற்ற வேண்டும் . அதற்கு ஆயிரக்கணக்கான தேசியக் கொடிகள் தேவைப்பட்டது. இதற்கானக கொடி தயாரிக்கும் நிறுவனங்களூக்கு தகவல் தெரிவித்தனர். இத் தகவலை குடியாத்தம்வெங்கடாசலம் அவர்களுக்கு அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜசானி என்பவர் தெரிவித்தார். தனக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று அந்த கொடி தயாரிப்பு ஆர்டரை வெங்கடாசலம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

 சுதந்திர தினத்தன்று நாடெங்கும் பறக்க விட ஒரு கோடி கொடிகளை வெங்கடாசலம் தயாரித்து கொடுத்தார்.1947 ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி நள்ளிரவு கடிகாரம் 12 முறை அடித்து ஓய்ந்ததும் , டில்லியில் கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் நேரு பேசினார். உலகமே உறங்கி கொண்டிருக்கும் இந்த இரவு நேரத்தில் இந்தியாவுக்கு விடிகிறது. சுதந்திர இந்தியா பிறந்து விட்டது என கணீர் முழக்க மிட்டார்.

டெல்லி பாராளுமன்ற மைய மண்டபத்தில் மவுண்ட் பேட்டன் பிரபு உள்ளிட்ட ஆங்கிலேய தலைவர்களும் , மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இந்திய தலைவர்களும் கூடி நின்றனர். சுதந்திர இந்தியாவில் தேசியகொடியை மைய மண்டபத்தில் நேரு ஏற்றினார்.அந்தக் கொடி பிறந்தது குடியாத்தத்தில்!


     மறு நாள் காலை 8.30 மணிக்கு டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்தியா கேட் முன்பு ஆயிரக்கணக்கான மக்களின் உணர்ச்சிகரமான கர கோஷங்களுக்கு இடையே பிரிடிஸ் கொடி இறக்கப்பட்டு , குடியாத்தத்தில் தயாரான இந்திய தேசியக் கொடிஏற்றப்பட்டது. அன்றே இந்தியாவின் பிரமாண்டமான டெல்லி செங்கோட்டையிலும் நம் தேசியக்கொடி ஏறியது. இதன் மூலம் சுதந்திர இந்தியாவின் முதல் தேசியக் கொடியை தயாரித்து அளித்த பெருமையை தமிழகம் பெற்றது. 

8 comments:

Chitra said...

சுவையான தகவல். பகிர்வுக்கு நன்றிங்க.

Unknown said...

உண்மையிலேயே தெரியாத தகவல் தான், குடியாத்தம்வெங்கடாசலம் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்..

Unknown said...

உங்களுக்கும் இனிய குடியரசு தின விழா நல் வாழ்த்துக்கள்../

Rathnavel Natarajan said...

Informative Blog.

MANO நாஞ்சில் மனோ said...

வந்தே மாதரம்....

G.M Balasubramaniam said...

இந்த செய்தியை ஃபேஸபுக், ட்வீட்டர், மற்றும் கூகிள் பஸ் போன்றவற்றின் மூலம் பகிர்ந்து கொண்டால் நிறைய பேருக்குச் சென்றடையும். செய்திக்கு நன்றி.

சிவகுமாரன் said...

குடியாத்தத்தின் பெயரை கொடியாற்றம் அல்லது கொடியேற்றம் என்று மாற்றலாமே. ஒருவேளை அதுதான் குடியாத்தமாக மருவி விட்டதோ ?

cheena (சீனா) said...

ஆகா அரிய தகவல்- பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா

Post a Comment