Thursday, January 20, 2011

நேசனுடன் ஒரு ஜல்லிக்கட்டு ...!

 நேசனுடன் ஞாயிறு மிகவும் பயனுள்ள இலக்கிய சந்திப்பாக இருந்தது. நேசன் மிகவும் மாறியுள்ளார். முதுமையல்ல , அது இலக்கிய முதிர்ச்சி. என்னைப்போன்ற வாசகனையும் திரும்பி பார்க்க செய்துள்ளது அவரின் புத்தக வெளியீடு. அவரின் புத்துணர்ச்சி இன்றும் குறையவில்லை. வார்த்தைகள் அவரைத் தேடி வந்து விழுகின்றன. வார்த்தைகளும் அவரின் கவிதைமூலம் மகுடம் சூடிக்கொள்கின்றன. தமிழ் அவரிடம் விளையாடுகிறது என்பதை விட வாசம் செய்கிறது என்பதே சரியானது. கோணங்கியுடன் அவரின் நட்பு மிகவும் வியப்பளிக்க வைக்கிறது. அவரின் பேச்சு என்னை கோணங்கியை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து விடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. கோணங்கி தமிழ் எழுத்துலகத்திற்கு மிகவும் கடினமான வாசிப்பு கொடுத்துள்ளதால், அவரின் புத்தகத்தினை வாசிக்க இன்னும் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பார் கா.பா.




நேசன் என்னைப்போன்ற புரியாத , எளிய வாசகனையும் தன் எழுத்துக்கள் போய் சேர வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். தமிழ் எழுத்துலகம் பாலியல் சார்ந்த தன் எழுத்து முறையினை அல்லது பார்வையினை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். ஒரு பெண்ணை அவளின் உடல் சார்ந்த துன்பங்களைப்போசும் போது , பால் சார்ந்தவை மட்டுமே பேசப்படுகிறது என ஆதங்கப்படுகிறார். ஏன் மேனோபாஸ் சார்ந்த அவளின் உணர்வுகளைப் பதியவில்லை என சொல்லி , நம்மை இது சார்ந்து எழுத தூண்டுகிறார்.



  கரைக்குடி சந்துரு , அழகுபாண்டி ஆகியோர் நேசனுடன் சரிக்கு சரியான இலக்கிய விவாதங்களை முன் வைக்கின்றனர். அவர்கள் புத்தகங்களை அடுக்கி , கதைகளை ஒப்புமைப்படுத்தி , அதில் உள்ள பாத்திரங்களை அலசி , அதில் இதனை சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அலசி ஆராயும் அழகு , பால மேடு ஜல்லிக்கட்டை விட படு பயங்கரமாக இருந்தது.

      எழுத்தாளர் திரிசந்தழகுவுடன் அவரின் விவாதம் நமக்கு படைப்பின் மீது தாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அவர்கள் சுஜாதா, எஸ்.ரா., சாரு , கோணாங்கி ,வண்ண தாசன், ஜெயமோகன் , ஜெயகாந்தன் என பலரின் படைப்புகளை பத்தி பத்தியாக அலசினர். அதனாலே ’நான் இப்போது ஒரு பத்தி எழுத்தாளனைப்போல எழுத ஒரு விசயம் கிடைத்தது ,அதனை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.


       பாலமேடு செல்லும் வழியின் இயற்கை அழகு நேசனை கவர்ந்து இருக்கும் என நினைத்து இருந்தேன். அதற்கும் ஒரு கவிதை படைத்தார். மொட்டைத் தென்னை மரம் , தலையிழந்த மானுடனாக எனக்குப் பட்டாலும் அவரின் பார்வை வித்தியாசமாகவே இருந்தது. தன் பயணத்தை அவர் தன் பிளாக்கில் சொல்லுவார் அப்போது அதனை சுவைப்பட ரசிப்போம். பப்பாளியை நறுக்கி , அதில் உப்பு தூள், மிளகாய் தூள் தூவி சுவைக்கூட்டுவதுப்போல , நமக்கு அவரின் பேச்சில் உவமை,உவமானங்களைத்தூவி அனைவரையும் கவருகிறார்.




  மாலையில் இகோ பார்க்கில் சந்திப்பு , இருப்பதை நினைவு படுத்தவே , அனைவரும் , திரிச்சந்தழகு வீட்டில் மதியம் உணவு அருந்தி விட்டு , கிளம்பினோம். மாலை சந்திப்பின் முக்கியத்துவம் கருதி கா.பா அன்று மிகவும் மவுனமாகவே இருந்தார். எஸ்.ரா. பற்றி விமர்சனங்களின் போதும் அவர் அமைதியாக இருந்தார். ஒரு எழுத்தாளன் எப்போது நீர்த்துப்போவான்...? என்ற கேள்வியுடன் நேசன் அனைவரையும் மடக்க... இலக்கிய பேச்சு நீண்டது. பால மேடு இலக்கிய பேச்சு எங்களை மாடு பிடிப்பதைவிட கஷ்டமான வினாவை கேட்டு முட்டித்தள்ளியது.  

     அடுத்த இடுகையில் நேசன் சொன்னதை சொல்லுகிறேன் . தங்களும் பதில் சொல்லுங்களேன்... !  

11 comments:

Philosophy Prabhakaran said...

ரொம்பவே சீரியஸா இருக்கு பதிவு... நகைச்சுவையை எதிர்பார்த்து ஏமாந்தேன்... அதுசரி, இலக்கிய சந்திப்புன்னா சரக்கு இருந்திருக்கனுமே...

Unknown said...

புதியது படைக்கும் ஆர்வம் குறைகையில் எழுத்தாளன் நீர்த்துப்போவான்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நேசனை வாசிப்பதே ஒரு அனுபவம் தான் .அதிலும் சந்திப்பு ...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தன்னுள் உள்ள காதல், மனிதம் போன்ற மெல்லிய உணர்வுகள் மரக்கத் தொடங்கும் போது எழுத்தாளன் எழுத மறந்து போவான், நீர்த்து போவான் நேசன் ஒரு அதிசய மனிதன்

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றி

Chitra said...

பகிர்விற்கு நன்றி...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//திரிசந்தழகு//
பெயர் சரியாக ஞாபகம் இல்லையென்றால் கேட்டிருக்கலாமே.அவர் திருச்செந்தாழை .

பத்மா said...

wow ....
thanks for sharing

நேசமித்ரன் said...

மிக்க நன்றி சரவணன் . மிக நல்ல தருணங்களில் நானும் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி .திருச்செந்தாழை,சந்துரு, அழகுராஜா ,தமிழ் பறவையுடன் மதுரை பதிவர்களை சந்தித்தது புதிய அனுபவம்

vivasayee said...

சரவணன்.
இந்த பதிவில் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பெயரை விட்டு விட்டீர்களே?

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அருமையான சந்தர்ப்பத்தினை நழுவ விட்டு விட்டேன் - ம்ம்ம் - இன்னும் ஒரு வாய்ப்பு வராமலா போகும் - சந்தித்து விடுவோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment